Tuesday, September 13, 2016

காவேரி ....

காவேரி ....
காவேரியில் இருந்து பெங்களூரில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுக்கப்படுகிறது..

4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்பட இருப்பதற்கு 7 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்நாடகம் தண்ணீரை தனியார் மயமாக்கிய முன்னனி மாநிலம்.

பெங்களூரில் தண்ணீர் தனியார் மயத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு வெகுநாட்களாகிறது, மைசூர் தனியார் தண்ணீர் திட்டம் வெகுமக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டொரு வருடத்திற்கு முன் அமெரிக்க த்ண்ணீர் விநியோக நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அதிகாரிகள் கர்நாடக முதல்வரை நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்யபப்ட்டது. 

உலக வங்கியும், ஐ.எம்.எஃபும் பின்னிருந்து இயக்குகின்றன.

6.1 கோடி கன்னட மக்களுக்கான அணை நீர் சேமிப்பின் கொள்ளளவு 704 டி,எம்.சி அதே நேரம் 7.4 கோடி தமிழகத்தின் மக்கள் தொகைக்கான அணை நீர் கொள்ளளவு 190 டி.எம்.சி.... இதில்50% காவேரியில் கிடைக்கிறது... கர்நாடகத்தில் ஏழில் ஒரு பங்கு மட்டுமே காவேரியிலிரிந்து கிடைக்கிறது.... 100 டிஎம்.சியில் 2 கோடி தமிழனுகான குடிநீர் , விவசாய நீர் கிடைக்கிறது. அதாவது மூன்றில் ஒரு பங்கு தமிழக மக்களுக்கு கிடைக்கிறது...
ஏன் சண்டையிடுகிறோம் 
என்று தெரிகிறதா....
எதற்காக என்று புரிகிறதா.....
யாரால் என்பதை உணரமுடிகிறதா....

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...