Tuesday, October 18, 2022

*சென்னை நகரில் எடுக்கப்பட்ட நேற்றைய இரவு நேரப் படம் இது. இத்தனைக்கும் இரவு 9 - 10 மணியளவில். இவ்வளவு வாகனங்கள் புகையைக் கக்கிக் கொண்டு போக்குவரத்து பாதிக்கக் கூடிய அளவில் காட்சிகள் உள்ளன*.




வாகனங்கள் இப்படி புகையைக் கக்கிக் கொண்டு சென்றால் பூமி வெப்பமயமாகத்தான் செய்யும். சுற்றுச்சூழலும் நிச்சயமாகப் பாதிக்கப்படும். 
  
ஒரு வீட்டிற்கு இரண்டு, மூன்று கார்களை வைத்திருக்கிறார்கள். அவற்றை வீட்டுக்குள்ளேயே கூட நிறுத்த முடியாது. வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கார்களை வாங்கிக் கொள்வதை சமூக மதிப்பாக நினைக்கிறார்கள். என்னிடம் கடந்த 40 ஆண்டுகளாக  வாகனம் இருக்கின்றது.  
  
கடந்த 25 ஆண்டு காலமாக - சமீபகாலம் வரை -இனோவா வாகனம் வைத்திருந்தேன்.  ஒருமுறை தினமணி ஆசிரியர் நண்பர் வைத்தியநாதன் முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் புதல்வர் மத்திய முன்னாள் அமைச்சர் லோக் தள் தலைவர் அஜித்சிங்கை அழைத்துக் கொண்டு சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்களைச் சந்திக்க உதவும்படி கேட்டுக் கொண்டார். நானும் அஜித்சிங்கும் சென்ற எனது இனோவா கார், அண்ணாசாலை வாகன நெரிசலில் தவித்துக் கொண்டு இருக்கும்போது, அஜித்சிங் கூறியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது: “நீங்கள் ஒருவர்தானே இந்த வாகனத்தில் பயணிக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது உங்களுக்கு 8, 9 அடி வாகனம் தேவைதானா? பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராகப் பொறுப்பில் இல்லை என்றால் சாதாரண மாருதி காரைத்தான் பயன்படுத்துகிறார்.” என்றார்.
 
அதன் பின் சிறிய வாகனங்களை சமீபகாலமாகப் பயன்படுத்தி வருகிறேன்.   இனோவா போன்ற  பெரிய வாகனத்தில் ஓட்டுநரும், பயணி ஒருவர் மட்டுமே பயணித்தாலும், சாலையில் 8 முதல் 9 அடி வரை இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. சற்று யோசியுங்கள். வெட்டி பந்தா தேவையா, சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் வாகனங்களைப் பயன்படுத்துவது நல்லதா என்பதை யோசியுங்கள்.

#ksrpost
18-10-2022.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...