Tuesday, July 31, 2018

“கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்”




என்ற வரிகளை பலர் கம்பராமாயணத்தின் வரிகளாக கருதுகின்றனர். ஆனால் இவ்வடிகளை இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள் தான். அருணாசலக் கவிராயர் தில்லையாடி என்ற ஊரில் 1634இல் பிறந்தார். தருமபுர ஆதின வித்வானாக இருந்தார். அம்பலவானக் கவிராயரிடம் தமிழ் பயின்றார். இவரிடம் தான் கம்பராமாயணம் நன்கறிந்த அறிஞராக விளங்கிய சட்டநாதபுரம் கோதண்டராமய்யர், வெங்கட்ராமய்யர் என்ற சங்கீத விற்பன்னர்கள் இராமாயணக் கீர்த்தனைகளை பயின்றனர். இராமாயணக் கீர்த்தனைகளில் அருணாசலக் கவிராயர் பாடிய அந்த வரிகள் வருமாறு.

“விடங்கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகுப் போலும்
மடங்கொண்ட பாந்தள் வாயில் 
பற்றிய தேரைப் போலும்
திடங்கொண்ட ராம பாணம்
செருக்களத் துற்ற போது
கடன்கொண்ட நெஞ்சம் போலும்
கலங்கினான் இலங்கை வேந்தன்! ”

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2018

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...