Wednesday, March 21, 2018

அடப்பாவிகளா! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி பெயரில் எழுச்சி உரைகளா?

அடப்பாவிகளா!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி பெயரில் எழுச்சி உரைகளா?
கம்பராமாயணத்தை இயற்றிய சேக்கிழார் போன்ற அரிய தகவல்களுடன் உள்ள உரைக்கோவை அல்லவா?
--------------------------------------

உலக வரலாற்றியே புரட்டிப் போட்ட பல எழுச்சிமிகு உரைகள் உண்டு. மார்க் அந்தோணி, மாவீரன் அலெக்ஸான்டர், சாக்ரடீஸ், சிஸ்ரோ, டமஸ்தனிஸ், அபிரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பெர்க் உரை, தியோடர் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், லெனின், மார்ட்டின் லூதர் கிங் போன்ற பலரின் உரைகள் இன்றைக்கும் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி, தொழில் புரட்சி, சமூக மறுமலர்ச்சி (renaissance), மதச் சீர்திருத்தம் (reformation) என மாற்றத்தை உருவாக்கிய உரைகள், இந்திய விடுதலைக்கான உத்தமர் காந்தி, நேரு போன்றவர்கள் ஆற்றிய ஆளுமையான உரைகளில் இருந்து இன்றைக்கு வரை, இன்றைய பல அரசியல் தலைவர்களின் உரைகள் மக்களை ஈர்த்தன. தமிழக மேடைகளில் முழங்கிய திரு.வி.க, அண்ணா, கலைஞர், ஜீவா போன்ற முதுபெரும் தலைவர்களில் இருந்து நீண்ட பட்டியல் உண்டு. வைகோ போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த தலைவர்களின் உரைகளும், மக்களால் பேசப்பட்டது. ஒவ்வொருவரின் பேச்சுக்களும் தனித்தன்மை வாய்ந்தவை.

என்ன கருமமோ? எடப்பாடி K. பழனிசாமியின் எழுச்சிமிகு உரைகள் என்று தமிழக அரசின் பணத்தை விரயமாக்கி ஒரு புத்தகமாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதையும் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த புத்தகத்தின் அட்டை படத்தில் எடப்பாடி K. பழனிசாமி என்று பெயரின் ஆரம்ப எழுத்தை கூட தமிழ்படுத்தாமல் ஆங்கில எழுத்தில் ‘K’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்தே இவர்களது உணர்வுகளை, தன்மைகளை அறிந்தும், வாய்மூடி மௌனியாக இருக்கிறோம்.

#தமிழக_அரசியல்
#தமிழ்நாடு
#Tamil_Nadu
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.


21/03/2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...