Wednesday, July 12, 2023

Senthil Balaji is not just corrupt. He ran a big well established system of corruption.

#செந்தில்பாலாஜி_கைது_குறித்து:
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்.

மேத்தா/  

கைதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜியை நீதிபதி நேரில் சென்று உடல்நிலை உடல்நிலை குறித்து விசாரித்து  அதன் பிறகு தான் அவரை நீதிமன்ற காலில் வைக்க உத்தரவிட்டார் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் அதன்படி ஆஜர் படுத்தி நீதிமன்ற காலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைதாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற செந்தில் பாலாஜியை நீதிபதி நேரில் சென்று உடல்நிலை உடல்நிலை குறித்து விசாரித்து  அதன் பிறகு தான் அவரை நீதிமன்ற காலில் வைக்க உத்தரவிட்டார் கைது செய்து 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டும் அதன்படி ஆஜர் படுத்தி நீதிமன்ற காலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

யாருடைய நிர்பந்தினாலும் அப்பாவிகளை கைது செய்ய மாட்டோம் என வாதிட்டார் மேத்தா.

 1.ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து செ. பா. தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. 
மாறாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட டி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் மனுதாரர் Habeas  corpus writ எப்படி போட முடியும் ?

ஒரு நீதிபதி ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் கொடுத்துவிட்டார்.

2. நீதிமன்ற காவலில் இருக்கும் செ. பா.க்கு ஜாமீன் மனு கேட்டு இவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டனர்.
 மனுதாரர் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, ​​அவர் காவலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். 
அவர் காவலை ஏற்றுக்கொண்ட நிலையில் எப்படி இப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்.

3. ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முகாந்திரம் எங்கே உள்ளது. 
காவலில் வைத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியாது என்பதால் விசாரணை நீதிமன்றத்தை அதிகாரிகள் நாடினர்.
 மருத்துவமனை மாற்றம் தொடர்பாக இடைக்கால உத்தரவை நாங்கள் பிறப்பித்தபோது ஏன் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென கேட்கவில்லை

4. கைது செய்து ஆஜர்படுத்திய நீதிமன்றத்தில் தான் முதலில் கேட்க முடியும். 
அதனால் அங்கு கேட்டோம், 8 நாட்கள் எங்களுக்கு காவல் வழங்கப்பட்டன.
 ஆனால் அந்த நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி விசாரிக்க முடியவில்லை.

5. காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது.
 அதனால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது....

சென்னை உயர் நீதிமன்றம் செ. பா. தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும்.
 முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியும். 
அந்த அடிபடையில் காவலில் வைத்து விசாரிக்க கோரினோம். 
இல்லாவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும்.

7. நாங்கள் ஆதாரம் எல்லாம் இல்லாமல் கைது செய்யவில்லை. 
உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

செ. பா. வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது.
 அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார்.

8. கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது; 
கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; 
ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார்.

9. கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜிப்பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 
கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன.

No comments:

Post a Comment