Thursday, December 1, 2022

*விவசாய முதல்வர், தமிழின் முதல்வர், சமூக நீதி முதல்வர் என உண்மையாக இவரை அழைக்கலாம். திருவருட் பிரகாச வள்ளலாரின் அன்பர்*…. ஓமந்தூரார்

*விவசாய முதல்வர், தமிழின் முதல்வர், சமூக நீதி முதல்வர் என உண்மையாக இவரை அழைக்கலாம். திருவருட் பிரகாச வள்ளலாரின் அன்பர்*…. ஓமந்தூரார்
—————————————
சர்தார் வல்லபாய் படேலின் இரும்புக்கரங்கள் தான்
இதையும் செய்தன. இந்திய வரலாற்றின் இந்தப் பக்கங்களைப்பற்றிப் பேசப்படவில்லை. குறிப்புகள் கிடைப்பதில்லை.
562 சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இன்றையஇந்தியாவை சர்தார் படேல் உருவாக்கியதில் இந்தப் பக்கம்
மட்டும் அச்சிடப்படவில்லை.
 ஐதராபாத் சமஸ்தானத்திற்கு
இந்தியா இராணுவம் அனுப்பிய நாள் 12-9-1948. 
அதன் பின் 5  நாட்களில் அதாவது 18-9-1948ல்
 நிஜாம் சரணடைந்துவிட்டார்.
ஆனால் இந்திய இராணுவம் 21-10-1951 வரை 
- 3 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியது?
யாரை எதிர்த்து ?! ஏன்?
தெலுங்கனா பகுதியில் வாழ்ந்த விவசாயிகள்,சென்னா ரெட்டி மற்றும் சுந்தரய்யா தலைமையில் கம்யூனிஸ்டுகள்
பண்ணையார்களுக்குஎதிராகப் போராடி நிலத்தை கைப்பற்றி விவசாயம் செய்து
விளைந்ததை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தகுழு வாழ்க்கையை / சமதர்ம வாழ்க்கையை இந்திய இராணுவம்எதிர்த்து போராடியது.. விவசாயிகள் தங்கள் நிலங்களை மீண்டும்
பண்ணையார்களிடம் கொடுத்தாக வேண்டும் என்று ஆணையைஎதிர்த்து போரிட்டார்கள். அதுவும் இராணுவப் பயிற்சி இல்லாத
விவசாயிகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக  போராடி இருக்கிறார்கள்.
இந்திய இராணுவம் 21-10-1951  தன் வெற்றியை அறிவித்தது.
தெலுங்கானாவில் மலர்ந்திருந்த ஒரு சோஷலிச அமைப்பு முறை வாழ்க்கை இப்படியாக இரும்புக்கரம் கொண்டு அழிக்கப்பட்ட து.
இந்த தெலுங்கனா வரலாற்றை எழுதுவதும் பேசுவதும் அறிந்து கொள்வதும்
இந்தியர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. 
(  ‘சிந்தனையாளன்’நவ 2018). 
இதில் சென்னை ராஜதானியின் முதல்வர் ஓமந்தூரார் பங்கும் அதிகம்…அது மறைக்கபட்டது. ஓமந்தூரார் தமிழ் கலைக்களஞ்சியம், விடுதலைக்கு பின் முதல் சமூக நீதி ஆணை, தமிழ் பயிற்சி மொழியை முதலில் அறிமுக செய்த மா மனிதரை வாக்கை விற்கும் தமிழகம் மறந்து விட்டது. அவருடைய படத்தை கூட மூன்று ஆண்டுகளுக்கு முன்தான் சட்ட மன்றத்தில் பல ஆண்டுகள் கோரிக்கைக்கு பின் வைக்கப்பட்டது.இத்தனைக்கும் ஓமந்தூரார் முதல் முதல்வர் இங்கு. அவர் 1947க்கு பின் விவசாய முதல்வர், தமிழின் முதல்வர், சமூக நீதி முதல்வர் என உண்மையாக இவரை அழைக்கலாம். திருவருட் பிரகாச வள்ளலாரின் அன்பர்….

இன்னெருவர் இராண்டாம் தமிழ் நாட்டின் முதல்வர் இராஜபாளையம் பி. எஸ். குமாரசாமி ராஜா நேர்மையின் இலக்கணம். இவரின் படம் 70 ஆண்டுகள் கடந்தும்  தமிழக சட்டமன்றத்தில் இல்லை. எதையும் அறியா ஆட்சி தர்பார்கள் இங்கு…..
முதல்வருக்கு இது தெரியமா?ஏதோ
 நடக்கிறது.
***
(2)
RadhakrishnanKS 
முதல் சமூக நீதியின் முதல்வர் ஓமந்தூரார்!
 சமூக நீதி கொள்கையில் ஓமந்தூராருடைய பணியை யாரும் பேசுவதுமில்லை, அடுத்தவர்களுக்கு சொல்வதுமில்லை. நீதிக்கட்சியில் 
வகுப்புரிமை ஆணைக்குப்பின் சென்னை ராஜதாணியின் பிரிமியராக (முதல்வர்) இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சமூக நீதியை 
பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தென்னேட்டி விசுவநாதம் 1947 இல் வகுப்புவாரி 
இடஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்த போது ஓமந்தூரார் 
தலைமையிலான அரசு அதை தோற்கடித்தது. 
அதுமட்டுமல்லாமல், அவர் ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனி இடஒதுக்கீடும் ஒதுக்கப்பட்டன. பிராமின் 
அல்லாதோர் 44% பிற்பட்ட வகுப்பினருக்கு 14% ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 14% ஆங்கிலோ இந்தியருக்கு 7% இஸ்லாம் மதத்தினருக்கு 7% 
பிராமணர்களுக்கு 14% என அவரது காலத்தில் இடஒதுக்கீடு அமைந்தது. இது தான் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான 
அடிப்படையும், முதல் ஆணையும் ஆகும். அப்போது ஓமந்தூராரை எதிர்த்து பலர் குரலெழுப்பினர். 

இவர் மீதான குற்றச்சாட்டுகளை நேருவிடம் அடுக்கினர். நேருவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டை வழங்குங்கள் 
என்று கூறினார். ஆனால் நேருவின் வார்த்தைகளை புறந்தள்ளிவிட்டு தான் இயற்றிய இடஒதுக்கீட்டு திட்டத்தை தைரியமாக 
நடைமுறைப்படுத்தினார்.
சென்னை வந்த காந்தியிடமும் ஓமந்தூராரை பற்றி இடஒதுக்கீட்டிற்கான பிரச்சனையை தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளாக 
வைக்கும் போது காந்தி அதற்கு செவி சாய்க்கவில்லை. ஏனெனில் ஓமந்தூராரை பற்றி காந்தி நன்கு அறிவார். அவர் முதல்வர் 
பதவியை சர்வ சாதாரணமாக தூக்கி எறிந்துவிட்டு, "போங்கடா. போக்கத்த பசங்களா" என்று சொல்லிவிட்டு வடலூரில் வள்ளலாரின் 
சத்திய ஞான சபையில் சென்று அமைதியாக தன் அறப்பணியை செய்தார். 
இப்போது சொல்லுங்கள் ஓமந்தூராரை சமூகநீதிக் காவலர் என்று சொல்ல வேண்டாமா? பெரியாருக்கு இணக்கமாகவும், பெரியாரின் 
பாராட்டுகளையும் பெற்ற நேர்மையான ஓமந்தூரார் வரலாற்றை ஏன் மறைக்கின்றோம். இன்றைக்குள்ள இளைஞர்களுக்கு ஓமந்தூரார் 
யாரென்று கூடத் தெரியாதது மிகவும் வேதனையான விடயமாகும். 
குறிப்பு: கசங்கிய ஆடையோடு எலிசபெத் இராணியை வரவேற்க சென்ற போது உடனிருந்தவர்கள், இப்படி கசங்கிய ஆடையோடு 
போறீங்களேனு கேட்டபோது, "இது தான் இந்தியாவுல ஆடையா மக்கள் போட்டிருக்காங்க. இதை அவங்
க ஏத்துக்கலன்னா நான் 
வரவேற்கவே வரல" என்று தைரியமாக சொல்லி சென்று வரவேற்றார்.
***
#சர்தார்_வல்லபாய்_படேல்
#ஓமந்தூரார்
#தெலுங்கனா
#சென்னா_ரெட்டி 
#சுந்தரய்யா_கம்யூனிஸ்டுகள்
#இராஜபாளையம்_பி_எஸ்_குமாரசாமிராஜா

#ksrpost
1-12-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...