Saturday, September 17, 2016

காவிரி ;

காவிரி ;
............
காவிரி அடாவடி கர்நாடக போராட்டத்தில் பங்கெடுத்த விவசாயிகள் முன்வைத்த காரணம் இதுதான். “காவிரியைச் சுற்றியுள்ள நான்கு அணைகளிலும் மொத்தம் 57 டி.எம்.சி  தண்ணீர்தான் உள்ளது. இதில், 9 டி.எம்.சி, நிரந்தரச் சேமிப்பிலும்... 3 டி.எம்.சி நீர் ஆவியாதலிலும்போக மீதம் இருக்கும் நீரைப் பங்கிட்டுத் தமிழகத்துக்குத் தந்துவிட்டால் எங்களுக்குக் குடிக்க மட்டுமே நீர் இருக்கும். 15 டி.எம்.சி  நீர் தேவைப்படும் எங்கள் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கும். நீரின் தேவையை மாநில அரசு எப்படிச் சமாளிக்கும்?” என்பதே.

‘‘பெங்களூருவின் பெரும் பிரச்னை தண்ணீர்தான்!’’

மும்பையைச் சேர்ந்த இந்தியா ஸ்பெண்டிங் நிறுவனம் நடத்தியுள்ள சர்வே, மாண்டியா மாவட்ட மக்களுக்கான பதிலைத் தருகிறது. சர்வேயின்படி, ‘‘காவிரியிலிருந்து கர்நாடக எல்லை நகரமான பெங்களூருவுக்கு நாளொன்றுக்குத் திறந்துவிடப்படும் 1,400 மில்லியன் லிட்டர் நீரில், 600 மில்லியன் லிட்டர் அளவுக்கு அந்த நகரம் வீணடிக்கிறது. இவை, பெரும்பாலும் நீர் எடுத்துச்செல்லும் பெரும் குழாய்களிலும், சிறு குழாய்களிலும் ஏற்படும் பிரச்னையாலேயே ஏற்படுகிறது. அதாவது, மொத்தம் அந்த நகரத்துக்கு திறந்துவிடப்படும்  19 டி.எம்.சி  நீரில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் எந்தவித உபயோகத்திலும் இல்லாமல் பாழாகிறது’’ என்கிறது அந்த சர்வேயின் இறுதி அறிக்கை. இந்த சர்வே, கடந்த ஐந்து வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீணடிப்பைக் குறைத்தாலே மாண்டியா மாவட்டம் கேட்கும் 15 டி.எம்.சி  நீர் அல்லது நம் மாநிலம் இப்போது கேட்கும் அதே 15,000 கனஅடி நீருக்கான பதிலும் கிடைக்கலாம்

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...