Friday, July 13, 2018

#தமிழ்நாடு_பாடநூல்_கழகம் #Tamil_Nadu_Text_Book_Corporation

தமிழ்நாடு பாடநூல் நிறுவன அலுவலகத்திற்கு ஒரு வேலை நிமித்தமாக நேற்று செல்ல வேண்டியிருந்தது. அங்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் நூலகத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது. அற்புதமான ஆங்கில நூல்களின் மொழிப்பெயர்ப்பு தமிழில் குறைந்த விலையில் கிடைத்தது. அரசியல், பொருளாதார, வரலாற்று நூல்களை வாங்கக்கூடிய வாய்ப்பு கிட்டியது.லஸ்கி,வெயர் போன்ற அறிஞர்களின் நல்ல அரிய தமிழ் மொழி யாக்க நூல்கள் கைகளுக்கு கிடைத்தன. இந்த நூல்களை  1962ல் அச்சிட்டு இன்று வரை வெளியிட்டு வருகிறது. அக்கறையுள்ளவர்கள் பாடநூல் நிறுவன நூலகத்திற்கு வாய்ப்பிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.





#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-07-2018

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...