Monday, October 31, 2022

#*சரணாகதி* தான் இருக்கும் தளத்தில் ஏதாவது வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு பாசாங்குத்தனமான சரணாகதியாக பிறர் காலில் விழ வேண்டும் என்ற எண்ணம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஏற்பட்டுவிட்டது.

#*சரணாகதி* 
தான் இருக்கும் தளத்தில் ஏதாவது வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு பாசாங்குத்தனமான சரணாகதியாக பிறர் காலில் விழ வேண்டும் என்ற எண்ணம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக ஏற்பட்டுவிட்டது. 

சரணாகதி என்பது வைணவத்தில் ஆழ்வார்கள் பாசுரங்களில் சொன்ன தெய்வீகமான, உண்மையான தத்துவம். இது அப்படியல்ல. போலித்தனமாக தன்னுடைய வயதையும் யோசிக்காத கையைக் கட்டி நிற்கின்ற சரணாகதி.

 இன்னொரு பக்கம் தனக்குத் திறமை இருக்கின்றதோ, இல்லையோ தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பெரிதாக ஊதி, பிழையான புகழ்பாடக் கூடிய வகையில் தங்களுக்கென்று  பிஆர் வைத்து லட்சங்கள் கோடிகளை வாரியிறைத்து பலர் பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். இது கடந்த பத்தாண்டுகளாக நடக்கின்றது. 

ஓட்டை காசுக்கு விற்பது என்கிற நிலையில் மக்கள் இருக்கும்போது, இதுதான் பொது வாழ்க்கையின் லட்சணம்.

  இந்தப் பொதுவாழ்க்கையில் இப்படிப்பட்ட நாற்றங்களுக்கிடையில் எப்படி உண்மையான களப்பணி ஆற்ற முடியும்? எனவே நான் அடிக்கடி சொல்கிற ‘தகுதியே தடை’ என்ற நிலைப்பாடு உண்மையாகிவிட்டது.  அறம், மெய்ப்பொருள், உண்மையான, நேர்மையான பொதுவாழ்க்கை என இல்லாமல், எல்லாமே பாசாங்கு,துட்டு, காசு என்றாகிவிட்டது. நேற்று வரைக்கும்   கடுமையான விமர்சனம் செய்த ஒருவரின் வாய், இன்றைக்கு  காசு கொடுத்தால் நேற்று விமர்சனம் செய்தவர்களை கூச்சமில்லாமல் புகழ் பாடுகிறது.  

 பொது வாழ்வில் களப்பணி ஆற்றுவது ஒரு காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது பொதுவாழ்க்கை என்ற நிலை இல்லாமல், சுய வாழ்க்கை, தனிமனிதர் புகழ்பாடுதல் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்ட நிலையில், நமக்கான சில அமைதியான திட்டங்களை வைத்துக் கொண்டு, சுயமாக எவரின் தயவும் இல்லாமல் செயல்படுவது விடுதலை மட்டுமல்ல, 1960, 70, 80,1990வரை அரசியல்  களத்தில் நான் பணியாற்றியவிதமாகவும் அமையும் என்று நினைக்கிறேன்.
***

நண்பர்களே,நெருக்கடிகளின்போதும் காலகட்டங்களிலும் மெளனமாக இருப்பது என்பது   நல்லது எனபார்கள் .ஆனால் நீங்கள் நினைப்பது போல் அடியேன் இல்லை. சொல்ல வேண்டியவற்றை சொல்வேன்.அதை எத்தனை பேர் கேட்பார்கள் எனக்கு தெரியாது. எதை அழிக்க முடியாதோ, எது என்றும் நிலைத்திருக்குமோ அதுதான் மெய்ப்பொருள்.

But friends saying,accept the situation and move on. Unable to yield….

#ksrpost 
31-10-2022.


No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...