Friday, January 10, 2025

#விஜய் #தமிழகவெற்றிக்கழகம்

 #விஜய் #தமிழகவெற்றிக்கழகம்

———————————————————-
விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் என்பதற்காக என்னென்ன மாதிரியெல்லாம் பேச்சையெல்லாம் இந்த ஊடகவாதிகள் தாறுமாறாகப் பேசுகிறார்கள்! விஜய்க்கு எதிர்வினை செய்கிறேன் என்ற பெயரில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் இல்லாதது பொல்லாததுமான கற்பனைகளால் வாய்க்கு வந்ததைப் பேசும் யூகங்களால் அவரை வீழ்த்தப் பார்க்கிறார்கள்.
விஜய் சிறு வயது முதல் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழராகத்தானே இதுவரை இந்த மண்ணில் இயங்கி வருகிறார். தமிழில் பிரசித்தி பெற்ற ஒரு நடிகராக இருந்து தமிழ் மக்களோடு அறிமுகமாகி இன்னும் பிற மாநிலங்களிலும் அவர் தமிழ் நடிகர் என்ற அடையாளத்தைத்தான் தன் செல்வாக்காகத் தக்க வைத்திருக்கிறார்.
எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது மலையாளி என்றார்கள் இன்னும் எங்களைப்போல இருப்பவர்களை தெலுங்கர்கள் என்று சொல்கிறார்கள்! எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொண்டு நாங்கள் தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.
இப்படி நேர்மையற்று திசை திருப்பும் வேலைகளைச் செய்து வருவதால் நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்! நன்றாக சிந்தித்து பாருங்கள்! இது நீங்களே உங்களைத் தாழ்த்திக் கொள்கிற வேலை!
இப்படி எல்லாம் நீங்கள் திசை திருப்புவதால் விஜய் ஒரு இந்தியன் ஒரு தமிழ் வாழ்வை உடையவர் மக்களிடையே தனிப்பட்ட செல்வாக்கு வைத்துள்ளார் என்பதை நீங்கள் மறைத்து விட முடியுமா?
இப்படி உருட்டி உருட்டி மலையாளி தெலுங்கன் கன்னடன் என்று சொல்லி சொல்லியே நீங்கள் நாசமாகத்தான் போகிறீர்கள்? இதெல்லாம் எம்ஜிஆர் காலத்திலிருந்து தொடர்வது தான்!
உருட்டுங்கள் உருட்டுங்கள்! தமிழ்ச் சாதியே இந்த தமிழகத்தை என்ன செய்யப் போகிறாய்? தவறான கேடு கெட்ட பிரச்சாரம்…. இந்த மானம் கெட்ட தருமிகள்⁉️
11-11-2024

No comments:

Post a Comment

2023-2024