Monday, August 22, 2022

ஆகஸ்ட் 22 சென்னைக்கு பிறந்த நாளாம், மெட்ராஸ் டே.

ஆகஸ்ட் 22 சென்னைக்கு பிறந்த நாளாம், மெட்ராஸ் டே. Madras day 

என்ன விஷயம் என கேட்டால் ஆகஸ்ட் 22 1639 அன்று,  கிழக்கிந்திய கம்பெனி,  சென்னப்ப நாயக்கரிடம்   (  விஜயநகரம் ஆட்சி) இருந்து    கடற்கரைக்கு எதிரே இருந்த காலி இடத்தை வாங்கி பத்திர பதிவு செய்தார்கள்.  அங்கே ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள்.   அதனால் அது சென்னையின் பிறந்த நாள்.

 வால்மீகி முனிவர் தவம் செய்த இடம் திருவான்மியூர், லவனும் - குசனும் ராமருடன் போர் புரிந்த இடம் கோயம்பேடு என நம்பிக்கை. திருவள்ளுவர் பிறந்தது மயிலாப்பூர்.  கபாலீஸ்வரர் மற்றும்  பார்த்தசாரதி கோவில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை.

கபாலி கோவில் கட்டியது எப்போது?

நானூறு ஆண்டுகள் தான் ஆச்சு என்று தெரிய வரும்....

அப்ப திருஞானசம்பந்தர்  இந்தக் கோவிலில் பதிகம் பாடவில்லையா என்று....?

கடற்கரை பக்கம்தான் கோவில் இருந்தது என்று உண்மையா?....

கடற்கரை ஒட்டிய கோயிலாக இருப்பதால்தான் கபாலி கோவில் விழாக்கள் மட்டும் பௌர்ணமியை அனுசரித்து வருகிறது.

கிருத்தவ புனிதர் தோமர் மயிலைக்கு வந்தது

இந்த விடயங்களை பழைய நிகழ்வுகளையும், காலங்களையும் சென்னையை குறித்து இன்னும் ஆயவு செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...