Tuesday, September 13, 2016

ரூ.35 கோடி பஸ்கள் நாசம்

அழைத்து 2 மணி நேரம் கழித்து போலீஸ்.... ரூ.35 கோடி பஸ்கள் நாசம்.. 
..
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது, தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் பெங்களூரில் நேற்று கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் தீக்கிரையாகின. அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற தமிழக நிறுவனங்கள் பெங்களூரில் அடித்து நொறுக்கப்பட்டன.
மாலையில் கேபிஎன் டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 35 பஸ்களை கலவரக்காரர்கள் தீயிட்டு பொசுக்கினர். ஸ்லீப்பர் கோச் வகை பஸ்கள் இவை. மொத்த மதிப்பு ரூ.35 கோடிவரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனால் போலீசார் கலவரக்காரர்களை ஒடுக்க முற்படவில்லை. ஒவ்வொரு பஸ்சாக எரித்து, அவை முழுக்க எரிந்து நாசமாவதை பார்த்து கை தட்டி சிரித்தனர் கலவரக்காரர்கள்.  பஸ்களின் டயர்கள் வெடித்து சிதறியது வெடிகுண்டு சத்தம் போல இருந்தது.
..
தீயணைப்பு வீரர்கள்.....
ஒருவழியாக பஸ்கள் எரிந்து முடியப்போகும் நேரத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து மேலும் சில பஸ்கள் எரியாமல் தடுத்தனர். கேபிஎன் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சேலத்தை சேர்ந்தவர் என்பது கன்னட அமைப்பினரின் இந்த கோபத்திற்கு காரணம்.
    

இதனிடையே, கேபிஎன் பஸ் எரிக்கப்பட்டபோது, 144 தடை உத்தரவு அமலில் இருந்தும் போலீசாரால் அதை தடுக்க முடியவில்லை என்பது பெங்களூர் காவல்துறை திறமையை கேள்விக்குள்ளாக்குவது போல அமைந்தது என தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை ஊர்ஜிதப்படுத்துவது போல கேபிஎன் டெப்போ மேனேஜர் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

    ..
பிசியாக இருந்ததாம்.....
பெயர் தெரிவிக்க விரும்பாத டெப்போ மேனேஜர், கன்னட செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது: கலவரக்காரர்கள் சும்மா நிறுத்தி வைத்திருந்த பஸ்களை எரிக்க முற்றுகையிட்டனர். இதை பார்த்ததும், காவல்துறை அறிவித்திருந்த அவசர தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அது பிசியாக இருந்தது.
    

தொடர்ந்து காவல்துறை எண்ணுக்கு தொடர்பு கொண்ட பிறகு, ஒருவழியாக போன் இணைப்பு கிடைத்தது. தகவலை சொன்னோம். ஆனால், போனில் தகவவல் சொன்ன 2 மணி நேரத்திற்கு பிறகுதான் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள்ளாக எல்லாமே முடிந்து, வெறும் கரிக்கட்டைகள் போல பஸ்கள் காட்சியளித்தபடி இருந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...