Friday, December 30, 2022

இப்படியாக தொடர்ந்து இரண்டு மாதங்களாக நண்பர்களின் பதிவுகளுக்கு.. மிக்க நன்றி…

இப்படியாக தொடர்ந்து  இரண்டு மாதங்களாக நண்பர்களின் பதிவுகளுக்கு.. மிக்க நன்றி…
———————————————————-
 🙏🤝👍 சிறப்பு !அருமையான அபூர்வமான வரலாற்று தகவல்கள் . மதிப்பிற்குரிய சகோதரர் கே எஸ் ஆர் அவர்கள் தமிழக ;திராவிட அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத மாபெரும் தகவல் களஞ்சியமாக திகழ்கிறார். தமிழகத்தின் அனைத்து ஜீவாதார பிரச்சனைகளிலும் அவருடைய பங்களிப்பு நிச்சயம் உண்டு.  ஈழத்தமிழர் பிரச்சினையாகட்டும் முல்லை பெரியார் பிரச்சினையாகட்டும் தமிழகத்தின் எல்லை பிரச்சினையாக இருக்கட்டும் எதுவானாலும் அவரின் முக்கிய பங்களிப்பு இருந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். சமரசம் அற்ற வாழ்வு என்பது ஒரு மனிதனின் உயர்வை எப்படி தடுக்கும் என்பதற்கு சகோதரர் கே எஸ் ஆர் அவர்களின் அரசியல் வாழ்வு ஒரு  உதாரணம் . அவருடைய அறிவை ஆற்றலை தகுதியை திறமையை முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லோரும் பயன்படுத்திக் கொள்வார்கள் ஆனால் அவருக்குரிய அங்கீகாரத்தை எவரும் வழங்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.எப்படியும் வாழலாம் என்ற நிலையிலிருந்து மாறி இப்படித்தான் வாழ வேண்டும் என்கிற நெறியோடு வாழ்பவர்கள் அரசியல் ரீதியிலான உச்சத்தை தொடுவது எத்தகைய சிரமம் என்பதை அவருடைய கடந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்வு நமக்கு தெளிவு படுத்துகிறது. ஆனாலும் இன்னும் இந்த மண் சார்ந்த மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுத்து அவர் செயலாற்றி வருவது வரவேற்கத்தக்கது .பாராட்டத்தக்கது வாழ்த்துக்கள் சகோதரா !நன்றி !-
என்றும் அன்புடன், 
துரை கருணா

+91 89393 07294

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...