Friday, January 10, 2025

#நடிகைகஸ்தூரி_தெலுங்குபேசும்

 #நடிகைகஸ்தூரி_தெலுங்குபேசும் மக்களை வேண்டுமென்றே வன்மமாக வெறுப்பாகப் பேசிய விவகாரத்தில் மூன்று நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பாய்ந்து அவர் கைது செய்யப்படுகிறார்.

நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியவை :
தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது.
தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள்
சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான். பலவகையில் நீதிபதி இது எவ்வாறு தவறு என்று விளக்கி இருக்கிறார்! உலகமெங்கும் வாழும் தெலுங்கர்களின் மனம் புண்பட்டு இருக்கிறது! தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திரா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வாழக்கூடிய மக்களையும் இந்தப் பேச்சு பாதிக்கும் என்றுகூடத் தெரியாமல் வேண்டுமென்றே கஸ்தூரி பேசியிருக்கிறார்!
இவ்வாறு வந்தேறிகள் அவர்கள் இவர்களென்று அவதூறாக பேசுபவர்களுக்கெல்லாம் நடிகை கஸ்தூரியின் கைது ஒரு பாடமாக அமையும்! பிரிவினைவாதிகள் மொழி இனத்தின் பெயரால் கலவரத்தை உண்டு செய்பவர்கள் தான் இப்படிப் பேசுவார்கள்!தேச நல்லிணக்கம் குறித்த அக்கறையற்ற இப்படியான தான்தோன்றித்தனமான பேச்சுகளுக்கு உரிய தண்டனை கிடைக்கத்தான் செய்யும். வேற என்ன சொல்ல!

No comments:

Post a Comment

2023-2024