Friday, August 17, 2018

அடல்ஜியின் கவனிக்கவேண்டிய கல்கி பேட்டி....



————————————————
கேள்வி: இந்தியாவிலேயே மிகவும் பிரபலமான, எல்லா மக்களுக்கும் தெரிந்த ஒரே தலைவர் இந்திராகாந்தி தான் என்றும் அவரால் தான் இந்தியாவை ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்றும் கூறுகிறார்களே!
 
பதில்: இந்தியாவின் ஒற்றுமை எந்த தனி நபரையோ அல்லது எந்த கட்சியையோ நம்பி இல்லை.இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தங்களை இந்த தேசத்துடன்ஐக்கியப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.ஒவ்வொரு இந்தியனுடைய பொறுப்புணர்வும் தேசப்பற்றுமே இந்திய ஒற்றுமையை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன.தனிப்பட்ட தலைவர்கள் வருவார்கள் ; போவார்கள். அவர்களை நம்பி இந்தியாவின் ஒற்றுமையும்  ஒருமைப்பாடு இல்லை.

 1982ம் வருடம் பிப்ரவரி மாதம் திரு.வாஜ்பாயீ அவர்களை "கல்கி"க்காக நன்பர் ப்ரியன் கண்டபேட்டியிலிருந்து....
*******************
மரணம் பற்றி அடல்ஜியின் கம்பீரமான கவிதை

மரணத்திடம் கம்பீரம்

“மரணத்தின் வயது என்ன?

இரண்டு கணம் கூட இல்லை.

வாழ்க்கையின் தொடர்ச்சிகள்

இன்று நேற்று வந்தவை அல்ல.

 

வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.

மனதைத் தொலைத்து விட்டு

மீண்டும் நான் வருவேன்.

கேவலம் மரணத்திடம்

ஏன் பயம் கொள்ள வேண்டும்?

 

மரணமே!

திருட்டுத்தனமாக

பதுங்கிக்கொண்டு வராதே.

என்னை எதிர்கொண்டு

நேரடியாக பரிட்சித்துப் பார்.”

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...