Friday, September 2, 2016

காவிரி விவகாரம்

காவிரி விவகாரம் 
----------
காவிரி நீர் கிடைக்காமல் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன; ஆகையால் வாழு... வாழவும் விடு அதாவது மனிதாபிமான அடிப்படையில் காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கலாம்... என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு 50 டி.எம்.சி. நீரை ஏன் திறந்துவிட முடியாது என்று கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகா திறந்துவிடாமல் அடம்பிடித்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கான 50 டி.எம்.சி. காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.
இம்மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயு லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது:
பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக நடுவர் நீதிமன்றம் விரிவாக விவரித்துள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டிய அவசியம் உள்ளது.
அந்த காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை ஏன் கர்நாடகா செயல்படுத்தக் கூடாது? பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உதவ வேண்டியது கர்நாடகா அரசின் கடமை.
தமிழகத்தின் 7 மாவட்டங்கள் காவிரி நீர் கிடைக்காமல் பாதிப்படைந்துள்ளன. ஆகையால் வாழு... வாழவிடு என்ற அடிப்படையில் காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடலாம்.
இரு மாநிலங்களும் பிரச்சனையின்றி சுமுக தீர்வை எட்ட முயற்சிக்க வேண்டும். காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி, 50 டிஎம்சி தண்ணீர் ஏன் தமிழகத்திற்கு வழங்கக்கூடாது?
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு ஏன் காவிரி நீரை திறந்துவிடவில்லை. இரு மாநில மக்களின் ஒற்றுமை மிக அவசியம். காவிரியில் தற்போதைய நிலையில் தமிழகத்துக்கு எவ்வளவு நீரை திறந்துவிட முடியும் என்ற விவரத்தை திங்கள்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...