Wednesday, September 7, 2016

விவசாயி செல்வராஜ் தற்கொலை

விவசாயி செல்வராஜ் தற்கொலை
-------------------------------
அதிமுக அரசு பொறுப்பு ஏற்றபோது, கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள 5780 கோடி ரூபாய் அளவு பயிர்க்கடன் நடுத்தர, குறுகிய, நீண்ட கால கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிப்பு செய்தித்தும் ஆனால் நடை முறைக்கு வர வில்லை 
2.5 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்து இருப்போர் சிறு விவசாயிகள் என்றும், 2.5 ஏக்கர் வரை வைத்து இருப்போர் குறு விவசாயிகள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறு, குறு விவசாயிகள் என்று பராபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவுக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்கவில்லை.

கூட்டுறவுச் சங்கங்கள் பயிர்க் கடன் வழங்க ஆறு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதி அமைச்சர் 2016 -17 நிதி நிலை அறிக்கையில் தெரிவித்து இருந்தார். ஆனால், நடைமுறையில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாத நிலைமைதான் தொடர்கிறது என்பதை மயிலாடுதுறை விவசாயி செல்வராஜ் தற்கொலை சொல்லுகிறது .

தஞ்சைசோழகன்குடிகாட்டைச்சேர்ந்த விவசாயி பாலன், கோட்டாக் மகிந்திரா தனியார் வங்கியில் வாங்கிய கடன் நிலுவையை வசூலிக்கச் சென்ற வங்கி  நிர்வாகத்தினரும், கவல்துறையினரும் விவசாயி பாலனை அடித்து உதைத்து இழுத்துச் சென்ற கொடுமை கண்டு தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு எழுந்தது.

அரியலூர் மாவட்டத்தில் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர், சோழமண்டலம் நிதி நிறுவனம் என்ற தனியாரிடம் கடனுக்கு டிராக்டர் வாங்கி விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தார். மொத்தம் 7 இலட்ச ரூபாய் பெற்ற கடனில், 5 இலட்சம் ரூபாய் திருப்பிச் செலுத்திவிட்ட நிலையில், நிதி நிறுவன ஊழியர்கள் பாக்கித் தொகையைச் செலுத்துமாறு நிர்பந்தம் செய்தது மட்டுமின்றி, அவரைத் தாக்கிவிட்டு டிராக்டரையும் பறிமுதல் செய்து கொண்டு போய்விட்டனர். உளைச்சலுக்குன விவசாயி அழகர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கும்பகோணத்தில் கடன் தொல்லையால் தனசேகர் என்ற விவசாயி தற்கொலை.
விழுப்புரம் ,திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்ற விவசாயியும், அவரது மனைவி பழனியம்மாளும் விளைபொருளுக்குச் சரியான விலை கிடைக்கரமல் நட்டம் ஏற்பட்டதால் கடந்த மே மாதம் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செது கொண்டனர்.

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது. மயிலாடுதுறையில் கூட்டுறவு வங்கிக் கடன் கிடைக்காமல், தற்கொலை செய்து கொண்டார்  விவசாயி செல்வராஜ்

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...