Friday, July 20, 2018

காவிரி .....

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. ஒரு 30, 35 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, காவிரியில் வெள்ளப்பெருக்கில் வரும் தண்ணீரை சேமித்து வைக்க மேட்டூர் முதல் பூம்புகார் வரை 45 தடுப்பணைகளை கட்டலாம் என்று திட்டம் தீட்டப்பட்டது. காலம் தான் கடந்துவிட்டது. திட்டம் அப்படியே உள்ளது. 

84 வருசமா. மேட்டூர் அணையைத் தூர்வாரத் துப்பில்ல...!
அதாவது, 83 வருஷம் செஞ்சமாதிரி, 84ம் வருடமாகிய 2018ம் ஆண்டிலும் 
நாங்கள் தூர்வாரவில்லை என்பதை இதைவிட அழகா எப்படிச் சமாளிக்க முடியும்.

பொதுப்பணித்துறை வல்லுனர்களின் கூற்றுப்படி, முழுவதுமாகத் தூர்வாரினால் கூடுதலாக 20டி.எம்.சி .தண்ணீரைத் தேக்கலாம். முழுவதும் செய்யவேண்டாம்,, 50% பணிகளை முடித்தால் கூட 10 டி.எம்.சி. தண்ணீரைக் கூடுதலாகச் சேமிக்கலாம்..

தூர்வாரத் துப்பில்ல.. காண்ட்ராக்ட்ல மட்டும் கவனமா இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்!

பிறகு காவிரியில் தண்ணீர் வரவில்லை என்று நாம் தலையில் அடித்துக் கொண்டால் என்ன செய்வது? ஆட்சியாளர்களும் கவனிப்பதில்லை, அதிகாரிகளுக்கும் சிந்தனையில்லை. தகுதியான நபர்கள் தான் ஆட்சிக்கு வருவதில்லையே. 

காவிரியில் வெள்ளத் தண்ணீர்  வீணாகச் செல்கிறது. வயிறு எரிகிறது. தண்ணீரை வீணடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். நாமும் வேடிக்கை பார்க்கின்றோம். காலம் கடக்கிறது.
#காவிரி
#KSRadhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
20-07-2018


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...