Sunday, September 11, 2016

வரலாற்றை ஒதுக்கக்கூடாது

கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களான காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், கொற்கை வரலாற்றில் இடம்பெற்றன. வரலாற்று தொடக்க காலத்தில் பிளைனி, தாலமி, பெரிப்ளூஸ் என்ற நூலின் ஆசிரியர்  ஆகிய மேலை நாட்டினர் தமிழகத்தைக் குறித்து பல செய்திகளைத் தந்துள்ளனர். தமிழ் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் செங்கடல் பகுதியில் கிடைத்துள்ளதாக செய்திகளும் வந்துள்ளன. இந்த பண்டைய துறைமுகங்கள் மூலமாக வணிக வியாபாரங்கள் மேலை நாட்டோடு செழிப்பாக நடந்ததற்கு அவ்வப்பொழுது ஆதாரங்கள் கிடைத்தவண்ணம் உள்ளன. மணல்மேல்குடி அருகில் பந்தப்பட்டினம் என்ற ஊரும் இருந்துள்ளது. பந்தர் என்றால் அரபிச் சொல்லுக்கு பண்டகச் சாலை என்று அர்த்தம். பந்தர்ப்பட்டினம் என்ற பெயரில் தஞ்சை மாவட்டம் அதிராமப்பட்டினம் அருகில் சிறிய மீன்பிடித் துறைமுகம் உள்ளது. பேராவூரணி வட்டத்தில் மந்திரிப்பட்டினம் என்று ஒரு ஊர் அழைக்கப்படுகிறது. அதுவும் வரலாற்றில் வணிக ரீதியாக இடம்பெற்ற ஊர் ஆகும். தமிழகத்தின் வணிகத் தொடர்புகள் கிரேக்கத்தோடும் மற்ற மேலை நாடுகளோடு இருந்ததற்கான தரவுகள் மேலை நாடுகளிலேயே கிடைத்து வருகின்றது. இது குறித்தான ஆய்வுகளை மேலும் விரிப்படுத்தவேண்டும். வரலாறு ஒதுககப்படுகின்றது. ஏதோ பொறியியல், மருத்துவம் மட்டும்தான் படிப்பு என்பதும், வரலாறு அவசியமற்றது என்று சிலர் மத்தியில் இருப்பது கண்டனத்துக்குரியது. வரலாறு எதிர்கால வாழ்க்கைக்கு படிப்பினைகளைத் தரும். வெறும் வரலாற்றுச் செய்திகளை சொல்வதோடு மட்டுமல்லாமல் எப்படி பண்படவேண்டும், எப்படி செயல்படவேண்டும், கடந்தகாலத் தவறுகளை தவிர்க்கவேண்டும் என்பதுதான் வரலாறு. வரலாறை ஒதுக்குவது நம்முடைய பாரம்பரியத்தையும் நம்முடைய முன்னோர்களை ஒதுக்குவது போன்றது. வரலாறு நாட்டுக்கு அவசியம். வரலாறை துக்கடாவாக நினைக்கும் பாவனையை விட்டுவிட வேண்டும். வரலாற்றை கலாசாலைகளும் விரிவுபடுத்தி வீரியமான கல்வித்துறையாக மாற்றவும் வேண்டும்.


No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...