Tuesday, August 9, 2022

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்-1973

*மாயத்தேவர்( 88)*

1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக விலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பிறகு முதன்முறையாக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி  இடைத் தேர்தலை சந்திக்க நேர்ந்தது. மாயத்தேவர் அதிமுகவின் வேட்பாளர் .

அப்போது திமுக ஆட்சி.. 

1973-ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 

ஆளுங்கட்சியான திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் வேட்பாளர். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மாயத்தேவர்.

மே 21ஆம் வாக்குகள் எண்ணப்பட்ட போது பயங்கரமான அரசியல் களமே ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போனது.

ஆளுங்கட்சியான திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் சீமைச்சாமி டெபாசிட்டே இழந்து போனார்.

காமராஜரின் பழைய காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட என்எஸ்வி சித்தன் இரண்டாம் இடத்திற்கு வந்தார். அப்போது பழ.நெடுமாறன்     ஸ்தாபன கங்கிரஸ் மாநில பொதுச்செயலாளார்,    தின்டுக்கல், தேனீ என அடங்கிய ஒன்று பட்ட மாவடத்தின் ஸ்தாபன கங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் இந்த தேர்தல் பொறுப்பாளார். மாணவர் காங்கிரஸ் சார்பில் பணி ஆற்றிய நினைவுகள் பசுமையாக உள்ளது.

 2,60,824 வாக்குகள் பெற்று அதிமுகவின் வேட்பாளர் மாயத்தேவர் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றார். 

ஆளும் கட்சியான திமுக 93 ஆயிரம் வாக்குகள் அண்ணா திமுகவுக்கு கிடைத்தது 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள்..

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...