#எதிர்க்கட்சி கூட்டணிகள்
—————————————
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க சமூக நீதி கூட்டணி என 18 கட்சித் தலைவர்களை அழைத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது தீர்க்கமாகவோ, தீர்மானகரமாகவோ தெரியவில்லை. கடந்த தேர்தலில்
ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் மொழிந்து அறிவித்தார். அது வேறுவிடயம்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக சரத்பவாரோ, மம்தா பானர்ஜியோ, நிதிஷ்குமாரோ ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. ஒரிசாவின் நவீன் பட்னாயக் தனித்துவமாக எதையும் சாராமல் இருக்கிறார். கம்யூனிஸ்டுகள் வேறு வழியில்லாமல் காங்கிரசோடு உறவு தொடர்ந்தாலும், கேரளா, மேற்கு வங்கம், திரிபுராவில் காங்கிரசுக்கு எதிராகத்தான் நிற்கவேண்டியகட்டாயம்கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளது. 1996 - இல் ஜோதிபாசுவுக்கு பிரதமர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது அவருடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது கடந்த கால நிகழ்வாகும்.
இந்திரா காலத்தில் காங்கிரசின் கடுமையான எதிர்ப்பாளாராக இருந்த காஷ்மீர் பரூக் அப்துல்லா மட்டும் தற்போது தெளிவாக தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார். 1983 இல் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை காஷ்மீரில் கலைத்து, அவருடைய மைத்துனர் ஜி.எம்.சாவோவை பொம்மை முதல்வராக இந்திரா அமர்த்தியபோது பரூக் அப்துல்லா பேசிய பேச்சுகள் இன்னும் பதிவுகளில் அப்படியே உள்ளன.
காங்கிரசை எதிர்த்து உருவான ஜனதா கட்சி, வி.பி.சிங் தலைமையிலான ஜன் மோர்ச்சா, தேவகவுடா மற்றும் குஜ்ரால் ஆட்சிகள் என்ன ஆனது? இவர்கள் எல்லாரும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களாக இருந்தவர்கள்தான்.
மூன்றாவது அணி எடுபடுமா?
ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போதும், மூன்றாவது அணி பற்றிய பேச்சும் அடிபடும். சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத அணியில் சேர விரும்பாத அரசியல் தலைவர்கள், மூன்றாவது அணி பற்றி ஏப்ரல் முதல் வாரத்தில் சந்தித்துப் பேச இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மூன்றாவது அணியில் மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார், கேஜ்ரிவால், சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸுக்கு மேற்கு வங்கத்தை விட்டால் வேறு புகலிடமில்லை. அகிலேஷ் யாதவின் கட்சி உ.பி.யுடன் முடங்கி விட்ட கட்சி. நிதிஷ் குமாருக்குப் பீகாருக்கு வெளியே ஆதரவு கிடையாது. நவீன் பட்நாயக், சந்திர சேகர ராவ் (தனியாக தேசியகட்சியை துவங்கியுள்ளார்).யாருக்கும் அவர்களது மாநிலங்களான ஒடிஸா, தெலுங்கானாவைத் தவிர வேறு எங்கும் செல்வாக்கு கிடையாது. இந்த மூன்றாவது அணிக் கூட்டம் என்பது
மாநிலத் தலைவர்களைக் கொண்ட கூட்டமே.
எல்லோருமே மாநிலத் தலைவர்கள்தான். இவர்கள் எப்படி அகில இந்திய அளவில் பரவியுள்ள பா.ஜ.க.வையும், காங்கிரஸையும் எதிர் கொள்வார்கள் என்பது புரியவில்லை. மேற்கண்ட தலைவர்களின் செல்வாக்கு அந்தந்த
மாநிலங்களோடு முடிந்து விடுகின்றன. தங்கள் மாநிலச் செல்வாக்கை வைத்துக் கொண்டு எப்படி அகில இந்திய அளவில் மூன்றாவது அணியை நடத்த முடியும்?
பா.ஜ.க.வுக்கு தென் மாநிலங்களில் கர்நாடகத்தைத் தவிர இதர தென் மாநிலங்களில் அதிகச் செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உ.பி., உத்தராகண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், ஓரளவு பிஹார், பஞ்சாப், சண்டிகார் போன்ற இடங்களில் பா.ஜ.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது. இதுபோல் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.
காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தாலும், அதற்கும் நாடு முழுவதும் வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது. எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு என்று கணிசமாகவோ, குறைவாகவோ வாக்கு வங்கிகள் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில்
கூட காங்கிரஸுக்கு தனித்த செல்வாக்கு இருக்கிறது.
திரிபுராவில் காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சமீபத்தில் நடந்த சட்ட மன்ற இடைதேர்தலில் கூட்டனி அமைத்துப் போட்டியிட்டன. வலுவான கூட்டனியாக பாஜக விற்கு சவாலாக அமைந்தது 17 இடங்களில் வெற்றி பெற்றனர்.பாஜக 33 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது
வங்காளத்தில் நடந்த இடைதேர்தலில் ( சட்ட மன்றம் ) காங்கிரஸ் மம்தா Strong hold ஐ வென்றது .கம்யூனிஸ்ட் ஆதரவுடன்
வங்கத்தில் காங்கிரஸ் - இடது சாரி கூட்டனி அமையும் .மம்தா விற்கு சவாலாக இருக்கும்கடந்த நாடாளுமன்ற தேர்தல் இடதுசாரிகள் ஆதரவு பாஜக விற்கு இருந்த்து .கிட்டத்தட்ட 15% பாஜக விற்கு மாறியது . இதனால் மம்தா பெருவாரியான (19 ) இடங்களை இழக்க நேரிட்டது
வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் ஆயா ராம் கயா ராம் அரசியல்
அசாம் மூன்று முறை ஆட்சியில் அமர்ந்த AGP வலுவில்லாமல் பாஜக வை விட்டால் கதியில்லாமல் இருக்கிறது.அஜ்மலின் AIUDF 4 நாடாளுமன்ற இடத்தை பிடித்திருக்கிறது .காங்கிரஸ் AIUDF கூட்டனி மீன்டும் தொடர்ந்தால் பாஜக விற்கு நெருக்கடி
ஆனால் இந்த மூன்றாவது அணிக் கட்சிகளுக்கு அகில இந்திய அளவில் என்ன செல்வாக்கு இருக்கிறது? மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க.வும் ஒன்றாகுமா? இவையும் காங்கிரஸும்தான் ஒன்றாகுமா? அல்லது மூன்றாவது அணிக் கட்சிகள், தங்கள் மாநிலங்களில் வேண்டுமானால் தாங்கள் மூன்றாவது கூட்டணி என்று காட்டிக் கொள்ளலாமே தவிர, அவர்களுக்குச் செல்வாக்கோ, வாக்கு வங்கியோ இல்லாத பிற மாநிலங்களில் இவர்கள் வெறும் ஸைபர்தான்.
மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார், சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் ஆகியோர் அவரவர் மாநிலங்களில் காங்கிரஸ், பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலைச் செய்யலாம். இந்த பா.ஜ.க., காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் என்பது இவர்களுடைய மாநிலங்களில்தான் எடுபடுமே தவிர, இதர மாநிலங்களில் எடுபடாது. அவலை நினைத்துக் கொண்டு வெறும் உரலை இடிப்பதுபோல் மூன்றாவது அணி என்று இவர்கள் கட்சி கட்டுவது எந்தப் பலனையும் தரப் போவதில்லை.
ராகுல்
சூரத் குற்றவியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை அளித்த நிமிடமே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்ற சட்டத்தின் கீழ் ராகுல்காந்தியின் எம்.பி.பதவி பறிபோயிருக்கிறது. அடுத்து 8 ஆண்டுகள் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டி போட முடியாது.
இந்த சட்டத்தை மாற்றி லாலுவை சிறை செல்லாமல் காப்பாற்ற சோனியா – மன்மோகன் சிங் அரசு 2013 இல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதை அப்போது கிழித்துப் போட்டவர் ராகுல்காந்தி.
2019 தேர்தலில் ராகுல் பேசியது, மோடி சமுதாயத்தையே இழிவுபடுத்துவாக்க் கூறி பூர்னேஷ் மோடி என்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில்தான் 23.03.2023 தீர்ப்பு வந்திருக்கிறது.
கிரிமினல் குற்றத்துக்காக 2 ஆண்டு தண்டனை பெற்றவர்களின் பதவி பறிபோகும். தண்டனைக் காலம் முடிந்து 6 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நீண்ட நாட்களாக இருந்து வரும் சட்டம். அந்தச் சட்டத்தில் 1989-ல் ராஜிவ் அரசு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, தண்டனை பெற்ற உறுப்பினர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததிலிருந்து மூன்று மாதத்துக்குள் மேல் முறையீடு செய்தால், வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவரது பதவி நீடிக்கும் என்று திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், 2013-ல், அந்தத் திருத்தம் அரசியல் சாஸனத்துக்கு விரோதமானது என்று கூறி, அதை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அந்தத் தீர்ப்பினால்தான் தண்டனை பெற்ற உறுப்பினரின் பதவி பறிபோகும் என்ற நிலை சட்டத்தில் உருவாகியது.
அந்தத் தீர்ப்பிலிருந்து தண்டனை பெற்ற உறுப்பினர்களைக் காப்பாற்றவே சோனியா- மன்மோகன் சிங் அரசு, அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. தண்டனை உத்தரவுக்குப் பிறகு மூன்று மாதம் பதவி பறிபோகாது; அதற்குள் மேல் முறையீடு செய்து, அந்தத் தீர்ப்பு/தண்டனைக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால், உறுப்பினரின் பதவி தொடரும் என்று மாற்றவே அந்த அவசரச் சட்டம். அந்தச் சட்ட நகலை ராகுல் அப்போது கிழித்தெறிந்தார். அவசரச் சட்டம் கைவிடப்பட்டது. அந்த சட்டம் அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால் ராகுலின் பதவி பறி போயிருக்காது.
கடந்த 8 ஆண்டுகளில் லாலு யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷீத் மசூத், முகமது ஃபைஸல், உ.பி. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸம் கான் ஆகியோர் பதவி இழந்தனர்.
2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு, மோடி பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். மீதான துவேஷமும் அவரது பேச்சுக்களில் சேர்ந்து வெளிப்பட்டன. அவரது அவதூறு பேச்சுக்களை முக்கியமானது. ஒன்று எதிர்த்து வழக்குகள் குவிந்தன. அதில் மூன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று 2016-ல் அவர் பேசியது. காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்று கூறுவது அவதூறு என்று, ஸ்டேஸ்மன் பத்திரிகை உட்பட மற்றவர்களும் ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கின்றனர்.
ராகுல் பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் அவதூறு வழக்குப் போட்டார்.அதைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை
அணுகினார் ராகுல் வழக்குப் போட்டவர், ராகுல் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் கூறினார். 'கூறியது கூறியதுதான், மன்னிப்புக் கேட்கமாட்டேன்" என்று ராகுல் பதில் கூறினார். "நீங்கள் ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்று கூறியது அவதூறு. மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் வழக்கைச் சந்தியுங்கள்' என்று கூறி உச்சநீதிமன்றம், ராகுல் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்கும் தொடருகிறது.
அப்போது ஒரு முறை உச்ச நீதிமன்றமே, "சௌக்கிதார் (மோடி) சோர்" என்று கூறிவிட்டது என்று பொய் கூறினார் அவர். அதை எதிர்த்து உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது. ராகுல் அதன் முன்பு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.
பதவி இழப்பால், ராகுல் பிரதமர் வேட்பாளராக முடியாது. அவருடைய தலைமையை ஏற்காத எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, அனைத்துக் கட்சி மோடி எதிர்ப்பு அணி உருவாகும் வாய்ப்புக் கூடியிருக்கிறது. அது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல என்பது நிச்சயம். எனவே, ஒரு வகையில் ராகுலின் பதவி இழப்பு, பா.ஜ.க.வுக்குக் கெடுதலே.
#KSR_Post
2-4-2023.
No comments:
Post a Comment