Monday, March 12, 2018

எதற்கும் எல்லைகளும், கண்ணியமும், அவையடக்கமும் உண்டு.

எல்லோருக்கும் பேச, குரல் கொடுக்க உரிமையுண்டு. யாரோ நடிகை கஸ்தூரியாம், சாக்ரடீஸ், சிஸ்ரோ, ரூசோ, வாலடேர் போன்ற மேதாவித்தனமான மேன்மக்கள் போல தோன்றியுள்ளது தான் அபத்தம். இப்படியும் காட்சிப் பிழைகளை பார்க்கவேண்டி உள்ளது.
நிறைகுடங்கள் என்றும் தழும்பாது. நாட்டின் பிரச்சனைகளையும் நடப்புகளையும் தெரிந்த ஆளுமைகள் அமைதியாக கருத்துச் சொல்லும்போது இப்படிப்பட்ட முந்திரிக் கொட்டைகள் ஏதாவது பேச வேண்டுமென்று பேசினால் தன்னுடைய இருப்பையும், சுயபுகழ்ச்சிக்காகவும் காட்டிக் கொள்வதற்காக மட்டுமே......
இதற்கு ஊடகங்களும், ஏடுகளும் துணை போவது தான் பத்திரிக்கா தர்மமா?

எதற்கும் எல்லைகளும், கண்ணியமும், அவையடக்கமும் உண்டு.
நீண்டகாலமாக ஆழ்ந்த வாசிப்பும், பொதுவாழ்வில் களப்பணி, போன்ற தகுதியான தரமானவர்களை மறைக்கப்படுவதாலும் இந்த மாதிரி காளான்களை போல முளைத்துக் கொண்டு தங்களை முன்னிறுத்திக் கொள்ள பேசித்திரிகின்ற இந்த காட்சிகளும் அரங்கேறுகின்றன.
என்ன செய்ய? விதியே, விதியே, தமிழ் சாதியே!!
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
11/03/2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...