Saturday, December 10, 2022

#நடிகை #சுஜாதா,ஸ்ரீவித்யா

#நடிகை #சுஜாதா,ஸ்ரீவித்யா 
—————————————
இன்றைக்கு காலையில் கடற்கரை நடைப்பயிற்சின் போது மறைந்த நடிகை சுஜாதா நினைவுக்கு வந்தார். இந்த கடற்கரையி்ல் சந்திப்பதுண்டு.இன்றைக்கு அவருடைய பிறந்த நாள். நல்ல மனுஷி. அமைதியானவர். நடிகை சுஜாதாவுக்கும் ஸ்ரீவித்யாவுக்கும் வழக்கறிஞராகவும் உதவியாக இருந்துள்ளேன். 

சுஜாதா தனது இறுதிக் காலத்தில் நான் குடியிருக்கும் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் வசித்தார். வெளிப்படையாக எதையும் குறை சொல்லி பேசமாட்டார். ஸ்ரீவித்யா தன்னுடைய சிரமங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வார். 

இருவரும் தமிழ்த் திரையுலகில் நல்ல ஆளுமையான நடிகைகள். இன்னும் பல காலம் அந்த இருவரும் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். இயற்கை அவர்களைப் பறித்துக் கொண்டது. என்ன சொல்ல?

நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க

பூவுலகின் லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
பூவுலகின் லட்சியங்கள்
பூப்போன்றே வாடும்
தெய்வ சொர்க்க நிச்சயம்தான்
திருமணமாய் கூடும்
பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
பொருத்தம் என்றால் புதுப்பொருத்தம்
பொருந்திவிட்ட ஜோடி
நான் புலவனென்றால்
பாடிடுவேன் கவிதை ஒரு கோடி
#ksrpost
10-12-2022.


No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh