Wednesday, August 17, 2022

*வாஜ்பாய்…* *இந்த படம் 1986 மே 3ம் தேதி டெசோ மாநாட்டுற்க்கு வந்த போது எடுக்கப்பட்டது*.

*வாஜ்பாய்…*
*இந்த படம் 1986 மே 3ம் தேதி டெசோ மாநாட்டுற்க்கு வந்த போது எடுக்கப்பட்டது*.    (மதுரை வாசுகி ஸடுடியோ சீனிவாசன் எடுத்த படம். இவர் நெடுமாறன் ஆதரவாளார்)

*1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course)டெசோ மாநாடு  தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ்,வாஜ்பாய் என
 பல அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர்*. அப்போது அவரையும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என். பஹுகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பா.ஜ.கவின் மூத்த தலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தியும் உடனிருந்தார்.

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, சித்திரை வீதிகளையும் சுற்றிக் காண்பித்தேன். அங்கிருந்து புறப்படும்போது, வாஜ்பேயி "இட்லி, தோசை சாப்பிடலாம்" என்றார். உடன் வந்திருந்த பஹுகுணாவும் இந்தியில் "சாப்பிடலாமே" என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றேன்.
காலை 9.00 மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும், "எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு அமைதியாக கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி" என்றார் வாஜ்பேயி. மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பியபோது வாஜ்பேயிடமும், பஹுகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த என்னுடைய திருமண அழைப்பிதழைக் கொடுத்தேன்.
வாஜ்பேயி அவர்கள் தில்லிக்கு சென்ற பின், திருமண நாளான 12-05-1986 அன்று, அதனை நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார்.

#ksrpost
17-8-2022


No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...