Saturday, October 1, 2022

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் கதை சுருக்கம்!!

சோழ வம்சத்தில் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் பராந்தக சோழர்.இவருக்கு மூன்று புதல்வர்கள்.

*இராஜாதியர்.

*கண்டாராதித்தர்.

*அரிஞ்சய சோழர்.

இதில் இராஜாதியர் போரில் இறந்து விடுகிறார்.






*கண்டாராதித்தருக்கு குழந்தை இல்லை இவர் தீவிர சிவ பக்தர்.

*குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் அந்த குழந்தை பெயர் மதுராந்தகர்.இதில் இன்னொரு கருத்தும் உண்டு அவருக்கு காலம் சென்று குழந்தை பிறந்தது அதுதான் மதுராந்தகர் என சொல்வதுண்டு.

*அரிஞ்சய சோழருக்கு ஒரு பையன் அவர் பெயர் சுந்தர சோழர்.




*இந்த சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள் மூத்தவர் ஆதித்த கரிகாலன், நடுவில் குந்தவை,கடைக்குட்டி அருண்மொழி வர்மன் என்கிற இராஜராஜச்சோழன்.

*இந்த சுந்தர சோழர் அருகில் இரண்டு முக்கிய தளபதிகள் உண்டு இவர்கள் பெரிய பழுவேட்டரையார்,சின்ன பழுவேட்டையார்.

*பெரிய பழுவேட்டையார் அறுபது வயது ஆனவர் என்றாலும் உடம்பு வைரம் போல,உடம்பில் பல வீரத்தழும்புகளை பெற்றவர், கிழட்டு சிங்கம் அவர் தம்பி சின்ன பழுவேட்டையார் அண்ணன் சொல் மீறாத தம்பி.

*அப்பாவை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்கள் என்பதால் மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது அதனால் காஞ்சியிலே தங்கி விடுகிறார்.

.*அதேபோல் குந்தவைக்கும் இவர்களை பிடிக்காது.

*ஈழத்தில் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய அங்கே தங்கி விடுகிறான் அருண்மொழிவர்மன்.

*இராஜராஜச்சோழன் ஈழம் செல்ல முக்கிய காரணம்,சோழ தேசத்தின் விசுவாசி கொடும்பாளூர் தளபதி பரந்தாகன் சிறிய வேளான் படையுடன் ஈழம் செல்லும் போது படைகள் ஒன்று சேர்வதற்கு முன் பரந்தாகன் சிறிய வேளான் கொல்லப்படுகிறார் இதன் பின் ஒளிந்திருந்த வீரபாண்டியனும் இலங்கை மன்னனோடு சேர்ந்து கொள்கிறான் இதனால் கோபம் கொள்கிற சோழ படைத்தளபதி ஆதித்த கரிகாலன் எல்லோரையும் காலி செய்கிறான்.

மீண்டும் குகையில் ஒளிந்து கொள்கின்ற வீரபாண்டியனை இழுத்து வந்து வெட்டப்போகிறான். அதை அவனுடைய மனைவி வேண்டாம் என கெஞ்சுகிறாள் அதையும் மீறி தலையை வெட்டி விடுகிறான்.இதை கண்ட வீரபாண்டியனின் மனைவி சபதம் ஏற்கிறாள்.இதன் பிறகு நடக்கும் களேபரங்களை ஒடுக்கத்தான் இராஜராஜச்சோழன் ஈழம் செல்கிறார்.

*சோழ தேசத்தை ஒழிப்பேன் என சபதம் ஏற்கும் வீரபாண்டியனின் மனைவிதான் நந்தினி.

*இந்த நந்தினி தன்னை யாரேன்று மறைத்து பெரிய பழுவேட்டையார் மனைவியாக சோழ அரண்மனையில் வாழ்கிறாள்.

*சுந்தர சோழர் நோய்வாய் படுகிறார்.வானில் துருவ நட்சத்திரம் தோன்றுகிறது. அடுத்த அரசர் யார் என சோழ தேதத்தில் குழப்பம் வருகிறது.பழுவேட்டையார்கள் அடுத்து புள்ளப்பூச்சியாக இருக்கும் மதுராந்தகரை அரசர் ஆக்கி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள்.

*இலங்கை போரில் கொல்லப்பட்ட கொடும்பாளுர் தளபதி மகள் வானதியை,குந்தவை அரண்மனைக்கு அழைத்துச்சென்று தன் அருகிலே வைத்திருக்கின்றார்.இவர்தான் பின்னாளில் ராஜராஜச்சோழனின் மனைவியாகிறார்.

*உடம்பு முடியாமல் இருக்கும் தன்தந்தையை தன்னுடன் தங்கும்படி அழைப்பு விடுத்து அவருக்கு ஒரு ஓலையும்,தன் தங்கைக்கு ஒரு ஓலையும் கொடுத்து தன் நம்பிக்கையான தளபதியிடம் தஞ்சைக்கு கொடுத்து அனுப்புகிறான் ஆதித்த கரிகாலன்.

*அந்த தளபதிதான் வாணர் குலத்தை சேர்ந்த வந்தியத்தேவன். அவன்தான் பொன்னியின் செல்வனின் கதாநாயகன்.அவன் ஓலையை எடுத்துக்கொண்டு  வீராணம் ஏரி வழியாக தஞ்சையை நோக்கி வரும்போது பொன்னியின் செல்வன் கதை ஆரம்பிக்கிறது.

*வரும் வழியில் தன் பால்ய நண்பன் கந்தன் மாறனை சந்திக்க கடம்பூர் சம்புவரையர் மாளிகை வருகிறான்.ஆனால் அவன் காணும் காட்சி வேறு மாதிரி இருக்கிறது.அரசரை மாற்ற சதி ஆலோசனை அங்கு நடப்பதை உணர்கிறான்.

*அங்கு ஆழ்வார்க்கடியான் என்ற வைணவரை சந்திக்கிறார்.

*இவர் ஒரு வீர வைணவர். சோழர் குலத்து முதல் மந்திரியான அனிருத்த பிரம்மராயருடைய ஒற்றன்.

*இவன் வரும் வழியில் ஒரு நபரை சந்தேப்பட்டு பின் தொடர்கிறான். அங்கு ஒரு குழுவாக ஆதித்த கரிகாலனையும்,இராஜராஜச்சோழனை கொல்ல திட்டம் போடுகிறார்கள். அவர்கள் ரவிதாசன்,சோமன் உள்ளிட்ட பாண்டிய ஆபத்துதவிகள்.

*தஞ்சை சென்று சேரும் வந்தியத்தேவன் அரண்மனைக்குள் செல்ல முடியாமல் தவிக்கிறான் அவனுக்கு ஒரு பூ விற்கும் தம்பி உதவுகிறான் அவன் பெயர் சேந்தன் அமுதன்.

*பல இன்னல்களுக்கிடையே சுந்தரச்சோழனிடமும்,குந்தவையிடமும் ஓலையை சேர்க்கிறான் வந்தியத்தேவன்.குந்தவையின் உத்தரவுக்கிணங்க அவர் கொடுத்த ஓலையுடன் இராஜராஜச்சோழனிடம் கொடுக்க ஈழம் கிளம்புகிறான் வந்தியத்தேவன்.

*வந்தியத்தேவன் ஈழம் செல்ல கோடியக்கரையில் உதவி செய்யும் பெண்ணின் பெயர் பூங்குழலி.

*இந்த பூங்குழலி,தஞ்சையில் வந்தியத்தேவனுக்கு உதவி செய்த சேந்தன் அமுதன் முறைப்பெண்.

*இலங்கை சென்று இராஜச்சோழனை கண்டு ஓலையை கொடுக்கிறான்.இதன் படியே பழுவேட்டையார்களும் இராஜராஜசோழனை அழைத்து வர கப்பல் அனுப்புகிறார்கள்.

*அந்த கப்பலில் வந்தியத்தேவனும்,இராஜராஜனும் வரும்போது கோடியக்கரை அருகே கப்பல் புயலில் மாட்டுகிறது. இதில் மூர்ச்சையான இருவரையும் பூங்குழலி காப்பாற்றி நாகை புத்தவிகாரையில் சேர்க்கிறாள்.

*இராஜராஜச்சோழன் புயலில் சிக்கி இறந்துவிட்டதாக சோழ தேசம் எங்கும் செய்தி பரவுகிறது.மக்கள் கொதிப்படைகிறார்கள் இதற்கு பழுவேட்டையார்கள் காரணம் என நினைக்கிறார்கள்.

*ரகசியமாக தம்பியைக் காண புத்தவிகாரைக்கு வரும் குந்தவை,வந்தியத்தேவனிடம்,ஆதித்த கரிகாலனை கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரவிடாமல் தடுக்கணும் அல்லது மீறி வந்தால் அவர் உயிரை பாதுகாக்க வேண்டும் என அனுப்புகிறார்.

*ஆதித்த கரிகாலனை பழிவாங்க துடிக்கும் நந்தினி நயவஞ்சமாக கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரவைக்கிறார்.

*நந்தினி மேல் ஆதித்த கரிகாலனுக்கு ஒரு மயக்கம் உண்டு.

*கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் வைத்து ஆதித்த கரிகாலன் படுகொலை செய்யப்படுகிறான்.கொன்றவர்கள் பாண்டிய ஆபத்துதவிகள் இவர்கள் நந்தினின் ஆட்கள்.ஆதித்த கரிகாலனை காப்பாற்ற முடியவில்லையே என வந்திய தேவன் மனவேதனை அடைகிறான்.

*ஆதித்த கரிகாலன் கொலைப்பழி வந்தியத்தேவன் மேல் விழுகிறது.



இதில் இருந்து வந்தியத்தேவன் மீண்டானா சோழ தேசம் தப்பித்ததா என  *கல்கி* அவர்களின்  பொன்னியின் சொல்வன் படிக்கவும் அல்லது சினிமாவை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பொன்னியின் செல்வன் நாவலுக்கு அடிப்படை ஆதாரங்களாக அமைந்தவை இரண்டு புத்தகங்கள். ஒன்று கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்'. மற்றொன்று தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின் 'பிற்கால சோழர் சரித்திரம் 1949'.
*****

#சோழவரலாறு

சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர் மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர் நெல் இயற்கையாகவோ மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடு எனப்பட்டது சோழ நடு சோறுடைத்து என்பது பழமொழி எனவே சோறுடைத்த நாடு சோறு நாடு ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர்.

கிபி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்தைய காலப் பகுதியைச் சேர்ந்த சோழர் முற்காலச்சோழர் என வரலாற்று ஆகியவர்கள் குறிப்பிடப்படுகின்றனர் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச்சோழர் எனப்படுகின்றனர் இவர்களில் முதலாம் இராசராச சோழனும் அவனது மகனான முதலாம் இராஜேந்திர சோழனும் இந்திய வரலாற்றில் குறிப்பிடத் தக்க மன்னர்களாவர்.

கிபி பத்தாம் முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர்நிலையில் இருந்தனர் அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில் முதலாம் இராசராசனும் முதலாம் இராஜேந்திரனும் முதன்மையானவர்கள் அவர்கள் காலத்தில் சோழநாடு படையிலும் பொருளாதாரத்திலும் பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா சுமத்ரா மலேசியா வரையும் தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து விரிந்து இருந்தது இராசராசன் தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன் இலங்கையின் வடக்குப் பகுதியையும் மாலைத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார்.

சோழர்களின் கொடி #புலிக்கொடி சோழர்களின் அடையாள முத்திரையான #புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது  

சோழர் சூடும் மலர் அத்தி.

சோழர்களின் ஆட்சி தோற்றமும் வரலாறும்.

சோழர்களின் தோற்றம்பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை பொதுவாகத் தமிழ்நாட்டு அரசு குடிகள்பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள்பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும் அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன இவற்றைவிட சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள்பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய இறுதியில் கடலில் வழிகாட்டி நூல் அதன்பின் அரை நூற்றாண்டு கழித்து எனும் பெயரில் எழுதப்பட்ட நூல் என்பதை ஓரளவுக்கு உதவுகின்றன இவற்றுடன் கல்வெட்டுக்கள் செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

1.முற்கால சோழர்கள்.
2.இடைக்காலச்சோழர்கள்.
3.பிற்காலச்சோழர்கள்.
4.பின்வந்த சோழ மன்னர்கள்.
5.சாளுக்கியச்சோழர்கள்.
6.பிறச்சோழர்கள்.

#முற்காலச்சோழர்கள்.

சங்ககால சோழர் மற்றும் #தொன்மச்சோழர்.

இன்றைய தஞ்சை திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்கள் தன்னகத்தே கொண்டது சோழ நாடு இந்நாடு எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன் வேல் பல் தடக்கைப் பெருவிரல் கில்லி என்பனவாம் இவனை பரணர் கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர் மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன் இவன் வம்பர் வடுகர் ஆகியோரை முறியடித்து அவன் என அகநானூற்றுப் பாடலொன்றில் புகழ படுகின்றான்.

#முதலாம்_கரிகாலன்.

கரிகால் சோழன் இரண்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச்சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான் கரிகாலன் சோழனுக்கு திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே தாய் வீட்டில் இருந்தபடியே அரச பதவி பெற்றான் கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள் இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.

கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான் பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான் சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர் கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான் பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

கரிகால் சோழன் சேர மன்னன் பெருஞ் சேரல் ஆதன் போரிட்டான் வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதன் இன் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச்சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும் உலகின் மிகப் பழமையான அணைக்கட்டு கல்லணை விளங்குகிறது இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

#பிறசோழமன்னர்கள்.

இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் ராஜசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி போர்வைக்கோப்பெருநற்கிள்ளி பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையார் ரோடு நட்பு போன்ற கோப்பெருஞ்சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள் மேலும் நல்லுருத்திரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கண்ணன் ஆகிய மன்னர்களின் பெயர்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

#இடைக்காலச்சோழர்கள்.

களப்பிரர் வருகை.

கிபி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டில் இருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர் சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர் கிபி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரி கரையில் இருந்த உக்கிரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாக தெரிகிறது எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் அதற்காக அவர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது.

#பழையாறைச்சோழர்கள்.

தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இல்லாத சோழ மன்னர்கள் காவிரிக்கரை பகுதிகளில் குறிப்பாக உறையூர் பழையாறை நகரங்களிலிருந்து சோழநாட்டின் சில பகுதிகளை மட்டும் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டுவந்தார் இக்காலத்தைச்சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் சோழ மன்னர்களைப் பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழ்ந்தனர் என்று கூறுகின்றனவே தவிர வரலாற்றுச்செய்திகள் குறிப்பிடுகிறது.

#அரசநாட்டுச்சோழர்கள்.

களப்பிரர் மற்றும் முந்தையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கு இந்த நிலையில் மூன்றாம் கரிகாலன் களப்பிரர் முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் ஆனால் கரிகாலனின் மறைவுக்குப் பின் கிபி 550 பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு சோழர்களை ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான் காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறிப் பல்லவர்க்கு அடங்கிய வடதமிழக தென் ஆந்திர நாட்டு எல்லை புறங்களுக்கு இடம்பெயர்ந்தனர் அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்ம சோழன் வேங்கட மலைக்கு வடக்கே கடத்தை சந்திரகிரி ஆனந்தபுரம் கோலார் பகுதிகளையும் வேங்கடத்துக்கு தெற்கே காலத்தில் நெல்லூர் சிட்டூர் புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினான்.

#பிற்காலச்சோழர்கள்.

பிற்காலச்சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா விச்கிருஷ்ண சாஸ்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன அன்பில் பட்டயங்கள் திருவாலங்காட்டுச்செப்பேடுகள் கரந்தை செப்பேடுகள் ஆனைமங்கலம் செப்பேடுகள் லேடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில இவைதவிர இலக்கிய இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி மூவருலா பெரியபுராணம் பன்னிரு திருமுறைகள் திவ்ய சரிதம் வீர சோழியம் தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவிய சான்றுகளாக உள்ளன.

#விஜயாலயச்சோழன் கிபி 850 முதல் 871 வரை.

கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பல்லவர்களுக்கும் தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது இக்காலத்தில் சோழச்சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக தெரிகிறது அறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன் கிபி 850 தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களை தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான்.

முதலாம் #ஆதித்தச்சோழன் கிபி 871 முதல் 907 வரை.

விசயாலயன் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். முதலாம் ஆதித்தன் என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் வீரமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான் கிபி 850 இல் அவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிறுத்துங்க வல்லவனுக்கு வல்லவன் அவனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது இப்போரில் அவருக்கு முதலாம் ஆதித்தன் மேலைக் கங்கர் கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர்.

முதலாம் #இராசேந்திரச்சோழன் கிபி 1012 முதல் 1044 வரை.

ராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்ட பெற்றவன் இராசேந்திர சோழன் இராசராசனின் மறைவுக்குப் பின் 1012 இல் அவனது மகனான இராஜந்திரன் சோழநாட்டின் மன்னனானான் ஏற்கனவே தந்தையோடு போர் நடவடிக்கைகளிலும் நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன் ஆளுமை கொண்டவனாக விளங்கினான் இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு ஆந்திர கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.

#சாளுக்கியச்சோழர்கள்.

முதலாம் குலோத்துங்கன் கிபி 1070 முதல் கிபி 1120 வரை.

ராசராச சோழனின் தமக்கான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன்.மேலை சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் படத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான் குழப்பம் மிகுந்து அரசு நில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான். 





No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...