Sunday, December 11, 2022

கலைஞர் ஆட்சியில் (1973)எட்டயபுரம் பாரதி பிறந்த இல்லம் நினைவில்லமானது. கலைஞர் பெயர் நினைவுப் பலகையைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்*. *திமுகவிலிருந்து என்னை இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த நேரத்தில் இதையும் சொல்ல வேண்டும்*



—————————————
இன்றைக்குப் பாரதி பிறந்த நாள்.  கலைஞர் ஆட்சிக் காலத்தில் 12-5-1973 அன்று எட்டயபுரம் பாரதி பிறந்த இல்லம் நினைவில்லமானது. அப்போது வடிக்கப்பட்ட கலைஞர் பெயருடன் கூடிய நினைவுப் பலகையைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். 29 ஆண்டுகளுக்குப் பிறகு நான் முயற்சி செய்து அதைத் திரும்பவும் வைத்தபோது கலைஞர் என்னைப் பாராட்டினார். இந்த பகுதியில் எம்.எல்.ஏ., எம்.பி, அமைச்சர் என திமுகவினர் பதவிகளில் இருந்தவர்களுக்கு இது எளிதான காரியமாக இருந்திருக்கலாம். என்னைப் போன்ற சாமானியனுக்கு இது எளிதல்ல. இதை பல ஆண்டுகள் ஆட்சில் இருந்தும் எந்த வேடிக்கை மனிதரும்!?;எவரும் கண்டு கொள்ளவிலை. இருப்பினும் அன்றைக்கு இதற்காக மாவட்ட கலெக்டர் முதலானோரைப் பலமுறை பார்த்து கலைஞர் பெயர் பதித்த பலகையை 11-12-2009 அன்று  29 ஆண்டுகளுக்கு பின் திரும்ப வைத்தேன். நான் எந்த எதிர்பார்ப்போடும் இதைச் செய்யவில்லை.  கலைஞரின் மீது நான் கொண்டிருந்த உண்மையான அன்பினால் செய்தது. 
 அந்தப் பகுதியில் திமுகவை நான தான் வளர்த்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பலர்,  இதற்காக எதையும் செய்யவில்லை.திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த நேரத்தில் இதையும் சொல்ல வேண்டும் என்று மனதில் பட்டது. சொல்லிவிட்டேன். பெருமையாக சுட்டிக்காட்ட வேண்டு்ம் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. 

இது தொடர்பான செய்தி அப்போது  (டிச -2009)தினமணியிலும்,  ஜூனியர் விகடன் போன்ற பல இதழ்களிலும் வெளிவந்தது. தொலைக்காட்சிகளிலும் செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.

- https://www.dinamani.com/tamilnadu/2009/dec/12/பாரதியார்-வீட்டில்-காணாமல்​போன-கல்வெட்டு​29-ஆண்டுகளுக்கு-பின்-மீண்டும்-வைக்கப்பட்டது-117104.html

https://dhinasari.com/general-articles/54662-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4.html

#பாரதி_பிறந்தநாள் #எட்டயபுரம் 
#பாரதி_பிறந்த_இல்லம் #கலைஞர்

#ksrpost 
11-12-2022

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...