Wednesday, August 22, 2018

நாடாளுமன்ற உறுப்பினர்கள்....

இந்தியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி மொத்தமாக 175 எம்.பி.க்கள், நாடாளுமன்ற கூட்டத் தொடர் விவாதத்தில் ஒப்புக்கு ஒரு கேள்வி கூட கேட்காமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல பார்லிமென்ட் பெஞ்சைத் தேய்த்துவிட்டு சென்றுள்ளனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், விவாதங்களில் பங்கேற்று கேள்விகள் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா என்ன? 
இப்படியான தகுதியற்றவர்களையும், கேள்வி ஞானமற்றவர்களையும், பிரச்சனைகளின் தன்மையை அறியாதவர்களையும், மக்கள் நலனில் அக்கறை கொள்ளாதவர்களையும் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிக் கொண்டே இருங்கள். நல்லவர்களையும், களப்பணியாளர்களையும், நேர்மையாக உளமாற மக்கள் பணி செய்பவர்களையும் நாட்டிற்கு எதற்க்கு .....? ஏனெனில் தகுதியே தடை.

#தகுதியே_தடை
#பொது_வாழ்க்கை
#Public_life
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-08-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...