Tuesday, August 21, 2018

ஏதுமற்ற நிலையில்......



————————————————
நீங்களாகவே பின்னிக்கொண்ட வலையிலிருந்து, யாராலும் உங்களை விடுவிக்க முடியாது. அது போதை வஸ்துக்களாலும், எந்த குருவாலும், மந்திரங்களாலும் முடியாத காரியம். நான் உட்பட யாராலும், அதிலும் குறிப்பாக என்னால் முடியாத காரியம் அது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் துவக்கம் முதல் இறுதிவரை விழிப்புணர்வோடு இருக்கக் கூடியதுதான். நடுவே தடம் மாறிவிடலாகாது.மனிதர்கள் தாமே உருவாக்கிக் கொண்ட வலைப்பின்னல்களின் கட்டுமானத்தையும், அதன் இயல்பையும் உணரக்கூடிய நுண்ணிய விழிப்புணர்வு இல்லாமல், மனம்  அமைதி கொள்வதற்கான சாத்தியமே இல்லை. 

பல நூற்றாண்டு காலப் பரிணாம வளர்ச்சிக்குப் பின்னரும், நாம் இன்னமும் காட்டுமிராண்டிகளாகவே வாழ்கிறோம்.  அடுத்தவரைத் துன்பத்தில் ஆழ்த்தியும், கொன்றும், நம்மையே அழித்துக் கொண்டும்தான் இருக்கிறோம். விரும்பியபடி வாழ்வதற்கான முழு சுதந்திரம் உள்ளது. அதுவே உலகையும் பாழாக்கிவிட்டது. விருப்பப்படி வாழ்வது சுதந்திரமல்ல. பிரச்சனைகளிலிருந்தும், கவலைகளிலிருந்தும், அச்சங்களிலிருந்தும், இதயத்தின் வலிகளிலிருந்தும், பலநூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வரும் முரண்களிலிருந்தும் விடுபடுவதே மெய்யான சுதந்திரநிலை. அந்த சுதந்திர நிலை தன்னையறிதல் மூலமே தொடங்குகிறது. 

−ஜே கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...