#வெம்பக்கோட்டை_விஜயகரிசல்குளத்தில்_அகழாய்வு
———————————————————-
எங்கள் பகுதியில்,விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் தொல்லியல்த் துறை சார்பில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடந்திருக்கிறது .இங்கு 34 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.
அதற்கிடையே ஒன்றரை மீட்டர் ஆழத்தில் சுமார் 15 மில்லி கிராம் எடையுள்ள தங்கமணி ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது !இது குறித்து நாணய ஆய்வாளர் மன்னர் மன்னன் கூறியதாவது !”தமிழக வரலாற்றுக்கு முதன்மை ஆதாரங்களாக உள்ளவை சங்க இலக்கியங்கள்! அவற்றில் காசு பொன் கானம் போன்ற சொற்கள் உள்ளன!.
சங்க இலக்கியங்களில் உள்ள காசு என்ற சொல் பண்டைய நாணயங்களைக் குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் பலர் கருத்துச் சொல்லியுள்ளார்கள்! தற்போது காசு என்பதும் நாணயத்தை குறித்தாலும் சங்க காலத்தில் அணிகலங்களால் கோர்க்கப்பட்ட மணிகளையே காசு என்றார்கள். நான் சிறுவயதாக இருக்கும் போது சிலர் மணிக்காசு என்றும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்!
தற்போது காசு என்பது நாணயத்தை குறித்தாலும் சங்ககாலத்தில் அணிகலன்களில் கோர்க்கப்பட்ட மணிகளையே காசு என்றார்கள் அதாவது பெண்களின் கழுத்தணி இடையணி குழந்தைகளின் காலணிகளிலும் இந்த மணிகள் கோர்க்கப்பட்டன! குறுந்தொகையில் “புது நூல் நுழைத்த பொற்காசு” என்ற வரி உள்ளது .அதில் கிளி கொத்திய வேப்பம்பழம் போன்றது என விளக்கம் கூறப்பட்டுள்ளது!
அதேபோல் வேறு இலக்கியங்களில் வேப்பம்பழம் உகாப்பழம் நெல்லிக்கனி குமிழம்பழம் கொன்றைப் பூ மொட்டு ஆகியவை காசுக்கு உதாரணங்களாக கூறப்பட்டுள்ளன.
சங்க காலத்தின் பிற்பகுதியில் ரோம் நாட்டில் இருந்து வந்த நாணயங்களை பெண்கள் மணி போல கோர்த்து அணியும் வழக்கம் வந்தபின் நாணயத்துக்கு காசு என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் !அதுவே பின் காசுமாலை என்ற பெயரில் நிலைத்திருக்கிறது”. என்று சொல்லும் மன்னர் மன்னன்
“அதன்படி சங்க இலக்கியங்கள் சொல்லும் தங்கக்காசு தான் தற்போது வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்துள்ள தங்கமணியாகும்! நம் காசு என்ற சொல் தான் காலணி ஆக்கத்தின் போது “கேஷ்” ஆக மாறியது என்றும் தனது பயணக்குறிப்புகளில் அவர்
கூறியுள்ளார். மிக சிறப்பாக இந்த ஆய்வு நடந்திருக்கிறது! தொடர்ந்து இன்னும் பல அரிய கண்டுபிடிப்புகள் வரும் என்று நினைக்கிறேன்! வாழ்த்துகள்.!
No comments:
Post a Comment