Thursday, July 12, 2018

#கல்மண்டபங்கள் #Stone_Choultry

மதுரை - ஸ்ரீவில்லிப்புத்தூர் - ராஜபாளையம் - தென்காசி சாலை, மதுரை - விருதுநகர் - கோவில்பட்டி - திருநெல்வேலி நெடுஞ்சாலை, மதுரை - அருப்புக்கோட்டை - எட்டையபுரம் - தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை, மதுரை - இராமநாதபுரம் - இராமேஸ்வரம் சாலை, மதுரை - தேனி சாலை, மற்றும் மதுரை - மேலூர் சாலையோரத்தில் ;இந்த படத்தில் உள்ளது போல கல்மண்டபங்களை காணலாம் .

 அந்த காலத்தில், பாண்டிய மன்னாரகளால் நடந்து நெடுந்தூரம் பயணம் செய்பவர்களுக்காக இவை யாவும் கட்டப்பட்டன. இந்த கல்மண்டபத்தில் உணவு, தண்ணீர் ஆகியன வழங்கப்படும். மேலும் மக்கள் ஓய்வெடுக்கவும், யாருக்கேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் வழங்கக்கூடிய கேந்திரங்களாகவும் இது இருந்தன. 


இப்படி,13வது நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்டு துவங்க பட்டன. எவ்வித சேதாரமில்லாமல் இன்று வரை இவை வலுவாக இருக்கிறது. ஆனால் முறையான பராமரிப்பில்லாமல் இந்த மண்டபங்களை பயன்படுத்த முடியாதவாறு செடிகள், மரங்கள் என வளர்ந்துள்ளன. இந்த நெடுஞ்சாலைகளில் கணக்கெடுத்துப் பார்த்தால் இதுபோல சுமார் 100 மண்டபங்களுக்கு மேல் இருக்கும். மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இத்தகைய மண்டபங்கள் அதிகமாக கட்டப்பட்டதாக செய்திகள் உண்டு. மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னர் மற்றும் இராணி மங்கம்மாள் தங்களின் தனிப்பார்வையில் இந்த மண்டபங்களை கட்டியதாகவும் வரலாற்றுச் செய்திகள். இந்த மண்டபங்களில் சித்தர்கள் இருந்ததாகவும் ஓர் நம்பிக்கை. அக்காலத்திலேயே தொலைநோக்குப் பார்வையோடு கட்டப்பட்டுள்ள இந்த மண்டபங்கள் சேதாரமடைந்துள்ளது நமது கவனக்குறைவால் தான். இன்றைக்கு ஒரு வீட்டை கட்டினால் 50 ஆண்டுகளுக்கு மேல் இருக்காத நிலையில், வெறும் கற்கலாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கட்டிடம் பல நூற்றாண்டுகள் கடந்து கம்பீரமாக நம் முன் இருக்கும் இத்தகைய கட்டிடங்களை பாதுகாப்பது நம் கடமை. வரலாற்று அறிஞர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி இதை குறித்தான செய்தியை சொல்லியுள்ளார். அந்த சாலைகளில பயணிக்கும்போது இந்த மண்டபங்களின் அவல நிலையை பார்த்தால் வரலாற்றை புறக்கணித்து இழிவுப்படுத்துகிறோமோ என்ற மனவேதனை  எழுகின்றது. 


#கல்மண்டபங்கள்

#Stone_Choultry

#KSRadhakrishnan_Postings

#KSRPostings

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

12-07-2018



No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...