Saturday, March 24, 2018

காவிரி நீர் பங்கீடு

காவிரி நீர் பங்கீடு குறித்து உச்ச நீதி மன்ற இறுதிப் தீர்ப்பு வந்த நாளன்று ,புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துக் கொண்டேன். அப்பொழுது கூட " இந்த தீர்ப்பு மெக்கானிசத்தை ஏற்படுத்த சொல்கின்றதே தவிர மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தவில்லை, குழப்பமாகயுள்ளது" எனக் கூறினேன். காரணம் தீர்ப்பின் வரிகளில் CMB என சுருக்கி எழுதப்பட்டு இருந்ததே தவிர வார்த்தையில் கூட Cauvery management board என விரிவாக குறிப்பிடவில்லை.
அப்போது என்னுடன் விவாதத்தில் கலந்துக் கொண்ட அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கூட "அதெல்லாம் இல்லை, நிச்சயம் மேலாண்மை வாரியம்உள்ளது ‘’என குறுக்கிட்டார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கின்றது. மத்தியில் பிஜேபி ஆட்சி புரிகின்றது. நேற்றைய தினம் கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிஜேபி, காங்கிரஸ் கட்சிகள் வெளியில் மோதல் போக்கை கொண்டாலும் காவிரி விசயத்தில் ஒற்றுமையாக பம்மாத்து வேலையை செய்கின்றார்கள். அந்த அனைத்துக்கட்சி கூட்டத்தின் இறுதி முடிவாக மேலாண்மை வாரியம் அவசியமற்றது என முடிவெடுத்து அதனை கர்னாடக தலைமை செயலாளர் ரத்ன பிரபா மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். 
‘’Karnataka government proposed a two-layer “scheme” to the Centre for the implementation of the Supreme Court verdict. 
The proposed scheme comprises a six-member Cauvery Decision Implementation Committee (CDIC) headed by the Union Water Resources Minister, and 
an 11-member monitoring agency under it, headed by the Union Water Resources Secretary.’’

நாம் காவிரியை எதிர்பார்த்து கடைமடைப் பகுதியில் கண்ணீரோடு புலம்ப வேண்டியது தான்....
பெருக்கடுத்து ஓடும் கண்ணீர்... 
இனி உப்புக்கரிப்பை தண்ணீருக்கு பஞ்சமிருக்காது...

யாரை நொந்துக் கொள்வது? தகுதியே தடை என்ற நிலையில் தகுதியற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்து அனுப்பினால் அவர்கள் ஒப்புக்கு சப்பானி ஆட்டம் தான் ஆடுவார்கள். தகுதியானவர்களை அனுப்பினால் தானே குரல் கொடுப்பார்கள்.
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்
- ஒளவையார்
பிறகு எப்படி,ஓளவையார் கூற்றின் படி கோன் உயரும்..
23-03-2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...