Wednesday, October 12, 2022

பொதுவெளியில் மக்கள் நலப் போராட்டங்கள் நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்துக்கு முன்பிருந்தே நடந்து கொண்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களின் நோக்கங்கள், தியாகங்கள் என்பவை அளப்பறியவை. ஆனால் கடந்த 2001 - இலிருந்து இந்த போராட்டங்கள் சம்பிரதாயமாக ஆகிவிட்டன.

பொதுவெளியில் மக்கள் நலப் போராட்டங்கள் நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்துக்கு முன்பிருந்தே நடந்து கொண்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களின் நோக்கங்கள், தியாகங்கள் என்பவை அளப்பறியவை.
  ஆனால் கடந்த 2001 - இலிருந்து இந்த போராட்டங்கள் சம்பிரதாயமாக ஆகிவிட்டன. போராட்டக் களங்களுக்கு வருகிறவர்களுக்கு ரூ.200, ரூ300 என்று சம்பளம், உணவு, மதுவகைகள் தருவது என்று ஆகிவிட்டது. இது வேதனையான விடயம்.
  இப்போது நடக்கும் போராட்டங்கள் பெரிய தாக்கங்களை உருவாக்கவில்லை. பத்திரிகைகளில் அந்தப் போராட்டங்களை நடத்தும் இயக்கத்தைப் பற்றி புகைப்படங்களோடு ஒருநாள் செய்தியாக வெளிவருகின்றன. அவ்வளவுதான். ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்குணத்தோடு நடைபெறுகின்ற போராட்டங்கள் இப்போது இல்லை. ஏதோ போராடுகிறார்கள் என்று நாமும் அவற்றை எளிதாக எடுத்துக் கொண்டு, இந்தப் போராட்டங்களைக் கடந்து செல்கின்றோம்.போராட்டங்கள் இன்றைய சூழலில் புதிய வகையில் பெரும் வீரியமான யுக்திகள் தேவை.
#ksrpost.
12-102022.

No comments:

Post a Comment

hhhhhhh

hhhhhhh