Sunday, August 21, 2022

*திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆலய அதிகாரி சுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம் தொடர்பான சி. ஜே.ஆர்.பால் கமிஷன் அறிக்கையை 1982 தலைவர் கலைஞர் வெளியிட்டார் என இன்றைய அதிமுகவினருக்கு தெரியுமா?* *அன்று இவர்கள் எங்கோ*

*திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆலய அதிகாரி சுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம் தொடர்பான சி. ஜே.ஆர்.பால் கமிஷன் அறிக்கையை 1982 தலைவர் கலைஞர் வெளியிட்டார் என இன்றைய அதிமுகவினருக்கு  தெரியுமா?* *அன்று இவர்கள் எங்கோ*
 ————————————
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை அறிக்கை கசிந்திருப்பதன் மூலம் அரசின் ரகசியங்களை காக்கத் தவறிவிட்டது என சொல்லும் அதிமுகவினருக்கு…

திருச்செந்தூர் ஆலய சரிபார்ப்பு அதிகாரி சுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம் தொடர்பான சி. ஜே.ஆர்.பால் கமிஷன் அறிக்கையும் (1982 ) அரசாங்கத்தின் ரகசியம்தான். அதுவும்கூட அரசுக்குத் தெரியாமல்தான் தலைவர் கலைஞர் மூலமாக வெளியானது. எனில், அந்த அரசாங்க ரகசியத்தைக்  காக்கத் தவறிய அதிமுக அரசை எப்படி விமர்சிப்பார்கள்?
தலைவர் கலைஞர் பால் கமிஷன் அறிக்கையை செய்தியாளர்களிடம் முழு அறிக்கை அப்படியே அன்று வெளியிட்டார். ஓய்வு பெற்ற  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர். பால்,திருச்செந்தூர் ஆலய சரிபார்ப்பு அதிகாரி சுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம்  குறித்து விசாரணை கமிஷன் பணிகள் முடித்து அறிக்கையை தமிழக அரசிடம் வழங்க விட்டு அமெரிக்கவில் உள்ள மகனே/ மகளே தெரியவில்லை. அவர்களை பார்க்க போய் விட்டார்.
பால் இதன் விசாரணையை சென்னையில் நடத்தினார். இரண்டு மூன்று முறை திருச்செந்தூருக்கும் வந்து விசாரணையை நடத்தினார். நெடுமாறன் சார்பில் நானும், தங்கப்பாண்டியன் வழக்கறிஞர்களாக ஆஜர் ஆணோம். திமுகவுக்கு கன்னியாகுமரி இரணியல் ரவி ஆஜர் ஆனார். சில நாட்கள் நெல்லை ஏ. எல். சுப்ரமணியன் வந்து ஆஜர் ஆவார். இப்படி பல
வழக்கறிஞர்கள். பெயர்கள்  இன்று நினைவுக்கு வரவில்லை.

நீண்ட காலமாக பால் கமிஷன் அறிக்கை அன்றைய அதிமுக அரசு  சட்டமன்றத்தில் வைக்கவில்லை.
இது குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என
தலைவர் கலைஞர், நெடுமாறன் என பலர் சட்ட மன்றத்தில் அன்று எழுப்பினர். 

இப்படியாக தாமதம்  ஆக தலைவர் கலைஞர் தானே கண்டு அறிந்து செய்தியாளர்களிடம் முழு  பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டார். அதற்கு அன்றைய அதிமுக அரசு 
கலைஞர் மீதும், தலைவரின் செயலளர் சண்முகநாதன் மீதும் வழக்கு தொடர்ந்தது.

அது மட்டுமல்லசுப்ரமணிய பிள்ளை மர்ம மரணம்  குறித்து நீதி கேட்டு மதுரையிலிருந்து விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, எட்டையபுரம், குறுக்குச்சாலை, தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரை தலைவர் கலைஞர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நெடிய நடை பயணம் நடந்தது. அன்றைக்கு இது  முக்கிய செய்தியாக இருந்தது

*Justice C. J. R. Paul Commission Report:* *Paul Commission 1982 was constituted to inquire into the cold-blooded murder of a Hindu Religious & Endowment Board right inside the Tiruchendur Temple*. Paul, the retired Judge Madras High Court had reportedly presented his report, However, in 1999, Kalaignar indicated to newspersons that “he managed to get a copy he had obtained the C J R Paul Commission’s report on the mysterious death of Tiruchendur Murugan temple executive officer Subramania Pillai in 1982 during the M G Ramachandran regime”.

Justice C.J.R. Paul Commisson inquiry on Tiruchendur temple issue 

#KSR post 
21-8-2021.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...