Thursday, August 18, 2022

*சில சிந்தனைகள்….*

*சில சிந்தனைகள்….*

என் வாழ்க்கையில் சிலவற்றை வெறுத்து நான் விலகி நடக்க விரும்புகிறேன். 

இந்த முடிவு யாரையும் வருத்தப்பட வைப்பதற்கு அல்ல என் இதயத்திற்கு நான் உதவி செய்கிறேன்.

எனக்கு சொந்தமாக நிறைய எண்ணங்கள் இருந்தன அவற்றினை நான்  இதுவரை கொலை செய்து கொண்டு இருந்திருக்கிறேன்.

நான் புன்னகைகளை நம்புகிறவன் அவை உண்மை இல்லை என்று இப்போது உணர்கிறேன்.



என் அன்பு கண்ணுக்கு தெரியாது. இது பொய் என்று சொல்ல வேண்டாம். அதை உணர வேண்டும்.

விளையாடிய பின்பு தூக்கி எறியப்பட்ட பொம்மை நான் - வாய் திறந்து வலியை என்னால் சொல்ல முடியாது.

இது என் புயல் காலம் நீர் மட்டம் உயரும்  கடலைப் போல் என் கண்கள் கொந்தளிக்கிறது.

காகிதத்திற்க்கும் பேனாவுக்கும்மான உறவுதான் எனது அன்பு - நான் தாள்களை நிரப்பி விட்டேன். 
தற்சமயம் என்னிடம் மை தீர்ந்து விட்டது.

நான் முகத்தை பார்த்து பழகுகிறேன் என்று நினைத்திருந்தேன் ஆனால் நான் முகமூடியை தான்  பார்த்திருக்கிறேன். 

இனி நான் பக்கத்திலிருந்து முதுகை பார்ப்பதற்கு கூட விரும்பவில்லை..

நான் தள்ளி விடப்பட்ட ஒவ்வொரு தடவையும் மீண்டு எழுந்தேன்.

நியாயத்துக்கு கோபப்பட்ட போதுதான் எனக்கு எதிரி இருப்பதை தெரிந்து கொண்டேன்.

முதுகில் குத்து வாங்கிய பின்பு நானே நெஞ்சை நிமிர்த்தி எதிர்த்து நின்றேன்.

தலைகுனிந்து பதில் சொல்லாமல் முகத்துக்கு நேராக கேள்வி கேட்க ஆரம்பித்தேன்.

கூட இருந்த போலிகளை களைய முடியவில்லை நானே எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒதுங்கினேன்.

தனிமைப்படுத்தப்பட்டேன் இன்னும் சுதந்திரமாக இருக்கிறேன்.

உடைக்கப்பட்ட இதயத்தை தற்சமயம் சரி செய்து கொண்டிருக்கிறேன்.

இனி என்னை வீழ்த்தவோ ஏறி மிதிக்கவோ  யாராலும் முடியாது - நான் எல்லா துயரங்களுக்கும் பழக்கப்பட்டு விட்டேன்.

நான் முயற்சிக்காக உழைப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

ஆனால் வெற்றியை அடைய முடியவில்லையே என்று நான் விழுந்து கிடப்பதை உங்களால் பார்க்க முடியாது. ஏன் என்றால் 

என்ன கனவு என்னுடையது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

நான் பலவீனமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதுமே உயரத்தில் இருப்பதாகத்தான் உணர்வேன்.

எனது வலியையோ வலிமையையோ மற்றவர்களுக்கு நான் காட்டி கொள்வதில்லை...

மௌனம் எனக்கு பல இக்கட்டான சூழ்நிலைகளில் கை கொடுத்து உதவி இருக்கிறது.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில துயரங்கள் என் இலக்குகளை அடைய விடாமல் இடை நிறுத்தியது எனினும்...

ஒவ்வொரு நாட்களையும் பிரகாசமான பொழுதுகளாக நான் நினைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தினேன்.

நீ அதுவாக மாற வேண்டும் என்றோ அல்லது இப்படித்தான் நீ வாழ வேண்டும் என்றோ என்னை யாரும் வழிநடத்த முடியாது.

நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான்தான் தேர்வு செய்கிறேன்.

என் உணர்வுகளின் பிரதிபலிப்புகளை நான் உரிமையோடு அனுபவிக்கிறேன்.

ஆனால் அன்பு என்று வரும்போது இன்னொருவரை நேசிக்க வேண்டும் அவருக்கு உதவ வேண்டும் என…..
அதனால் ஒவ்வொரு முறையும் நம்பி நம்பி ஏமாந்து கொண்டே இருக்கிறேன்.

#தகுதியே தடை

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...