Friday, August 12, 2022

*தலைவர் கலைஞர் நடத்திய டெசோ TESO மாநாடு (12-8-2012) இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவு. *முள்ளிவாய்க்கால்*.

*தலைவர் கலைஞர் நடத்திய டெசோ TESO மாநாடு (12-8-2012) இன்றுடன் பத்து ஆண்டுகள் நிறைவு. *முள்ளிவாய்க்கால்*. 
————————————
முள்ளிவாய்க்கால் 2009 கால கட்டத்தில் தலைவர் கலைஞர், திமுக  மீது பலர் எதிர்வினை ஆற்றிய போது, TESO மாநாடு 12-8-2012 ,நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு.  கலைஞர் அறிவுறுத்தல் படி அக்கார்டு விடுதியில் நடந்த ஈழத்தமிழர் கருத்தரங்கம் மற்றும் இராயப்பேட்டை YMCA திடலில் டெசோ மாநாடு நடத்த அடியேன் ஆற்றிய முக்கிய,பிரதான களப்பணிகள்- கடப்பாடுகள் வரலாற்றில் அதிகம். 

பின், ஆகஸ்ட் 2012 இதே மாதத்தில் நீயூயார்க் ஐநா மன்றம் , ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணையம்  என தலைவர் கலைஞரின் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து டெசோ தீரமாணங்கள்,கடிதங்களை இன்றைய முதல்வர் அளிக்கவும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாக நிகழ்ச்சியில் தளபதி பங்கேற்க உரிய ஏற்பாடுகள்  என்று நான் செய்தது இன்றும் நினைவில் உள்ளது. 
டில்லி டெசோ மாநாட்டு பணிகள். ஈழத்தமிழர் சிக்கல் குறித்து டில்லியில் வெளி நாட்டு தூதர்கள மற்றும் காமன்வெல்த் பிரதிநிதிகள் சந்திப்பு என பொறுப்புகள் இருந்தன. 

சென்னையில் நடந்த டெசோ கூட்டங்கள், போராடங்கள் நடந்தன.
இன்று இங்கு வலம் வருபவர்களுக்கு அன்று எங்கோ?இதை  அவர்களுக்கு இதை பற்றி தெரியாது. ஆனால்,அடியேனின் பணிகள் வரலாற்றில் என்றும் இருக்கும்

கே.எஸ். இராதா கிருஷ்ணன்,
#ksrpost
12-8-2022.
——————————————————-
(வடசென்னையில் நடந்த கூட்டத்தில், ``இதுவரை நிறைவேறாத கனவு, தனி ஈழம். அதற்கான உரத்தை, பலத்தை, எழுச்சியை விரும்புகிறேன்’’ என்றார். 

ஏப்ரல் 30 அன்று நடந்த புதிய  டெசோ கூட்டத்தில் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு தனித் தமிழ் ஈழத்தைத் தவிர வேறு வழி இல்லை. விரைவில் தமிழீழம் அமைய, இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ஐநா மன்றம் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்” எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

திருவாரூரில் நடந்த தன் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்,``ஈழத் தமிழர்களின் மீட்சிக்காகவே டெசோ மாநாடு நடத்தப்படுகிறது. வெகுவிரைவில் தனித் தமிழீழ நாட்டை உருவாக்க இந்த மாநாடு பயன்படவேண்டும்’’ என்று தலைவர் கலைஞர் பேசினார். 

அடுத்தடுத்த 6 மாதத்தில் கடுமையாக பணியாற்றி ஆகஸ்ட் 12 - 2012 அன்று சென்னை அக்கார்ட் ஹோட்டலில்,  இலங்கை, இலண்டன் , ஜெனிவா, மலேசியா, சிங்கப்பூர் , கனடா, நைஜிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஈழ ஆதரவாளர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் தலைவர் கலைஞர் தலைமையில்  நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேநாளில் மாலை YMCA மைதானத்தில் மாநாடு நடந்தது. 

அந்த மாநாடு நடத்த
2009 மே முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு பின்னரும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தை கள், எஞ்சியிருக்கும் தமிழர்கள் நலனுக்காக சென்னையில் ஆகஸ்ட் 12ஆம் தேதியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களையும் - ஈழ ஆர்வலர்கள் - மனித உரிமை ஆர்வலர்கள் - தேசிய தலைவர் களை அழைத்து காலையில் கருத் தரங்கும் - மாலையில் டெசோ மாநாடும் நடத்தி தீர்மானங்களை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அன்றைய காலக்கட்டத்தில் ஈழம் என்ற சொல்லைக் கூட பயன் படுத்த தடை உத்தரவுக்கு எதிராக  உயர் நீதிமன்றம் சென்றது எல்லாம் கடந்த  கால நினைவுகள். டெசோ மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்! சென்னையில் 12-8-2012 அன்று நடைபெற்ற டெசோ மாநாட் டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதில் முக்கிய தீர்மானங் கள் பின்வருமாறு:- ராஜபக்சே நடத்திய கொடூர இன அழிப்பை ஐ.நா. அவையின் மனித உரிமைக்குழுவின் சார்பில் சர்வதேச நம்பகமான, சுதந்திரமான விசாரணைக் குழு ஒன்று அமைக் கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பும் போர்க்குற்றங்களும் கண்டறியப்பட்டு, போர் குற்றவாளி கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசே இதனை செய்ய வேண்டும் ஈழப்பகுதிகளில் சிங்கள மக்களை குடியமர்த்தும் முயற்சியை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசின் இத்தகைய கொடுஞ் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் ஐ.நா. மன்றம் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்க ளுக்கு முழு உரிமை வழங்கு வதற்கு இந்திய அரசு ஐ.நா.மன்றத் தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும். தமிழீழ பகுதிகளில் இருந்து உடனடியாக ராணுவத்தை சிங்கள அரசு விலக்கி கொள் வதற்கு ஐக்கிய நாடுகள் அவை யும், உலக நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ராணுவத்தை திரும்பப் பெறுவதை நேரடியாக கண் காணிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் அவை ஒரு பன்னாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் இருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக அல்லலுறும் தமிழர் கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லா மல் சொந்த நாட்டை விட்டு வெளி யேறியதால் பிறநாடுகளில் கைதி களாக சிறையில் வாடும் ஈழத்தமிழர் களை உடனடியாக, ஐக்கிய நாடுகள் அவையின் அகதி களுக்கான ஆணையரிடம் ஒப்ப டைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் மேற்கொள்ள வேண் டும். உலககெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்களிடம், அவர் களுடைய எதிர்காலம் குறித்து முடி வெடுக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத் தப்பட வேண்டும். ஆயிரக் கணக் கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அனை வரும் விடு தலை செய்யப் பட வேண்டும். இலங்கை தமிழர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு இலங்கை ராணுவத்திற்கு இந்தியா வில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப் பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இலங்கையில் கைது செய் யப்பட்டவர்கள் உடனே விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் வாழ் வுரிமை பாதுகாப்புக்காக தாய்த் தமி ழகத்தில் நடைபெறும் இந்த மாநாட் டினை சட்டவிரோதமானது என்றும், இந்த மாநாட்டில் கலந்து கொள் வதற்காக, இலங்கையில் இருந்து செல்பவர்கள் மீது கவனம் செலுத் தப்படும் என்றும் இலங்கை அரசின் சார்பில் மிரட்டலாக அறிவித்துள்ள னர். இலங்கை அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்பு தன்மையை இம்மாநாடு வன்மையாக கண்டிக் கிறது என்பது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழிசை அவர்களே! உங்க ளுக்கு தேவைப்பட்டால் ``கலை ஞரும் ஈழத்தமிழரும் என்ற வர லாற்று ஆவணத்தை அனுப்பி வைக் கின்றேன். மேற்காணும் தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி ஈழத் தமிழருக்காக இரு முறை ஆட்சியை இழந்தது தி.மு.க. மத்திய அரசில் இருந்த போதும் அங்கம் வகிக்காத போதும் ஈழத் தமிழர் நலனுக்காக திராவிட முன் னேற்ற கழகம் போராட தயங்கிய தில்லை என்பதை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின் றேன். இரு முறை ஆட்சியை இழந்தது தி.மு. கழகம். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி போன்றவர்களும், மத்திய அரசும் போர் நிறுத்தப்பட்டது, இனி அத்தகைய நிலை தொடராது என்று உறுதி அளித்த பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நடந்த 1991 காலக்கட்டத்தில் தான் ஜெயலலிதா அம்மையார் ``விடு தலைப்புலிகளின் இயக் கம் பயங் கரவாத இயக்கம், அது மனித நேயத் திற்கு எதிரானது, அதற்கு துணை போகும் திமுகவும் அழிக்கப்பட வேண்டும் என அறிக்கை அளித் தார். அத்தோடு, விடுதலைப் புலி களின் தலைவர் கொடூரவாதி பிரபா கரனை கைது செய்து, தூக்கிலிட வேண்டும். என்று பலமுறை சட்டமன்றத்தில் பேசியுள்ளதோடு, தீர்மானமும் நிறைவேறியுள்ளார் முதலமைச்சராக இருந்த ஜெய லலிதா. தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி யில் இருந்த போதும் 2010- 2011 காலக்கட்டத்தில் தி.மு.க.வின் நாடா ளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் செய்தார் கள். அதேசமயத்தில் தேசியத் தலைவர் களை அழைத்து டெல்லியில் டெசோ ஆலோசனைக் கூட்டம் டெல்லி காண்ஸ்டியுஷன் க்ளப்பில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் டி.ஆர். பாலு நடத்தி டெசோ தீர்மானங் களை இந்திய நாடாளுமன்றம் ஐ.நா. மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியது தி.மு.க.. பிரிட்டனில் ஈழத் தமிழர்களுக்காக உரையாற்றியவர் கழகத் தலைவர்! டெசோ மாநாட்டு தீர்மானங் களை காமன்வெல்த் உறுப்பு நாடு களுக்கு அனுப்பி நீதிவி சாரனை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது திமுக. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் குழு அமைத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபைக்கே நேரில் சென்று, ஐ.நா .மன்றத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கையெழுத்திட்ட மனு வினை தலைவர் மு.க.ஸ்டாலின் இதே போன்ற மற்றொரு மனுவினை ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணைய த்தின் துணை ஆணையர் நவநீதம் பிள்ளையிடமும் வழங்கினார். அவ்வமயம் பிரிட்டன் பாராளு மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். டெசோ தீர்மானங்களையும், திமுகவின் பொதுக்குழு தீர்மா னங்களையும் ஐ.நா மன்றம் அதன் ஆண்டறிக்கையில் வெளி யிட்டது. எந்த ஒரு இயக்கத்திற் கும் ஐநா இத்தகைய முக்கியத் துவம் கொடுத்ததாக தெரிய வில்லை. அந்த அறிக்கைகள் இத் துடன் இணைக்கப் பட்டுள்ளன. ராஜபக்ஷேவை மோடி அகமகிழ்ந்து வரவேற்றாரே! கரைபடிந்த ராஜபக்சே கரங்களை அங்கு சென்று முகர்ந் தாரே மோடி? அதே ராஜபக்சே வையும் அவர் மகனையும் கடந்த வாரம் டெல்லிக்கு வந்தபோது அகமகிழ்ந்து வரவேற்றாரே? அதைப்பற்றி ஈழத்தமிழர் நலன் மீது அக்கறை கொண்ட தமிழிசை வாய் மலர்ந்ததுண்டா? வழிநெடுகிலும் வரலாறுகள் குவிந்துள்ளன. முள்ளி வாய்க் கால் தடயங்களைப் போலவே எங்களின் மனதில் ஆறாக கவ லைகள் உண்டென்றால் அது ஈழத் தமிழர்கள் குறித்த கவலைதான். இனியாவது தமிழிசை வரலாறு அறிந்து வாய் திறக்க வேண்டும். வரலாறு தெரியாமல் புதிய வரலாற்றை கழகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு அளிக்க உள்ளது ஆளும் அடிமை அரசு. அதாவது எதிர்க் கட்சிக்கு எதிராக ஆளும் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது வேடிக்கையானது. இவ்வாறு கே.எஸ். ராதா கிருஷ்ணன் தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.)

  1. ``ஈழத் தமிழ்நாடு எனும் கோரிக்கையை கைவிட்டுவிடவில்லை. அதிலிருந்து தி.மு.க பின்வாங்கிவிடவில்லை. தமிழீழம் என்பது தி.மு.கவின் குறிக்கோள்; அது நிறைவேறும் நிலை உருவாகும்போது, அதற்காகப் படிப்படியாக முயற்சி மேற்கொள்வோம்’’ என்கிற அளவுக்குத் தி.மு.கவின் நிலைப்பாட்டில் மாற்றத்தை வெளிப்படுத்தினார், தலைவர்க கலைஞர்


ஆகஸ்ட் 5 அன்று விழுப்புரத்தில் டெசோ மாநாடு நடத்தப்படும் என அறிவித்த கருணாநிதி, பின்னர் அதை சென்னைக்கு மாற்றி, ஆக. 12-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...