Wednesday, August 1, 2018

மாநில சுயாட்சி நூல் தொகுப்பு

மாநில சுயாட்சி என்ற என்னுடைய இரண்டு தொகுப்பு நூல்கள் உயிர்மை பதிப்பகத்தால் விரைவில் வெளியிடவிருக்கிறது. இந்த நூலில் ராஜமன்னார் கமிசனின் அறிக்கையும், இந்தியாவில் இதுவரை மத்திய, மாநில உறவுகளை குறித்து ஆய்வு செய்த குழுக்களின் அறிக்கையின் விவரங்கள், இது குறித்தான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தமிழக சட்டமன்றத்தில் நடந்த விவாதங்கள் என விரிவான தரவுகளோடு வெளிவருகின்றது.

இதை நான் உயிர்மை பதிப்பகத்தின் மூலம் வெளியிடுகின்றேன் என்று நண்பர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் உறுதியளித்து அதற்கான பணிகளை அவருடைய பதிப்பகம் மேற்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய நூல்கள் அனைத்தும் உயிர்மையே வெளியிட்டு வருகின்றது. தகவலுக்காக நண்பர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடியில்கண்ட State Autonomy என்ற ஆங்கில நூலை நானும், பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வமும் தயாரித்து வைகோ அவர்களிடம் அளித்து காஞ்சிபுரத்தில் நடந்த மதிமுக மாநாட்டில் இராமகிருஷ்ண ஹெக்டே வெளியிட்டார்.

#மாநில_சுயாட்சி
#உயிர்மை
#State_autonomy
#uyirmai
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.


01-08-2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...