Tuesday, March 20, 2018

பொது வாழ்வில் செய்யும் பணிக்கு நன்றியோ, பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்காதாது தான் இன்றைய அரசியல் போக்கு..

திரு. அருள் எழிலனின் சசிகலாவைப் பற்றிய பதிவைப் பார்த்தேன். சசிகலா நல்லவரா, கெட்டவரா, குற்றவாளியா என்பது வேறு விசயம். அவர் குற்றவாளி தான்; ஆட்சி அதிகாரத்தில் தலையிட்டு தமிழகத்தை நாசப்படித்தினார். அதில் மாற்றுக் கருத்து அல்ல. இதை மறுக்க முடியாது.
ஆனால் அவரது காலில் விழுந்து கும்பிட்டு பதவியை பெற்றுவிட்டு, இன்றைக்கு அவரை உதாசீனப்படுத்துவது குறித்து அருள் எழிலனின் பதிவில் இருக்கிறது.
பொது வாழ்வில் செய்யும் பணிக்கு நன்றியோ, பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்காதாது தான் இன்றைய அரசியல் போக்கு..
ஒரு வேலை நம்மால் முடிய வேண்டுமென்றால் விடியலிலே நமது வீட்டில் காத்திருப்பார்கள்.அந்த வேலை முடிந்தவுடன் நாம் அவர்களுக்கு அந்நியர்கள். தமிழக அரசியல் களத்தில் 48 வருடங்களாக நான் பார்து; அவர்களுக்கான முக்கிய பணிகளை ஆற்றும் போது நம்மிடம் முகமகிழ்ந்து காட்டும் அக்கறையானது, பணிகள் முடிந்து அதில் தீர்வு ஏற்பட்டுவிட்டால் நம்மை முகங்கொடுத்து கண்டுகொள்ள மாட்டார்கள். நியாயாமான முறையில் நடந்து கொள்பவருக்கே இந்த நிலைமை என்றால், இன்றைக்கு குற்றவாளியாக இருக்கும் சசிகலாவின் தயவில் பதவி பெற்றவர்கள் இப்படி நடந்து கொள்வது சற்று வித்தியாசமாகத் தெரிந்தாலும் இது தான் இன்றைய அரசியல். சுயமரியாதையை காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அவசியமான பிரச்சனைகளில் மட்டும் தலையிட்டுக் கொண்டால் நம்முடைய மரியாதையும், கெளரவத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம். அதுதான் ஆரோக்கியமான நடவடிக்கை கூட.......
அருள் எழிலனின் அந்தப் பதிவு வருமாறு.
‘நடராஜன் இறந்து விட்டார். சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும். ஆனால் கணவர் சிகிச்சையில் இருந்த போதே சசிகலா அவரை பார்க்க விரும்பியிர்க்கிறார். பரோல் மனுவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கையெழுத்து தேவைப்பட்ட நிலையில் அதிமுக எம்.பிக்கள் ஒருவர் கூட சசிகலாவுக்காக கையெழுத்து போட மறுத்து விட்டனர். அதிமுகவின் பெரும்பான்மை எம்.பிக்கள் சசிகலாவால் பதவிக்கு கொண்டு வரப்பட்டவர்கள். ஒபிஎஸ் அரசியலுக்கு வந்ததும். இபிஎஸ் முதல்வரானதும் கூட சசிக்கலா போட்ட பிச்சைதான். மொத்தத்தில் இதான் அரசியல். அவங்க தலைவருக்கே இதான் கதி என்றால் மக்கள் நிலை?’
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20/03/2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...