Tuesday, July 24, 2018

#வாழ்க்கை #தனிமை #வெறுமை

தனிமையில், வெறுமையில் காரணமேதுமில்லாத ஒரு உத்வேகம் உண்டு, அந்நிலையில் தீவிர தேடலில் அனைத்து பற்றுதல்களும் நிவர்த்தியடைகின்ற ஓர் உச்சம் ஏற்படுகிறது. ஆனால், உத்வேகத்திற்கு, ஒரு காரணம் இருப்பின் அங்கு பற்றுதல் வருகிறது. பற்றுதல் உள்ள இடம் சரியாக
இருக்க வேண்டும் ....

பெரும்பாலோர் பற்றுதல் உடையவர்களே – ஒரு நபரிடமோ, ஒரு தேசத்துடனோ, ஒரு நம்பிக்கையினடத்தோ, ஒரு கோட்பாடுடனோ பற்றுதல் உடையவர்கள். நமது பற்றுதலுக்கு காரணமான பொருள் நீங்கிவிட்டாலோ அல்லது அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டாலோ, நாம் நம்மை வெறுமையாக, முழுமையற்றவராக உணர்கிறோம், இந்த வெறுமையைத்தான் நாம் எப்போதும் ஏதாவது ஒன்றைக்கொண்டு நிரப்ப முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம் – அப்படி நிரப்பும் அப்பொருள் மீண்டும் நம் உத்வேகத்திற்கு விஷயபொருளாகிவிடுகிறது.


#Life 
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-07-2018

.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh