Sunday, July 30, 2023

#*கோ.வெங்கடசலபதி* #*டிகல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம்*

#*கோ.வெங்கடசலபதி*
#*டிகல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம்* 


—————————————
நாடு விடுதலை பெற்று, 1947க்கு பின் கிராமங்களில் பள்ளிகள் நிறுவி கிராமம் தோறும் கல்வி கொண்டு வந்தவர் கோ. வெங்கடசலபதி. இவரின முயற்சியில் விளைந்த அனைத்து கிராமங்களில் 1950 களில் கட்டப்பட்ட ஓட்டு பள்ளிகூடங்கள் இன்று அவை நம் பார்வையில் படுகிறது. அன்றைய முதலமைச்சர் ஓமந்தூரர் இந்த அரியபணியைஇவரிடம்ஒப்படைத்தார்.
காந்தியின் செயலாளர் குமரப்பாவின் உற்ற தோழர்.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தை நிறுவியவர். எனக்கு உறவினர் கூட.இன்று மதுரை மாவட்டதின் ஏன் தமிழகத்தின் அடையாளமாக வளர்ந்த ஆலய விருட்சம் போல் இன்றும் டி.கல்லுப்பட்டியில் உள்ளது.சர்வோயம், விவசாயம் மற்றும் கிராம ஆதாரப்பணிகள் என ஆக்க பூர்வமாக இவர் முன் எடுத்தார்.

காந்தி, நேரு, ஜெயபிரகாஷ் நாராயணன்,வினேபா, கிருபளாணி, ராஜாஜி,குமாரசாமி ராஜா,காமராஜர் என முக்கிய தலைவர்களின் அன்பை பெற்றவர்.
திமுக தலைவர் அண்ணா இவரின் பணி சிறக்க நேரில் வந்து 1950 களில் வாழ்த்தினார்.

திரு வெங்கடாசலபதி அவர்களை 1960 களில் தொடங்கப்பட்ட உள்ளாட்சி துறைக்கு ',காதி அமைப்பிற்கும்  commissioner ' ஆக நியமிக்க பட,அது I AS அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது,குறிப்பாக TN சேஷன்.திரு வெங்கடாசலபதி காதி,உள் ஆட்சி அமைப்புக்களில் அன்று ஆயிரக்கணக்கான வர்களுக்கு அரசு பணிக்கு வாய்ப்பு அளித்து நியமித்தார்.ஆகயால் முந்தைய தலைமுறை அரசு ஊழியர்கள் பலர் இவரால் வாழ்வு பெற்றனர்.காந்திய கொள்கைப்படி ஒரு கைம் பெண்ணை மணந்தார்.

இப்படியான மா மனிதரை இன்று பலருக்கும்
தெரியவில்லை என்பத வேதனையான சூழல்…

#கோ_வெங்கடசலபதி
#கல்லுப்பட்டி_காந்திநிகேதன்_ஆசிரமம்
#G_Venkatachalapathi

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSRPost
30-7-2023


No comments:

Post a Comment