Monday, July 24, 2023

#ஸ்ரீவித்யா #srividya

#*ஶ்ரீவித்யாவின் வழக்கறிஞர் என்ற என் நினைவுகள்*…

—————————————
‘‘இல்லாத மேடை ஒன்றில்
எழுதாத நாடகத்தை
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்’’ 
••
*ஸ்ரீவித்யா* 24 ஜீலை 1953  பிறந்ததார்,கர்நாடக இசைப் பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான இவர், தமிழ்,மலையாளம்,  தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் 40 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இவர் 800 இக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முக லட்சண சாஸ்திரம். ஒரு சிலரைப் பார்த்தவுடனேயே காரணம் தெரியாமலேயே அவர்களைப் பிடித்துவிடுகின்றது.
மரியாதையுடன் சிலரிடம் வலியச் சென்று நாமே பேசத் தொடங்குகிறோம். உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்று நம்மையறியாமலேயே கேள்விக் கனைகளைத் தொடுக்கத் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் தோற்றப் பொலிவுதான் காரணம் என்கிறது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம். 
அப்படிமுக லட்சணம்,கண் கொண்டவர் ஶ்ரீ வித்யா.தனது மலையாள திரைப்படமான தீக்கனலில் உதவி இயக்குநரான ஜார்ஜ் தாமஸை காதலித்தார். இவரது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி 1976 சனவரி 9 அன்று அவரை மணந்தார். ஜார்ஜ் விரும்பியபடி, திருமணத்திற்கு முன்பு ஞானஸ்நானம் பெற்றார். இவர் ஒரு இல்லத்தரசியாக இருக்க விரும்பினார், ஆனால் நிதி சிக்கல்களை மேற்கோள் காட்டி ஜார்ஜ் இவரை கட்டாயப்படுத்தியபோது, நடிப்புக்கு திரும்ப வேண்டியிருந்தது. அவரை திருமணம் செய்வதில் இவர் ஒரு தவறான முடிவை எடுத்தார் என்பதை விரைவில் உணர்ந்தார். இவரது வாழ்க்கை பரிதாபமாக மாறியது. மேலும், திருமணம் 1980இல் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்துக்குப் பிறகு இவர் திரைப்படங்களில் (முக்கியமாக மலையாளம்) தொடர்ந்து நடித்தார். இந்த காலகட்டத்தில் இவரை வைத்து இயக்குனராக பல படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் பரதனைக் காதலித்தார். ஆனால் அவர்களால் அந்த உறவைத் தொடர முடியவில்லை, இறுதியில் பரதன் கே.பி.ஏ.சி லலிதாவை மணந்தார். ஜார்ஜ் தாமஸுடனான விவாகரத்து, இருவருக்கும் இடையிலான நிதி சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நீண்டகால நீதிமன்றம், வழக்கு என தொடர்ந்து. சென்னையை விட்டு வெளியேறி திருவனந்தபுரத்தில் குடியேறினார்.

முதுகெலும்பு புற்றுநோய் இவருக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக இவர் மூன்று ஆண்டுகள் சிகிச்சை பெற்றார். 2006 ஆகஸ்ட்  17, அன்று இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், ஶ்ரீவித்யா ஒரு விருப்பத்தை நிறைவேற்றி, திரைப்பட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கணேஷ் குமாரிடம் மூலம் ஒரு தொண்டு அமைப்பை பதிவு செய்ய கேட்டுக்கொண்டார். ஏழை மாணவர்களுக்கு படிப்பைத் தொடர உதவித்தொகையை வழங்குவதற்கும், தகுதியுள்ள கலைஞர்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கும் பயன்படுத்துவதற்காக இது அமைக்கப்பட்டது.சீனியர் வழக்கறிஞர் பிச்சை, நானும் வழக்கு ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் அதிகம். அப்போது நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியை பிறப்பிடமாக கொண்ட காவல் துறை உயர்அலுவலர் கொடுத்த தொல்லைகளை முறையடித்தவன் என்ற நிலையில் என் மீது மதிப்பு வைத்திருந்தார்.அவரை 1985 முதல் அறிவேன்.என்னை வக்கீல் சார் என அழைப்பார். அவர் கண்ட பாடுகள், ரணங்கள் அதிகம். அதை வெளி காட்டாமல் அமைதியாக வெள்ளந்தி சிரித்த முகத்தோடு 
இருப்பார். நான் #கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட இரு முறையும் முதலில் இவருடைய  நன்கொடையை நேரில் கொடுத்து வாழ்த்தியவர் என்பதை மறக்க முடியாது.
அம்மா வித்யா உன் நினைவுகள் என்றும் மனதில்…..

1953 ம் ஆண்டு பிறந்து 53 
வயதில் மறைந்த நடிகை! 

நடிகையில் அம்மா நடிகை என்ன, ஹீரோயின் வேஷம் என்ன... ‘நடிப்பே விருப்பம், நடிப்பதே தொழில்’ என்றிருக்க எத்தனைபேரால் முடியும்? அந்த நடிகைக்கு அம்மாவாக நடிக்கும் போது இருவருக்கும் ஐந்து வயதுதான் வித்தியாசம். அப்போது அம்மாவாக நடிக்கும்போது அந்த நடிகைக்கு 22 வயதுதான். ஆனாலும் அம்மாவாக நடித்தார். ‘இந்தக் கேரக்டரை இவரைத் தவிர யாருமே பண்ணமுடியாதுப்பா’ என்று சொல்லும் அளவுக்கு நடித்துப் 
புகழ் பெற்றார்.

அவர்... ஸ்ரீவித்யா.  படம்... ‘அபூர்வ ராகங்கள்.

அம்மாவின் அன்பு கிடைக்கவேண்டிய தருணத்தில், அம்மா கச்சேரி கச்சேரியாக மேடையேறினார், அப்பாவின் அரவணைப்பும் பார்க்கவில்லை. இறந்தார். பாட்டு ஈர்க்கவில்லை. நடனம் இழுத்தது. நாட்டிய சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி வீட்டுக்குப் பக்கத்துவீடு என்பதுதான் காரணமோ என்னவோ. அவர்களின் பாராட்டும் ஊக்கமும் முயற்சியும் பயிற்சியும் ஸ்ரீவித்யாவை மெருகேற்றின.

பிறகுதான், ‘திருவருட்செல்வர்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்றெல்லாம் படங்கள் கிடைத்தன. ‘ ஆனாலும் அடுத்தடுத்த கட்டத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் ஸ்ரீவித்யாவையும் அவர் லொட்டுலொட்டு என்று தட்டுகிற கரண்டியையும் எவராலும் மறக்கவே முடியாது. கே.பாலசந்தர், ஸ்ரீவித்யாவுக்குக் கொடுத்த அருமையான கதாபாத்திரம். ஒரே நாயகனை, மூன்று சகோதரிகளும் காதலிக்க, அதில் தோற்று நொந்துபோகிற பாத்திரத்தை, அத்தனை நேர்த்தியாகச் செய்திருப்பார் ஸ்ரீவித்யா.

அநேகமாக, டி.ஆர்.ராஜகுமாரியின் கண்களுக்குப் பிறகு, பேசும் கண்களாக ஸ்ரீவித்யாவின் கண்கள் திகழ்ந்தன. அந்தக் கண்களைக் கொண்டும் ஆகச்சிறந்த நடிப்பைக் கொண்டும், பைரவி எனும் கதாபாத்திரத்தை அப்படியே தாங்கிப் பிடித்தார் ஸ்ரீவித்யா. பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ பைரவியை யாரால்தான் மறக்கமுடியும்? நிஜத்தில் தன்னைவிட ஐந்து வயது அதிகம் கொண்ட ஜெயசுதாவுக்கு அன்னை. படத்தில், தன்னை விட வயது குறைந்த கமலின் விருப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கும் மிகப்பெரிய பாடகி. கைவிட்ட காதலன் ரஜினியால் உண்டான குழந்தையை, அனாதைக் குழந்தை என்று வளர்க்கும் கொடுமை... என நடிப்பில் புதியதொரு பரிணாமும் உயரமும் அவதாரமும் காட்டினார் ஸ்ரீவித்யா.

வெள்ளிவிழா’, ‘நூற்றூக்கு நூறு’, ’உணர்ச்சிகள்’, ‘ஆறு புஷ்பங்கள்’ என நடித்த படங்களிலெல்லாம் தனித்துத் தெரிந்தாலும் ஒருகட்டத்தில், ‘இந்தாங்க அம்மா வேஷம்’ என்றது தமிழ்த் திரையுலகம். அதேசமயம், கேரளத் திரையுலகம் விதம்விதமான கதாபாத்திரங்களை வாரி வாரி வழங்கியது. இருநூற்றம்பது படங்களுக்கும் மேல் அங்கே நடித்தார்.

இங்கே... எந்த கமலுடன் நடித்தாரோ அவருக்கு அம்மாவாகவும் ரஜினியின் முதல் படத்து நாயகியான நிலையிலும் அவருக்கு அம்மா, அக்கா, மாமியார் என்றும் நடிக்கத் தொடங்கியதெல்லாம் தமிழ் சினிமாவில் இவருக்குக் கிடைத்த சோகப்பக்கங்கள். ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல், அட்டகாசமாக ஒளிர்ந்தார், குணச்சித்திர நாயகி என்று பேரெடுத்தார்.

‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலில் ஸ்ரீவித்யாவின் முகபாவங்கள் தனித்துவமிக்கவை. ஒவ்வொரு வரிகளையும் பாவங்களாலேயே சொல்லியிருப்பார். ‘கேள்வியின் நாயகனே, இந்தக் கேள்விக்கு பதிலேதய்யா’ பாடலிலும் அப்படித்தான். படத்தின் க்ளைமாக்ஸை பாடலைக் கொண்டே முடித்திருப்பார் கே.பி. அதை ஆரம்பித்து முடித்து வைப்பார் ஸ்ரீவித்யா.

‘நூற்றுக்கு நூறு’ படத்தில், ஆசிரியரையே காதலிக்கும் கேரக்டர். ஒருபக்கம் குற்ற உணர்ச்சியை ஒரு கண்ணும், இன்னொரு பக்கம் குறுகுறுப்பை இன்னொரு கண்ணும் கேரக்டராக மாறி எடுத்துச் சொல்லும்

1953ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி 
பிறந்த ஸ்ரீவித்யா. , 53ம் வயதில் இறந்தார். ஆனாலும் ஸ்ரீவித்யாவும் அவரின் கண்களும் ரசிகர்களால் மறக்கவே மறக்கமுடியாது. ‘ஸ்ரீவித்யா...’ என்று சொல்லும்போதே ஏதொவொரு மென்சோகம் நமக்குள் சட்டென்று எழும். ஆனால் வாழ்க்கை முழுக்க சந்தோஷத்தையும் நிம்மதியையும் அனுபவிக்காமலே இறந்துவிட்டார் ஸ்ரீவித்யா.

.




#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
24-7-2023.

No comments:

Post a Comment