Tuesday, August 2, 2022

பொறுப்பற்ற காட்சி ஊடகங்கள்

இன்றைய (2-8-2022) தினமணியில் ஊடகங்கள் குறத்தான எனது கட்டுரை வெளிவந்துள்ளது.

கட்டப்பஞ்சாயத்து நடத்தும் டிவிகள்

அறிவில்லாத பொறுப்பற்ற ஊடகங்கள்

ஒளிஒலி ஊடகங்கள் ஜனநாயகத்தின் கேடு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மனக்குமுறல்கள்……

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்


ஜனநாயகத்தின் நான்காவது தூண்’’ என்று சொல்லப்படும் ஊடகங்களின் சிறப்பான பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன.

அதில் கருமையான சில பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

அண்மையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாபேசியிருப்பதைப் பாருங்கள்.

இப்போது டிவி விவாத நிகழ்ச்சிகள்சமூக ஊடக அலசல்கள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து போல் நடக்கின்றன. இவை நாட்டை பின்னோக்கி இழுத்து செல்கின்றன. சமூக ஊடகங்களில் சில நேரங்களில் நீதிபதிகளுக்கு எதிரான பிரசாரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. நீதிபதிகள் ஒரு சம்பவம் குறித்து உடனடியாக எதிர்வினையாற்றாமல் இருக்கலாம். அவ்வாறு எதிர்வினையாற்றாமல் இருப்பதால்அவர்கள் பலமில்லாதவர்கள்கையாளாகதவர்கள் என்று அர்த்தமில்லை.

 

அதிநவீன ஊடக அங்கங்களின் வீச்சு அதிகம். ஆனால்அவற்றால் எது சரி எது தவறு எனத்தெரியவில்லை. நல்லது எது கெட்டது எது உண்மையானது எது போலியானது எது என பகுப்பாய்வு செய்ய தெரியவில்லை. ஊடகங்களில் எது வைரலாக பரவுகிறதோ அதை வைத்து ஒரு வழக்கின் போக்கை தீர்மானிக்க முடியாது. பல ஊடகங்கள் தாமாகவே கட்டப்பஞ்சாயத்து நடத்தி கொண்டிருக்கின்றன.

போதிய அறிவு இல்லாமல்ஏதோ ஒரு சார்புடன் நடத்தப்படும் விவாதங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடு. ஊடகங்களில் வெளியாகும் சார்புடைய செய்திகள் ஜனநாயகத்தை பலவீனமாக்குகிறது. இதனால்நீதியை நிலைநிறுத்துவதும் பாதிக்கப்படுகிறது.

 

நாட்டில் அச்சு ஊடகங்கள் ஓரளவு பொறுப்புடன் செயல்படுகின்றன. காட்சி ஊடகங்களில் நடக்கும் டிவி விவாதங்கள் பலவும் ஒரு பக்க சார்புடையதாகவும் அரைகுறை தகவலுடைய ஏதேனும் உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும். காட்சி ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை. சமூக ஊடகங்கள் இன்னும் மோசம்.

காட்சி ஊடகங்கள் எல்லை மீறி செல்வதாலும்பொறுப்பை உணராமல் செயல்படுவதாலும் ஜனநாயகத்தை இரண்டு அடி பின்னால் இழுத்து சென்று விடுகிறது. காட்சி ஊடகங்களும்சமூக ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அவர் பேசியது ஒரு உதாரணம்.

என்னைப் போன்றவர்கள் டிவி ஊடகங்களின் குறைகளை சுட்டிக்காட்டும் போது தனிப்பட்ட முறையில் என்னிடம் வன்மமாகவும், வக்கிரமாகவும் சிலர் பேசுகிறார்கள்.


தற்போது உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி தன் கருத்தைப்பதிவு செய்துள்ளார் இதற்கு நமது டிவி ஊடகங்கள் என்ன பதில் சொல்லப் போகின்றன? அல்லது இது குறித்து விவாத மேடை அமைத்து விவாதிக்க போகின்றனவா..அல்லது  தலைமை நீதிபதி குறித்து பட்டிமன்றம் நடத்த தைரியம் உள்ளதா...என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

#அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!

"ஏன் நீங்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை?" – என ொது இடங்களுக்குச் செல்லும்போது பயணங்களில் தெரிந்தவர்கள்அறிமுக அற்ற பலர் என்னிடம் அக்கறையோடு கேட்கும் கேள்வி. ஆம் ஆறு-ஏழு ஆண்டுகளாக விவாதங்களில் பங்கேற்பது இல்லை.

இப்போது இங்குள்ள தொலைக்காட்சி விவாதங்களின் தரம் எப்படி இருக்கிறது?    

நாடு-மக்கள் நலன் சார்ந்தல்ல, பிரச்சனைகளை விட வெறும் பரபரப்புக்காகவே ஒவ்வொரரு நாளும் பேசக்கூடிய தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது குறித்துப் பேச அன்றைய சப்ஜெக்ட் குறித்து நன்றாகத் தெரிந்தவர்களை அழைப்பது குறைவு தான். விஷயம் தெரியாமல் ஏதோ கத்தக் கூடியவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து அழைக்கிறார்கள். ஆக-விவாதத்தில் என்ன நடக்கிறதுமுழுமையாக விஷயம் தெரிந்த ஒருவர் விஷயமே தெரியாமல் கூச்சல் போடுகிற இன்னொருவருடன் 'விவாதம்' என்ற பெயரில் போட்டி போட வேண்டியிருக்கிறது. யார் அதிகமாகக் கூச்சல் போடுகிறாரோ அவர் மீதே நெறியாளர் மற்றும் பார்வையாளர்களின் கவனம் விழுகிறது. அவர்களுக்கே கூடுதல் நேரம் கிடைக்கிறது. அந்தச் சலுகையில் அவர்கள் தங்கள் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்கள். கொஞ்சம் கூடக் கூச்சமோநாகரீகமோ இல்லாமல் கொச்சையாக "அவன் மாடு முட்டிநாதாரி"என்கிறார்கள். ம...ரு" என்கிறார்கள். அருவாளை வைத்து"அறுத்துப் புடுவேன்" என பொதுவெளியில் பெண்களே எச்சரிக்கிறார்கள். இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போகின்றன தொலைக்காட்சி விவாதப் பேச்சுகள்.

நேற்றைய நிகழ்வுகள்வரலாறு, நாட்டு நடப்புக்கள்சில நேரத்தில் புள்ளி விபரங்கள் விவாதங்களுக்கு அவசியம்.இதைப் பற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல் இன்றைக்குள்ள பிரச்சினை குறித்து கத்தி விவாதிக்கிறார்கள். டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக அவற்றை தொலைக்காட்சியில் அதுவும் நேரலையாக ஒளிபரப்பாகின்றன. இவற்றை வீடுகளில் பார்க்கிறவர்கள் அன்று பேசப்படும் விஷயம் குறித்து என்னவொரு தெளிவான முடிவுக்கு வர முடியும்குழப்பமான முடிவகளுக்கே அவர்களுக்கு வந்து சேரமுடியும். இத்தகையவிவாதங்கள் பொழுது போக்குத் தொலைக்காட்சித் தொடர்கள் (Tel Serialsஅல்ல. இந்த தொடர்கள் காப்பிய செய்திளை சொல்வதை போல கொண்டடிகின்றனர். இவை குடும்ப உறவுகளை சிக்கல் படுத்துகின்றன.இந்த டெலி சீரியல்கள் எந்த நல்வழி படுத்துவும் இல்லை.


இங்கு,காலையில் செய்தித்தாள் வாசிப்பது இப்போது வெறும் சடங்காகிவிட்டது. நெட்ஃபிளிக்ஸில் மூழ்கிவிடுகிறார்கள்ஐபிஎல் கிரிக்கெட்டில் பொழுதைப் போக்குகிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது, என்கிற அக்கறை இல்லாமல் அனைத்து வர்க்கத்தினர் தாங்களாகவே ஒதுங்கிவிட்டதைப் போலத் தோன்றுகிறது;இப்படி இருக்கிறது பொதுவெளி.

மாலை சபா கச்சேரிகள் போல தொலைக்காட்சி விவாதங்கள்…. ஆனால்சபா கச்சேரிகள் ரசிகர்களை மகிழ்வித்து ஆறுதல் படுத்தும். இடியட் பாக்ஸ் எனும் தொலைகாட்சி பெட்டியில் நடக்கும் கூப்பாடு சம்பாசனைகளில் எந்த முடிவும் எட்டப்படுவதும் இல்லை. இந்த விவாதங்களில்

தொலைகாட்சிகளுக்கு ரேட்டிங் கிடைத்தால் போதும். இந்த விவாத்த்தில் பங்கேற்றால் போதும், அதுதான் அரசியல் நினைத்தால் என்ன

சொல்ல… பொதுவாழ்வில் தியாகம், அரசியலில் வேறு முக்கிய பணிகள் தேவையற்றது. தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து முகம் மக்களுக்க தெரிந்தலே அரசியலில் போதும் என்ற நிலைப்பாடு உள்ளது.

சரி இந்த விவாதங்களின் பேசும் பொருள் குறித்த வரலாறு, இன்றையநிலை, வேறு விடயங்களை குறித்து விவாதிக்காமல் கூடி அரை மணி நேரத்தில் தங்களின் திருமுகத்தை காட்டி கலைவதா? அரசியல் பணி…


சரி, அரசியல் தளம் எப்படி? தகுதியே தடை, ஓட்டுக்கு காசு என்ற நிலையில்  தகுதிபடைத்த பொரு‌த்தமானவர்கள் இன்றைக்கு நாடளுமன்றம் சட்ட மன்றம் செல்ல முடியாது. ஓட்டுக்கு துட்டு கொடுக்கும் அரசியல் வியாபாரிகள் இன்றைய தேர்தல்களில்

வெற்றி பெற முடியம்.இவர்களுக்கு  தமிழக நிலுவை திட்டங்கள்-உரிமைகள், நதி நீர் சிக்கல்கள், ஈழப்பிரச்சனை போன்ற பல விடயங்களை பற்றி  இந்த மகத்தான மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியுமா? நாடளுமன்ற உறுப்பினராக இருந்தவர் Pariment என எழுதனார்.இவர்களும் முகம் தொலைகாட்சி விவாதங்கள் பங்கு பெறுகின்றனர். கடந்த 2009இல் எம்பி பொருப்பில் இருந்தவர் டில்லியில் தமிழில் பேசுவர் தமிழ்நாட்டி ஆங்கிலத்தில் பேசுவர் என வேடிக்கையாக நண்பர்கள் சொல்வார்கள். இப்படியாக பலரின்

பங்களிப்பில் தொலைக்காட்சி விவாதங்கள் தொல்லைகாட்சி விவாதங்கள் நாளும் பொழுதும் நாடு வளம் பெற நடக்கிறது.

 

இதற்குத் தானா தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கின்றன?

இதை எல்லாம் பரிசீலிக்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் ஏன் தொலைக்காட்சி விவாதங்களைத் தவிர்க்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

மீண்டும் முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே  பொறுமையாக நம்முடைய கோபங்கள் மௌனமாக மாறுகிறது… என்பது நினைவில் வருகிறது.

சமூக ஊடகங்களுடைய செயல்பாடும் புரிதல் இல்லாமல் பிழைகளோடு அணுகப்படுகிறது. தேவைக்கு அதிகமான புகழ்ச்சிகளை, தவறான கருத்துகளைப் பரப்புவது நமது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. 

என்னுடைய சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். என்னுடைய பதிவுகளை பிரதி எடுத்து அப்படியே தங்களுடைய சமூக வளைதளங்களில் பலர் அனுமதி கேட்காமலேயே போடுகின்றனர். 

என்னைவிட அதிகமாக அதற்கு விருப்புகள் கிடைக்கின்றன. அரசியலில் இருக்கிற ஒரு பெண்மணி. ஓராண்டுக்கு முன்னால் என்னுடைய பதிவுகளை பிரதி எடுத்து அவருடைய பக்கத்தில் போட்டதையடுத்து அந்த அம்மையாருக்கு 1500விருப்புகள் வரை கிடைத்தன.

ஆனால்நானே எழுதிய அசல் பதிவுக்கு வெறும் 150விருப்புகள் தான் கிடைத்தன. இப்படித் தான் இன்றைக்குப்படிக்கமாலேயேபார்க்கமாலேயே சிலர் தயவு வேண்டுமென்றால் உடனே தங்களுடைய பெயர் பதிவாக வேண்டுமென்று என்பதற்காக விருப்புகளை போடுகின்றனர். 

நடிகைகள்பெண்கள் என்றால் உடனே பதிவு விரும்பப்படுகிறது. இப்படியான போலியான போக்குகள் எந்த அளவு சரி என்று தெரியவில்லை. பிம்பங்கள் கட்டிக்கொண்டாடப்படுவதும் திட்டமிட்டு சில தவறுகளை சரி என்று வாதடுவதும்அதுதான் உண்மை என்று சொல்வதும் இன்றைக்கு சமூக வளைதளங்களில் எழுதப்படாத ஒரு செயல்பாடாக இருந்து வருகிறது.

இந்தப் போக்கு கவலை அளிக்கிறது. ஊடகங்களும்,தொலைக்காட்சிகளும் சமூக வளைதளங்களும் ஜனநாயகம் என்பதனை கையில் வைத்துக் கொண்டு வரம்பற்ற முறையில் செல்வது நாட்டின் முன்னேற்றதிற்கு நல்லதல்ல.

வரம்புள்ள ஜனநாயகம் என்பது அரசியல் தத்துவத்தில் இருக்கின்றது. தனிமனிதன் தனக்கான பொறுப்புகளை அறிந்து தன்னுடைய ஜனநாயக உரிமைகளை எடுத்துக் கொள்வதுதான் வரம்புள்ள ஜனநாயகம்.

அரசியல் கோட்பாடுகளில் வரம்புள்ள முடியரசுவரம்பற்ற முடியரசு என்பார்கள். 

அதேபோல் வரம்பற்ற ஜனநாயகம் என்பது பேரழிவை நோக்கிச் செல்லும் என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசு மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்புகள் இருப்பதை உணர வேண்டும்.

தொலைக்காட்சிகளில் ரேட்டிங் வருவதற்காக எதுவேண்டுமானாலும் பேசலாம் என்பது நியாயமல்ல. 

நாங்கள் எல்லாம் 1980-களிலிருந்து தூர்தர்ஷன் காலத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றோம். அப்போது இப்படி தொலைக்காட்சி விவாதம் தினமும் இருக்காது. முக்கியமான தினங்களில் மட்டுமே நடைபெறும். அன்றைக்கு ஒரு கண்ணியமான விவாதங்கள் நடந்தன. தரவுகளையும், பழைய வரலாறுகளையும் எடுத்துச் சொல்லி நாங்கள் பேசியதுண்டு.

இன்றைக்கு பழைய வரலாறு பற்றி பேசினால் தேவையற்ற ஒன்றாக கருதப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

தொலைக்காட்சிகள் இந்திராகாந்தி காலத்திலேயே வந்துவிட்டதன. அதற்குப் பிறகு காமராஜர்அண்ணா காலத்திய அரசியல் ஓரளவு நேர்மையான போக்கில் சென்று கொண்டிருந்தது. 

திடீரென்று இந்த தொலைக்காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் அந்த ஆரோக்கிய நிலையை நிலையிலிருந்து விடுபட்டு வேறு ஒரு தவறான திசை நோக்கி செல்கின்றதோ என்று கவலை அளிக்கின்றது. இந்த கவலையை யாரும் பேச மாட்டார்கள்சொல்லவும் மாட்டார்கள். அவர்களுக்கு அவர்களுடைய லாபம் முக்கியம். எப்படியாவது பதவியைப் பிடிக்க வேண்டும்எப்படியாவது தங்களுடைய புகழ் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற நிலையிலேயே நமது சமூகத்தில் உள்ளவர்கள் இருக்கும் போது நாம் என்ன சொல்ல முடியும்.?

அண்மையில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு மதத்தைப் பற்றி ஒரு பெண்மணி பேசி ஏற்பட்ட சலசலப்பை யாரும் மறந்துவிட முடியுமா?

இந்தப் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் இது நடந்து கொண்டிருக்கிறது. டிரம்ப் போன்ற தலைவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேசினார்கள். புடினை பற்றி கூடப் பல செய்திகள் வருகின்றன. இப்படி இந்தியாதமிழகம் மட்டுமல்ல உலக அளவிலும் தொலைக்காட்சி சாதனங்களையும், ஊடகங்களையும் யன்படுத்துவது நடந்து கொண்டிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு என்ற டார்வின் கோட்பாடு தான் நினைவுக்கு வருகிறது.

-அரசியலார்.




No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...