Monday, October 3, 2022

Hope every politician in power remembers this Elizabeth two

இரண்டாம் எலிசபெத் மறைவும் அதன் பிறகும்!
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
 
உலகின் பெரும்பகுதி நாடுகளை தன் காலனி ஆதிக்கத்தின் பிடியில் ஒரு காலத்தில் வைத்திருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஸ்காட்லாந்த், வேல்ஸ், வடக்கு அயர்லாந்து மற்றும் தீவுகளைக் கொண்ட ஐக்கிய பிரிட்டானியமாக ஆகிவிட்டது. 
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இரண்டாம் எலிசபெத் கடந்த 8 - ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் காலமானார். அவருடைய உடல் எடின் பார்க், பின் லண்டன் வந்தது. கடந்த 19- ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இங்கிலாந்தின் ராணியாக 1952 - ஆம் ஆண்டு பிப்ரவரி 6 – ஆம் தேதி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி தனது 26 வயதில் முடிசூட்டப்பட்டார். அன்று அவர் தனது கணவருடன் பிலிப் மௌண்ட்பேட்டனுடன் ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தந்தை ஆறாம் ஜார்ஜ் மன்னர் இறந்த செய்தி கேட்டு அவசரமாக பிரிட்டனுக்குத் திரும்பி வந்தார். அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த எவருக்குமே பணியாத சர்ச்சில், முடிசூடாத எலிசபெத்தை வரவேற்க விமானநிலையத்தில் காத்திருந்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாக அன்று இருந்தது. அப்போது சர்ச்சில், பாவம்! ஒன்றும் அறியாத பெண் என கூறினார். அவரை ஆறுதல்படுத்தவே நேராக விமானநிலையத்துக்கு சர்ச்சில் வந்திருந்தார். 



இங்கிலாந்தின் ராணியாக பொறுப்பேற்ற காலத்தில் இருந்து அவரின் மரணம் வரை பிரிட்டனில் சர்ச்சில், ஹெரால்ட் வில்சன், மார்கரெட் தாட்சர், டோனி ப்ளெயர், டேவிட் கேம்ரான், போரிஸ் ஜான்சன் உள்பட பல குறிப்பிடத்தக்க பிரதமர்கள் இருந்திருக்கின்றனர். கடைசியாகப் பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்ற லிஸ் ட்ரஸ்- ஐச் சேர்த்தால் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் காலத்தில் 15 பிரதமர்கள் வந்து சென்றுவிட்டனர்.  
பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அழைக்கும்போது மாட்சிமை தாங்கிய என்ற அடைமொழியுடன்தான் சேர்த்து அழைக்க வேண்டும். இரண்டாம் எலிசபெத்தை மாட்சிமை தாங்கிய மகாராணி (HER MAJESTY, THE QUEEN HER) என்று அழைத்தார்கள். அவருடைய பெயர் தாங்கி நிற்கும் அரசாங்கத்தை மகாராணியின் அரசாங்கம் (HER MAJESTY’S GOVERNMENT) என்றுதான் அழைத்தார்கள். ரூபாய் நோட்டுகளில் அவர் படம் இடம் பெற்றிருக்கிறது. தபால்தலை, அஞ்சல் அட்டைகளிலும் அவர் படம் இடம் பெற்றிருக்கிறது. பிரிட்டிஷ் பாஸ்போர்ட்களில் அவருடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது.



பிரதமரை மகாராணிதான் நியமிக்க வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மகாராணிதான் தொடங்கி வைக்க வேண்டும். பிரதமர் ராஜினாமா செய்தால் ராஜினாமா கடிதத்தை மகாராணியிடம்தான் வழங்க வேண்டும். இவையெல்லாம் பிரிட்டனில் உள்ள நடைமுறைகள்.
பிரதமர்கள் வாரம் ஒருமுறை மகாராணியை அவருடைய மாளிகைக்குச் சென்று சந்திக்க வேண்டும் என்பது பிரிட்டனில் உள்ள நடைமுறை. பிரதமர்கள் குனிந்து சற்று மண்டியிட்டது போல மகாராணிக்கு வணக்கம் செய்வது மரபாக இருந்தது. எலிசபெத் ராணியை மதிக்காத பிரதமர்களாகக் கருதப்பட்ட ஹெரால்ட் ராபின்சன், மார்கரெட் தாட்சர், டோனி பிளேயர் ஆகிய பிரதமர்கள் வேறு வழியின்றி எலிசபெத் ராணியை ஒவ்வொரு வாரமும் சந்தித்தார்கள். பிளேயர் எலிசபெத் ராணியின் இரங்கல் கூட்டத்தில் முக்கிய பிரமுகராவும் காணப்பட்டார்.
ஒவ்வொரு வாரமும் பிரதமர் மகாராணியைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், மகாராணி பிரதமருக்கு எந்த ஆணையும் இட முடியாது. அரசாங்க நடவடிக்கைகளில் தலையிட முடியாது. அரசாங்கத்தின் எந்தச் செயலிலும் ராணி குறுக்கிட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தன் பணியை தானே செய்து கொள்ளும்.
இரண்டாம் எலிசபெத்துக்கு பல்வேறு சமுதாய அரசியல் கருத்துகளும் இருக்கவே செய்தன. வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்த் ஆகியவற்றின் மக்கள் பிரிட்டனின் ஒருங்கிணைந்த முடியரசிலிருந்து பிரிந்து போவதற்கு போராடத் தொடங்கியபோது அதற்காக வேதனைப்பட்டார். பிரிட்டனை விட்டு பிரிந்து போக வேண்டுமா என்பதற்கான பொதுவாக்கெடுப்பு ஸ்காட்லாந்தில் நடந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதை இரண்டாம் எலிசபெத் முழுமையாக ஆதரித்தார். 2016 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23- ஆம் தேதி 71.8% பேர் கலந்து கொண்ட அந்த வாக்கெடுப்பில் 51.9% மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதற்காக வாக்களித்தனர். அந்த நேரத்தில் பெரும்பான்மையான மக்களின் கருத்தே மகாராணியின் கருத்தாக இருந்தது.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசர்களின் உருவச் சித்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். சாலைகளில் ஓடும் டாக்ஸிகள் பழைய வடிவமைப்பைக் கொண்டவையாக இருக்கும். பிளாஸ்டிக் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடி போத்தல்களே இருக்கும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பாதுகாத்து வளர்த்ததில் அரச குடும்பத்தினரின் பங்களிப்பு அதிகம். அதேபோன்று ஆக்ஸ்போர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற பழைய பல்கலைக்கழகங்களை இரு கண்களைப் போல மதித்து பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். பழைமையைப் பேணுவதில் இங்கிலாந்து மக்களும் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள். அதனால்தான் இரண்டாம் எலிசபெத்தின் 40 கி.மீ. தொலைவுக்கும் அதிகமான இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டினர்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் நேரு, ஆர்.வெங்கட்ராமன் போன்ற பிரதமர்,குடியரசுத் தலைவர்கள் தங்கியதும் உண்டு. எலிசபெத் ராணி இந்தியத் தலைவர்கள் வந்தால், உபசரிப்பதை கவனமாக எடுத்துக் கொள்வார் என்ற தகவலும் உண்டு. கென்னடி ஒருமுறை அங்கே சென்றபோது அவருக்கான உணவு வகையை தானே முன்னின்று படைத்தார்.
கிரேக்கத்தில் தோன்றிய ஜனநாயகம், பிரிட்டனில் வளர்ந்து நாடாளுமன்ற ஜனநாயக முறையாக இப்போதும் உள்ளது. என்றாலும் பாரம்பரியத்தை மதிப்பது, பேணுவது என்பதில் அங்குள்ள மக்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். எனவே நாடாளுமன்றத் தாய் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் அழைக்கப்படுகிறது. அதுபோல குடியரசு என்பது இத்தாலியில் பிறந்து, அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டில் அதிபர் ஆட்சியாகத் திகழ்கிறது. உலகத்தில் முதல் அரசியல் சாசனம் ஆவணம் மகாசாசனம் என்று ஜான் அரசரால் இங்கு உருவாக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட அரசியல் சாசனம் கிடையாது. மரபுகளும், நடைமுறைகளும்தான் அரசியல் சாசனமாக விளங்குகிறது. மற்ற உலக நாடுகளில் இதைப் போல எழுதப்பட்ட அரசியல் சாசனம் இஸ்ரேலிலும், நியூசிலாந்திலும் கிடையாது.  
இங்கிலாந்தின் காலனி நாடுகள் விடுபட்டன. மீதி இருந்த நாடுகள்  காமன்வெல்த் நாடுகளாக ஒன்றிணைந்தன. 56 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இரண்டாம் எலிசபெத் இருந்து வந்தார். தற்போது இளவரசர் சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். என்றாலும் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, பஹாமாஸ், ஐமைக்கா உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்து மகாராணியை தங்களுடைய நாட்டின் ஆட்சித் தலைவராகப் பார்க்கின்றன. வரும் காலத்தில் யார் முடிசூட்டிக் கொள்கிறார்களோ, அவரைத் தலைவராக கருதுவார்கள் என்று சொல்ல முடியாது. அதற்கு எதிரான கருத்துகளும் அந்த நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பஹாமாஸில் நாட்டின் அதிபர் இது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியுள்ளார்.
பிரிட்டனின் ராணிக்கு வரி செலுத்த விலக்கு உள்ளது. ஆனால் எலிசபெத் 1992 - ஆம் ஆண்டுக்குப் பிறகு தானாகவே முன் வந்து வருமான வரி செலுத்தினார் முதலீட்டு லாப வரி செலுத்தினார்.
பொதுவாக பிரிட்டனில் இருந்து மன்னர்கள் வந்தால் டெல்லியிலேயே தங்கிவிடுவார்கள். கல்கத்தா போன்ற இடங்களுக்கு மட்டும் செல்வது வாடிக்கை. அவர்கள் வருவதையொட்டி பல நகரங்களில் சிலைகள் வைப்பது உண்டு.
ஆனால் எலிசபெத் இந்தியாவுக்கு மூன்று வந்தபோது பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1961 - ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நேரு பிரதமராக இருந்த காலத்தில் முதன்முறையாக தனது கணவர் இளவரசர் பிலிப் உடன் வருகை தந்தார். ஆக்ராவுக்குச் சென்று தாஜ்மஹாலைப் பார்த்தார். மும்பை, ஜெய்ப்பூர், வாரணாசி, பெங்களூர், மைசூர், சென்னை, கொல்கத்தா என பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார். ராஜ்கட்டிலுள்ள மகாத்மாகாந்தியின் நினைவு இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இரண்டாவது முறையாக 1983 - ஆம் ஆண்டு. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, டெல்லியில் நடந்த காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தார். இலங்கைப் பிரச்னை தொடர்பாக அங்கே பேசப்பட்டது. ஜெயவர்த்தனேயும் வந்திருந்தார்.
இந்தியாவின் 50 ஆவது சுதந்திர கொண்டாட்டத்தையொட்டி 1997 – ஆம் ஆண்டு மீண்டும் வருகை தந்தார். அவருடன் அவருடைய கணவர் பிலிப் மௌண்ட்பேட்டனும் வந்திருந்தார். அப்போது ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்தது. ஆனால் எலிசபெத் மகாராணி ஜாலியன் வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் நிறுத்திக் கொண்டார். “ சரித்திரத்தில் சில சம்பவங்கள் சோகம் தரக் கூடியவை. சில சம்பவங்கள் மகிழ்ச்சி தரக் கூடியவை. சோக சம்பவங்களில் இருந்து நாம் பாடம் கற்கலாம்” என்று சொல்லிவிட்டு மன்னிப்புக் கேட்காமல் சென்றுவிட்டார்.  
அந்த நேரத்தில் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவுக்கு இரண்டாம் எலிசபெத் வருகை தந்தார். அப்போதைய முதல்வர் கலைஞரும் அங்கு வந்திருந்தார். தரமணியில் நடந்த அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன்.
இப்போது எலிசபெத் பயன்படுத்திய பொருள்களை வாங்கி வைத்துக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். அவர் பயன்படுத்திய டிப் டீ பேக் ஒன்றை யாரோ கடத்தி, இணையத்தின் மூலம் ஏலம் விடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.9.5 லட்சம். அவர் குப்பையாக போட்டது கூட மதிப்புக்குரிய பொருளாக நினைக்கப்படுகிறது. 
கடந்த 1986 - ஆம் ஆண்டு ராணி எலிசபெத் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தை 2085 - ஆம் ஆண்டில்தான் பிரித்துப் படிக்க வேண்டும் என அவரே எழுதிக் கொடுத்துவிட்டதால், அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்ற ஆர்வம் பலருக்கும் எழுந்துள்ளது.
பிரிட்டன் அரசாங்க ரகசியங்கள் அனைத்தும், ‘ரெட் பாக்ஸ்' எனப்படும், சிவப்பு பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படும். மகாராணியிடம் இருக்கும் இந்த சிவப்புப் பெட்டியில் முக்கிய ஆவணங்கள், தற்கால நிகழ்வுகள், எதிர்காலத்தில் அமல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள், பற்றிய ஆவணங்கள் பாதுகாக்கப்படும். ராணி எலிசபெத்தின் மறைந்ததனால் இங்கிலாந்தின் மன்னராக பதவியேற்றுள்ள சார்லஸ் இந்த சிவப்புப் பெட்டியைப் பயன்படுத்துவாரா என்று தெரியவில்லை. இது பட்ஜெட் தாக்கல் செய்யும் பெட்டியைப் போல வரலாற்றில் இடம் பெற்றது.
அவர் உடல் லண்டனுக்கு வந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 14 - ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த உடல் வைக்கப்பட்ட இடத்தில் யார், யார் உடல் வைக்கப்பட்டிருந்தது என்று பித்தளை தகரத்தில் அவர்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். நான் அங்கே சென்றபோது, சர்ச்சில், விக்டோரியா ராணி, ஜார்ஜ் போன்றோரின் உடல்கள் வைத்த இடத்தில் இம்மாதிரி பித்தளை தகடுகளில் அவர்கள் பெயர்கள் இருந்ததைப் பார்த்தேன்.
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கிற்காக அரண்மனையின் தோட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பூக்கள் எடுத்து வரப்பட்டன. பூக்களைத் தேர்ந்தெடுப்பதற்கென தனித்துவமான பின்புலங்கள் இருந்தன. பக்கிங்ஹாம் அரண்மனையில் பூக்கும் பூக்களை தோட்டக்காரர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ராணிக்கு அனுப்புவார்கள். ராணிக்குப் பிடித்த பூக்கள் எவை என்று தெரியும். ராணிக்கு அந்தப் பூக்கள் பிடித்ததற்கான இன்னொரு காரணமும் இருந்தது. ராணிக்கும் – இளவரசர் பிலிப்புக்கும் 1947 - இல் திருமணம் நடந்தபோது கொடுத்த பூங்கொத்தில் இருந்து விதைகள் எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட செடியில் பூத்த பூக்கள் அவை. 
டஹ்லியாஸ், ஸ்வீட் பீஸ், ஃப்ளாக்ஸ், ஒயிட் ஹீத்தர், பைன் ஃபிர் உள்ளிட்ட ராணிக்குப் பிடித்த மலர்களால் செய்யப்பட்ட மாலையால் சவப்பெட்டி அலங்கரிக்கப்பட்டது.  
சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் பொறிக்கப்பட்ட ராணியின் கிரீடம் மற்றும் அவரது பதவி ஏற்பின்போது அளிக்கப்பட்ட செங்கோலும் வைக்கப்பட்டு இருந்தன. சவப்பெட்டியில் ராணி எலிசபெத்தின் மகன் – புதிய அரசர்- சார்லஸ் எழுதிய கடிதமும் வைக்கப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தில் சார்லஸ், 'உங்கள் அன்பான நினைவில் சார்லஸ் ஆர்' என்று எழுதி இருந்தார்.
புதிய மன்னர் சார்லஸ் பதக்கங்களுடன் கூடிய சடங்கு சீருடையை இறுதிச் சடங்கு நடந்த நாள் முழுவதும் அணிந்தார். கடந்த 2012 -இல் ராணி சார்லஸுக்கு வழங்கிய சிவப்பு வெல்வெட் மற்றும் தங்க பீல்ட் மார்ஷல் கோலை எடுத்துச் செல்வார். சார்லஸ் மட்டுமல்ல, ராணி எலிசபெத்தின் அனைத்து பிள்ளைகளும் ராணுவ உடைகளையே அணிந்து இருக்க வேண்டும். பேரன் இளவரசர் வில்லியமும் ராணுவ உடையை அணிந்து இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விஷயம், அரச குடும்பத்தின் பதவியில் இருக்கும் ஆண்கள் பாரம்பரியமாக இராணுவ சீருடைகளையே அணிவார்கள். பதவியில் இல்லாத ஆண்கள் கருப்பு கோட்டுகளை அணிவார்கள். கடந்த ஆண்டு ராணியின் கணவர் அரசர் பிலிப் இறந்த போதும் இதேபோன்ற உடைகள் தான் அணிந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இரண்டாம் எலிசபெத் ராணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சடங்குகள் செய்யப்பட்டன. 1947 - ஆம் ஆண்டு ராணி - இளவரசர் பிலிப் திருமணத்தின்போது வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் பாடப்பட்ட ‘தி லார்ட் இஸ் மை ஷெப்பர்’ என்ற பாடல் பாடப்பட்டது.  
அங்கிருந்து 6 ஆயிரம் ராணுவ வீரர்கள் புடைசூழ, ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ஆயுதம் தாங்கிச் செல்லும் வாகனத்தில் லண்டன் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு ராணியின் உடல் விண்ட்சார் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உள்ள ஜார்ஜ் தேவாலயத்தில் பிரார்த்தனைக்குப் பிறகு, இறுதிக் கட்டமாக அரச வம்சத்தின் மூத்த உறுப்பினர் சாம்பர்லின் மெல்லிய கட்டையை உடைத்து முடித்து வைத்தார். அவருடைய கணவர் பிலிப், தந்தை, தாய், சகோதரியின் கல்லறைகளுக்கு அருகில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. 
இரண்டாம் எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இலங்கை குடியரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், துருக்கி அதிபர் ரிசெப் எர் டோகன், ஜப்பானின் நரூஹிட்டோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், மற்றும் உலகநாடுகளைச் சேர்ந்த 500 தலைவர்கள் உள்ளிட்ட 2,000 பேர் பங்கேற்றனர். உலகத் தலைவர்களுக்கான இரங்கல் குறிப்பு புத்தகத்தில் திரௌபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யா, பெலாரஸ், மியான்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, வெனிசுலா ஆகிய 7 நாடுகளுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய அழைப்பு விடுக்கப்படவில்லை. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. சீனாவை தவிர்க்க நினைத்தாலும் அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். தைவானும் கலந்து கொண்டது. இரங்கல் குறிப்பு புத்தகத்தில் தைவான் கையெழுத்திடக் கூடாது என்று சீனா தெரிவித்தது.
எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்ற 19- ஆம் தேதி இலங்கையில் துக்கதினமாக அனுஷ்டிக்கப்பட்டது.  
எலிசபெத் ராணியின் மறைவைத் தொடர்ந்து பல புதிய குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
எலிசபெத் ராணியின் கிரீடத்தில் உள்ள வைரத்தை திருப்பித் தருமாறு தென் ஆப்பிரிக்காவில் இருந்து குரல் எழுந்துள்ளது. இணையத்தில் change.org என்ற ஆன்லைன் கையெழுத்து இயக்கமும் இதற்காக நடத்தப்பட்டு வருகிறது. இதில் இது வரை 6000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். ‘கிரேட் ஸ்டார் ஆஃப் ஆப்பிரிக்கா’ என்றழைக்கப்படும் இந்த வைரத்தின் இன்னொரு பெயர் கல்லினன். 1905- இல் தென் ஆப்பிரிக்க வைரச் சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட பெரிய வைரம் ஒன்றின் ஒரு பகுதி தான் இது. தென் ஆப்பிரிக்கா பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது அப்போதைய ஆட்சியாளர்களால் இந்த வைரம் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதுதான் தற்போது ராணியின் கிரீடத்தில் உள்ளது 
அதுபோன்று செங்கோலில் உள்ள நீர்த்துளி வடிவிலான 530.2 கேரட் வைரம் உள்ளது. அதையும் திருப்பி அளிக்குமாறு தென் ஆப்பிரிக்கா கோருகிறது. இது 1600 களில் ராணி அணிந்திருந்த கிரீடத்தில் பொருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வைரத்தின் பண மதிப்பு தெரியவில்லை. என்றாலும் இதன் வரலாறு இதன் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆந்திராவின் சுரங்கம் ஒன்றில் இருந்து பல நூற்றாண்டுகளுக்கு வெட்டியெடுக்கப்பட்ட மிகப் பெரிய வைரம்தான் கோஹினூர். உலகி லேயே மிகப்பெரிய வைரமாக (105 கேரட்) அது கருதப்படுகிறது. அதன் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
இது 14 -ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதைய தெலுங்கானாவின் வாரங்கலில் உள்ள ஓர் கோவிலில் தெய்வத்தின் ஒரு கண்ணாக பயன்படுத்தப்பட்டது. மாலிக் கஃபூர் (அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல்) அதை கொள்ளையடித்தார் என்றும், அதன் பின் முகலாயப் பேரரசின் பல ஆட்சியாளர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகு, சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங் லாகூரில் அதை வைத்திருந்தார். 1849- இல் மகா ராஜா ரஞ்சித் சிங்கின் மகன் திலீப் சிங் ஆட்சியின் போது விக்டோரியா மகாராணிக்கு வைரம் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 
கோஹினூர் வைரத்தை இந்தியா வுக்கு திரும்பிக் கொண்டுவர வேண்டும் என்ற குரல்களும் அவ்வப்போது எழுவது உண்டு.
அதேபோல் தான் எகிப்திலும் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட ரோசட்டா ஸ்டோனை மீட்டெடுக்க வேண்டும் என்று பல காலமாக பலரும் கோரி வருகின்றனர்.
இரண்டாம் எலிசபெத் மரணம் அடைந்த பிறகு, பிரிட்டனில் ஏற்கெனவே இருந்த சில விஷயங்கள் மாற்றம் பெறும். பிரிட்டனின் தேசியகீதம் ‘GOD SAVE THE QUEEN’ என்பது ‘GOD SAVE THE KING’ என்று மாறும். ‘HER MAJESTY’S SERVICE’ என்பது ‘HIS MAJESTY’S SERVICE’ என மாறும். பிரிட்டனிலுள்ள சுமார் ஒரு லட்சம் அஞ்சல் பெட்டிகளில் இரண்டாம் எலிசபெத் அரசி என்பதைக் குறிக்கும் ERII எழுத்துகள் மன்னர் மூன்றாம் சார்லஸைக் குறிக்கும்வகையில் CRIII என்று மாற்றப்படும்.
நீண்ட காலம் அரியணையில் இருந்தவரான ராணி இரண்டாம் எலிசபெத் நாட்டின் பெரிய செல்வந்தர்களில் ஒருவர். அவருக்கு வாரிசுரிமையாக அரண்மனைகள், மணி மகுடங்கள், நிலங்கள் ஆகியவை சொந்தமாயின. அவை தவிர, தனித்துவமான பொருள்கள் சிலவும் அவருக்கு சொந்தமாக இருந்தன. அவை அனைத்தும் தற்போது புதிய அரசர் மூன்றாம் சார்லஸுக்கு சொந்தமாகியுள்ளன.  
இங்கிலாந்திலும், வேல்சிலும் உரிமையாளர் அடையாளம் இல்லாமல் இருக்கும் அனைத்து வெள்ளை மியூட் அன்னங்களும் அரசிக்கு அல்லது அரசருக்கு சொந்தம் என்கிறது சட்டம். கடற்கரையில் இருந்து 4.8 கி.மீ. தொலைவுக்குள் இருக்கும் டால்பின்களும் ராணிக்கு சொந்தமானவை.  
இப்படி உரிமை கொண்டாடுவதற்கு ஒரு சட்ட அடிப்படை உள்ளது. இரண்டாம் எட்வர்ட் அரசராக இருந்தபோது 1324 -இல் இந்த சட்டம் இயற்றப்பட்டது. ‘கடலிலோ, வேறெங்குமோ உள்ள திமிங்கிலங்கள், ஸ்டர்ஜன் மீன்கள் ஆகியவற்றை அரசர் தனது ஆளுகைக்குள் எடுத்துக்கொள்ளலாம்’ என்கிறது அந்த சட்டம். இந்த சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. திமிங்கிலங்களும், டால்பின்களும் ‘ஃபிஷஸ் ராயல்’ என்று அழைக்கப்படுகின்றன. இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து இந்த உயிரினங்கள் இனி சார்லஸுக்குச் சொந்தமாகும்.  
சண்டே டைம்ஸ் 2022- இல் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் ராணியின் தனிப்பட்ட செல்வம் 37 கோடி பவுண்டுகள் இந்திய மதிப்பில் 3356 கோடியே 39 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சொத்துகள், நகைகள், பத்திரங்கள், கலைப்பொருள்களாக உள்ளன. இவை எல்லாமும் இனி புதிய அரசர் சார்லஸுக்குச் சேரும். 
இவை தவிர, ராணி உயிர் நீத்த பால்மோரல் கோட்டை போன்ற சில மிக அற்புதமான சொத்துகள் அரச குடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமானவை. இவை தவிர, அரியணைக்கு சொந்தமாக வேறு பல அரசு இல்லங்களும், பரந்த பொது நிலங்களும் உள்ளன. கிரௌன் எஸ்டேட் என்று அறியப்படும் இவை அரசகுடும்பத்துக்கு தனிப்பட்ட முறையில் சொந்தமானவை அல்ல. இவற்றை அவர்கள் விற்க முடியாது.
பெர்க்ஷயரில் உள்ள அஸ்காட் பந்தயப் பாதை, லண்டன் ரெஜன்ட் வீதியின் பெரும் பகுதி ஆகியவை கிரௌன் எஸ்டேட்டை சேர்ந்தவை.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் பெரும்பாலான கடற்கரைகளில் இருந்து 12 நாடிகல் மைல் தொலைவுக்கான கடற்பரப்பும் அரியணைக்கு சொந்தமானவை. கடலோர காற்றாலைகளை அமைக்கும் நிறுவனங்கள் இதனால், அரியணைக்கு ராயல்டி செலுத்தவேண்டும்.
கிரௌன் எஸ்டேட் சொத்துகளில் இருந்து வரும் வருவாயில் 25 சதவீதம் அரசருக்கு சொந்தமானவை. 15 சதவீதமாக இருந்த இந்த அளவு 2017- இல் 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது.  
இரண்டாம் எலிசபெத்தின் மகனான இளவரசர் சார்லஸுக்கு அவருடைய 70 ஆவது வயதில் தாயின் மணிமுடி மட்டுமல்ல, திரண்ட பல்வேறு சொத்துகளும் கிடைத்திருக்கின்றன. அவரும் தனது தாயாரைப் போல நூறாண்டுகள் வாழ்க என வாழ்த்துவோம்! At the funeral service of late Queen Elizabeth, towards the end of the service, I was touched by the Archbishop's last words before the body was taken to the grave for burial. He said: "Now let us remove all symbols of power from the coffin, so that our sister, Elizabeth can be committed to the grave as a simple Christian".
Immediately, the staff of office was removed, then the scepter, the crown followed and all valuables were removed. The Queen was buried with NOTHING. Notice that the Archbishop did not include "Queen" to her name at this point too.
Life is indeed vanity. It is transient, and that teaches us humility. Humility in power, humility in relating with others, humility in our acquisition of wealth, and humility in all our endeavors, because in the end, we will all go back with NOTHING. Hope every politician in power remembers this https://thaaii.com/2022/09/28/the-death-of-elizabeth-ii-and-after/

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...