Tuesday, August 30, 2022

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை

*முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள  வள்ளுவர் சிலை புனரமைக்கப்படுவது மகிழ்ச்சியான செய்தி*. 

*தலைவர்  கலைஞர் ஆட்சியில்    கடந்த 2000-ம் ஆண்டில், அதாவது டிசம்பர் மாத இறுதிநாள் இரவில்    புத்தாயிரம் தொடங்கிய ஆண்டில் திருவள்ளுவர் சிலையை குமரி முனையில் கலைஞர்    திறந்து வைத்தார். இடைப்பட்ட காலத்தில் அந்த சிலையை அதிமுக ஆட்சியாளர்கள் சீர்படுத்தாமல் இருந்தார்கள்.* 

*கடந்த   2004-ல் ஒரு முறை வள்ளுவர் சிலை பாதுகாப்பு இல்லாத நிலையில் இருக்கின்றது என்று    அன்றைய மாவட்ட  செயலாளர்,   சுரேஷ்ராஜன் கலைஞரிடம் சொல்லிருந்தார். அவர் என்னிடம், “நீ ஊர்ப்பக்கம் செல்லும்போது கன்னியாகுமரி சென்று வள்ளுவர் சிலை எப்படி இருக்கிறது என்று பார்த்து வா” என்று சொல்லி அனுப்பினார்*.

*அப்பொழுது  2004 ( நாடாளுமன்ற தேர்தல் முன்) ஜனவரி 20 அன்று கேமிராமேனுடன் கன்னியாகுமரி   சென்று படம் எடுத்து கொண்டும் அதுகுறித்து அறிக்கை தயார் செய்தும் கலைஞரிடம் வழங்கினேன்*.

*அந்த சமயத்தில் ஜெயலலிதா ஆட்சியில் வள்ளுவர் சிலை பராமரிக்கப்படாமல் தவிர்க்க பட்டது. இன்றைய திமுக ஆட்சியில் முதல்வர்  தளபதி ஸ்டாலின்  அவர்கள் அதை   முன்னெடுத்து பராமரிப்பு பணி நடக்க உத்தரவிட்டு பணி நடந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது*. 

*அரசியல் மனமாச்சரியங்களை கடந்து  தமிழகத்தின் அடையாளங்கள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது*

#ksrpost
30-8-2022.


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...