Tuesday, December 1, 2020

 



ஸ்ரீதேவி இருக்கும் இந்த படம் 1989 தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்த
போது சிவகாசியில் எடுக்கப்பட்டது
என நினைவு . அவரின் தந்தையார் சிவகாசிதொகுதியில் போட்டியிட்டார். நான் கோவில்பட்டியில் போட்டி
யிட்டேன்.அச்சமயம் ஓர் உறவினர் நிகழ்ச்சியில்.....

நடிப்புப் பேரருவி என்று இயக்குனர் பாலுமகேந்திராவால் போற்றப்பட்ட ஸ்ரீதேவியின் 57-வது பிறந்தநாள் இன்று. 100 ஆண்டுகால இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளை எப்போது பட்டியலிட்டாலும் அதில் முதன்மை இடத்தில் இருக்கக்கூடியவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கிட்டத்தட்ட 57 ஆண்டுகாலம் இந்திய சினிமாவை தன்னுடைய நடிப்புத் திறமையால் ஆட்சி செய்தவர்.

ஸ்ரீதேவி பிறவிக் கலைஞர் அல்ல.

தமிழைப் போல இந்தியில் ஸ்ரீதேவிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு உடனடியாக கிடைத்துவிடவில்லை. அங்கு அவர் அறிமுகமான ’சோல்வா சாவண்’ படம் படுதோல்வியடைந்தது. எனினும் துவண்டுவிடாமல் அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், இந்தி திரையுலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாதனை நாயகியாக வலம் வந்தார்.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
13.08.2020

#ksrposts

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்