Tuesday, October 11, 2022

*பாராட்டுக்குரியது*. *சபாஷ்!*ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, பென்ஷனைப் பெற்றுக் கொண்டு இப்படிப்பட்ட கருத்துகளைச் சொல்வது பாராட்டுக்குரியது. சபாஷ்*! *ஆனால்…*



 1970,1980,1990 -  களில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டங்களில் - இலங்கைத் தமிழர் பிரச்னையானாலும், வழக்கறிஞர் உரிமைப் பிரச்னையானாலும், இராஜீவ் படுகொலைக்குப் பின் தூக்குத்தண்டனை பிரச்னையானாலும் - இவர் களத்திற்கு வந்து போராடினாரா? அது தொடர்பான அவருடைய கருத்துகளையாவது சொன்னாரா? 
 சரி, நீதிபதி ஆன பிறகாவது புரட்சிகரமான மக்கள் நலத் தீர்ப்புகளை வழங்கினாரா? ஓய்வு பெற்ற பின் பேசுபவர், வழக்கறிஞராக இருக்கும்போது ஏன் பேசவில்லை? 
 நானெல்லாம் அப்போது உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் போராட்ட களங்களில் இருந்தவன். சில வழக்கறிஞர்களைக் கேட்டால் சொல்லுவார்கள். 
 இப்படி சிலர், தான் வகித்த பதவிகளினால் பெருமை தேடிக் கொள்வது நல்லதுதான். ஆனால் அதற்கு முன் அவர்கள் என்ன செய்தார்கள்? இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பணி என்ன? என்பதுதான் நமது கேள்வி.
#ksrpost
11-10-2022

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...