Friday, September 2, 2016

'திருநவேலி' மக்களோட சிறப்பு தமிழ்:

'திருநவேலி' மக்களோட சிறப்பு தமிழ்:

அவன் சரியான "நப்பி" பயல்லா...

உன் "பைதா" சரியா ஓடல. நல்லா பாருடே...

"சம்படத்துல" இட்லி வச்சிருக்கேன்.

"கறுக்குற" நேரத்துல எங்க போற?

ஏ.. "சாரத்தை (சாரம்)" ஒழுங்கா கட்டம்டே...

ஏல, "பைய" வாயேன். ப்ளைட்டையா பிடிக்க போற...?

ஏ "கொண்டி"யை ஒழுங்கா போட்டிருக்கியா?

அவன் சரியான "கோட்டி"ல்லா...

"அந்தால" அவனை "வளவு"குள்ள வச்சு நாலு "சாத்து" சாத்தனும்ல...

நம்ம "சேக்காளி" மெட்ராஸ்ல எப்படின்னே இருக்கான்?

ஏட்டி "மச்சி"ல காயப்போட்டுருக்கிற துணியை எடுத்துட்டு வந்துரு.

"கொடைக்கு" மாமன் வருவாவளா?

ஏலா... இந்த "தொரவா"வை எங்க வச்ச? அந்த "மாடத்துல" இருக்கும். பாருங்க.

ஏ "ஆக்கங்கெட்ட கூவை"... ஒனக்கு ஒருதடவை சொன்னா மண்டையில ஏறாதா?

இன்னைக்கு ஒரு "துஷ்டி" வீட்டுக்கு போயிருந்தேன்.

அங்கன போய் என்ன பண்ணப் போறிய? இங்கன "செத்தநேரம்" ஒட்காந்துட்டுதான் போங்களேன்...

இந்தா இப்பதான் செத்த "குறுக்க சாச்சு" படுத்தேன். அதுக்குள்ளே யாரோ கதவை தட்டுறா... போய் பாரு யாருன்னு...

"செத்த மூதி" என்ன பேச்சு பேசுதான். அந்த "வாரியலை" எடுத்து நாலுசாத்து சாத்து. அப்பத்தான் அடங்கும்.

அவன் "இடும்பு"க்குன்னே பண்றாம்பா. சரியான இடும்பு பிடிச்ச பய...

ஏம்ல "ஆச்சி" "சீக்கு"ல விழுந்து செத்து கெடந்த பிறவுதான் பாக்க வரலாம்னு இருக்கியோ?

அண்ணாச்சி பாத்தியளா, இந்த மெட்ராஸ்காரன்"சீனியை" போய் சர்க்கரைன்னு சொல்றான்...

நமக்கு அங்கன செட்டிகுளம் பக்கத்துல "ஒருமரக்கா வெர(த)ப்பாடு" கெடக்கு.

"அப்பயே" அல்லது "அந்தானிக்கு" அங்க வர வேண்டியதுதானே...

"திண்(ட்)டு" மேல நின்னு பாருல.

இவனோட ரொம்ப "நொம்பலமா" அல்லது "ரோதனையா" போச்சடா...

அவ்வோ வீடு பெரிய "கொட்டாரம்" கணக்கல்லா இருக்கும்...

பொட்டபிள்ளைக்கு என்ன சத்தமா "சிரிப்பாணி" வேண்டிக் கெடக்குங்கேன்?

தப்பு பண்ணுனா "மாப்பு" ன்னு ஒரு வார்த்தை சொல்றதுல ஒனக்கு என்னடே சங்கடம்?

அவளுக்கு "தூரம்". அதான் "பொறத்தால" உட்காந்திருக்கா...

ஒனக்கு அவனுககூட என்னல "சோலி" வேண்டிக்கெடக்கு? அவனுக கூட சேராதன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...

ரொம்ப பேசுன, மவன "சங்க அறுத்துருவேன்."

அவன் சரியான "மண்டைக்" கணம் பிடிச்ச பயலாச்சே அண்ணாச்சி...

எதித்துப் பேசுனாம்னா அந்தால "செவுட்டுல" ரெண்டு இளக்கு இளக்கலாம்னு தோணுச்சு...

நேத்திக்கு முருகன் வயல்ல நெல் அறுப்பு. நெல்லே கம்மின்னே. அவ்வளவும் "சாவி"..

அந்த மரத்து "மூ(ட்)டு"ல, ஒண்ணுக்கு இருக்கப் போனா அங்க மூடு கணக்கவே சரியான சாரைப்பாம்பு ஒண்ணு பார்த்தேண்ணே...

அக்னி "வெக்க" ஆளை சாச்சுப்புடும்னு சும்மாவா சொன்னாக... என்னா "வேக்காடு..."

அவன் சரியான "சூனியக்காரப்"பயலால்லா இருக்கான்...

இதையெல்லாம் தாண்டி, அவன் சரியான "மஞ்சமாக்கான்". "மேப்டியான்" என்ன சொல்லுதான்? சுத்த "லேக்காவால்லா" இருக்கான்... 

"அண்ணாச்சி" 
"ஆச்சி" 
"அத்தான்" "கொழுந்தியா", "மதினி", 
"சகலப்பாடி" போன்ற உறவு முறைகளை அழைக்கும் விதங்களும் வித்தியாசமானவை...

"சவத்தெளவு" ஒரு மண்ணும் வெளங்கல...

திருநெல்வேலிக்கென்றே இன்னும் பல சிறப்பு சொற்கள் உள்ளன...

நெல்லை பா.சுரேஷ் முருகன்®

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...