Thursday, August 16, 2018

*மாமனிதர் வாஜ்பாயும், மதுரை சித்திரை வீதிகளும்.*



------------------------
மதுரையில் 04.05.1986இல் நடந்த டெசோ மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், மறுநாள் 5ம் தேதி காலை  7 மணிக்கு காங்கிரசின் மூத்த தலைவராக விளங்கி, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் (Secretary General) ஆகவும் பதவி வகித்த இருந்து அந்த கட்சியில் இருந்து விலகிய எச்.என்.பகுகுணாவுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனத்துக்கு அழைத்துச் சென்றேன்.மீனாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு, கோவிலைச் சுற்றியுள்ள 4 சித்திரை வீதிகளையும் நடந்தே செல்லலாம் என்று வாஜ்பாய் கூறியதால் சுற்றி வந்தபோது, கிழக்குச் சித்திரை வீதியின் புது மண்டபம் அருகில் வளையல்களும், மதுரை மீனாட்சி அம்மனின் ஸ்பெஷல் குங்குமம் என்று சின்ன தகர டப்பியில் அடைத்து விற்பனைக்கு இருந்த குங்குமத்தையும் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார். பின்னர் கிழக்கு சித்திரை வீதியினைக் கடந்து தெற்கு சித்திரை வீதியில் கார் ஏறி திரும்பிய நினைவுகள் காலச்சக்கரங்கள் வேகமாக சுழன்றாலும் இன்றைக்கும் அடியேன் மனதில் படிமங்களாக உள்ளது. ஆளுமையான வாஜ்பாயை குறித்து என்னுடைய விரிவான பத்தியோடு பிபிசி இணைய இதழில் வரவிருக்கிறது.




#வாஜ்பாய்
#Vajpayee
#எச்என்பகுகுணா
#மதுரை
#Madurai
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-08-2018.
(படம் : மதுரை( 04.05.1986)மாநாட்டில் 
கலைஞர, வாஜ்பாய், என.டி.ராமா ராவ்,
எச்.என்.பகுகுணா, பழ. நெடுமாறன் )

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...