Friday, July 7, 2023

#*காவேரி நதி சிக்கல்* #*Cauveri water disputes * #*மேகேதாட்*



—————————————
அன்று ராஜாஜி சென்னை ராஜதானி முதல்வர், 
மைசூர் மாகண முதல்வர்
கெங்கல்அனுமந்தைய்யா (1952-
1956) இவர் ராஜாஜியின் சீடர் போல…
அப்போது காவேரி நீர் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு வர தாமதமானது.  ராஜாஜி அனுமந்தைய்யாவிடம்  செல்லமாக
‘ஏ படுவா நீ கவேரியில் நீரை  திறந்து விடு, இல்லை நான் வந்து திறப்பேன்’ உரிமையுடன் சொன்னதுண்டு.

பின், முதல்வர் தேவராஜ் அர்ஸ் காலம். உச்ச நீதி மன்றத்தில் கவேரி சிக்கல் வழக்கு திரும் பெறப்பட்டது

தமிழக அரசு அனுமதி இல்லாமல் காவேரியில் கபினி, ஹேரங்கி ஹேமாவதி அணைகள் கட்டப்பட்டன..

குண்டுராவ் காங்கிரஸ் கர்நாடக முதல்வர் காலத்தில் 1980இல் துவங்கி இன்று வரை காவேரி நதி நீர் சிக்கல்…ஆரம்பம் …. பின் போராட்டங்கள்…

112.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது... முதலமைச்சர் பங்காரப்பா  ! 

தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்றால், அது எனது உயிர் போன பிறகு தான் நடக்கும்.... முதலமைச்சர் வீரப்ப மொய்லி  ! 

காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.... முதலமைச்சர் தேவகவுடா  ! 

உச்சநீதிமன்றமே உத்தரவு போட்டாலும் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விட முடியாது... முதலமைச்சர் வி.ஹெச்.பாட்டீல்  ! 

கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்கே இங்கு தண்ணீர் இல்லாத போது ( பொய்) தமிழ்நாட்டில் விவசாய தேவைக்கு நாங்கள் எப்படி தண்ணீர் தர முடியும்  ?..... முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா  ! 

சமயபுரம் மாரியம்மன் மனது வைத்து நல்ல மழை பெய்தால் மட்டும் தான் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியும்.... முதலமைச்சர் குமாரசாமி  !

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்... முதலமைச்சர் சித்தராமையா  ! 

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்... துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்  ! 

மேகேதாட் அணை கட்டுவோம் என வீம்புதனமான போக்கு…..

இவை  -

கடந்த காலங்களிலும் தற்பொழுதும் கர்நாடக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவில் முதலமைச்சர்களாக இருந்தவர்களின் பேச்சுக்கள்...

அவர்களுக்கிடையே, கர்நாடகாவில் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்திருக்கிறது.... பாஜக வை சேர்ந்த நான்கு பேர் முதலமைச்சர்களாக பதவி வகித்திருக்கிறார்கள்.... 

1. எடியூரப்பா
2. சதானந்த கவுடா
3. ஜெகதீஷ் ஷட்டர்
4. பசவராஜ் பொம்மை

#காவேரி_நதி_சிக்கல்
#Cauveri_water_disputes
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
K.S. Radha Krishnan 
கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
7-8-2023.

No comments:

Post a Comment