தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை சங்கங்கள் யாவும் தங்கள் மீதான திமுக அரசின் கவனிப்பற்ற தன்மையைக் கண்டித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டுள்ளன.
பள்ளிகளில் ரெகுலர் ஆசிரியர்கள் போக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமித்தல் தவறானது என்றும் இன்னும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து முதல்வரை சந்திக்க சென்றால் அவர்களை ஸ்டாலின் சந்திக்க மறுத்து விட்டார்.
அடுத்த தேர்தலில் உங்களை மறுபடியும் எதிர்க்கட்சி தலைவராக்கி வைப்பது தான் சிறந்தது என்று கருதுகிறோம்! என்று அறிக்கைகள் விட்டுப் போர் கொடி துவக்கியுள்ளார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் பிரச்சினையை இந்த திமுக அரசு கவனிக்க தவறிவிட்டது என்பது பரவலாக தமிழ்நாடு முழுக்க அதிருப்தியாக இருக்கிறது.
கட்சிப்பதவியில் இருப்பவர்கள் மற்றும் குடும்ப வாரிசு அரசியலை நடத்திக் கொண்டிருப்பவர்கள் மாதம் மக்களுக்கு பணம் கொடுக்கிறோம் அதனால் எங்கள் வாக்கு வங்கி வலிமையாக இருக்கிறது! என்கிற பெயரில் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் உதாசீனம் செய்கிறார்கள். அனைத்து துறைகளிலும் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது என்பதே அரசு ஊழியர்களின் செய்தியாக இருக்கிறது!
எல்லாத் துறைகளிலும் தங்கள் கால்களைப் பிடித்த கட்சிக்காரர்களு
க்கு அரசுப் பதவி கொடுத்து தங்களுக்கு பக்க பலமாக வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மற்ற எல்லோரையும் ஒரு சாதி நாட்டாமை போல அதிகாரம் செய்கிறார்கள்!
எந்த ஒரு கோரிக்கை வைத்தாலும் எதையும் செய்யாமல் ஒத்திப் போடுவதே அவர்களது வேலையாக இருக்கிறது
என்கிற குற்றச்சாட்டும் வருகிறது!
•••
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டுக் கூட்டமடா! தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா!
No comments:
Post a Comment