Monday, September 5, 2016

காவிரி

காவிரி
-------
அணையில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது சம்பா பயிருக்கு எவ்வளவு தேவை என்று கணக்கிடாமல் பொதுவாக 15 டிஎம்சி நீரை தரவேண்டுமென உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது..
மேட்டூர் அணையில் 94 டிஎம்சி வரை அதாவது பத்துலட்சம் கன அடி நீர் தேக்கமுடியும் பதினைந்து டிஎம்சி என்பது .. 11000×15 .. ஒருலட்சத்து அறுபத்தைந்தாயிரம் கனஅடிதான் அணையின் இருப்பையும் சேர்த்தால் கூட 63 டிஎம்சி தான் .. 90 டிஎம்சி இருந்தால் மட்டுமே திறக்கமுடியும் அதுவும் மடை பாசனம் செய்து .. பகிர்ந்தளித்தால் மட்டுமே கடைமடை சம்பா பயிரிடமுடியும்.
தமிழக அரசிற்கு பிரச்சனையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுவிட்டால் போதுமென நினைக்கிறது  இந்தமாதம் 50 டிஎம்சி என கேட்கும் போதே குறைவாக கிடைக்குமென்று அரசுக்கு தெரியாதா.. 
மொத்ததில் கர்நாடகம் பாசன  வயல்பரப்பை அதிகரித்துக்கொண்டே போவதை சுட்டிகாட்டவே இல்லை.. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் கர்நாடகம் 
இனியும் பாசன வயல்பரப்பை அதிகரிக்ககூடாது என தெளிவாக சொல்லியிருப்பதை மீறியிருக்கிறது கால்வாய்கள் ஆறுகளைபோல மாற்றப்பட்டிருக்கிறது அதிக நீரை சேமித்து வைத்து ஏதுவாக திட்டமிட்டு கர்நாடகம் செயல்படுகிறது..
தமிழக அரசிற்கு நதிநீர்ப்பற்றிய தெளிவான பார்வை இல்லை.தமிழக அரசால் டெல்டா மக்கள் அவதிபடுகிறார்கள் ..
இந்த வருடம் சம்பா இல்லை..
இன்று (செப்டம்பர் 5) தமிழக அரசு தொடுத்த வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம், ‘காவிரியில் தினமும 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடக மாநிலம் தண்ணீர் திறந்துவிட வேண்டும்; தமிழகம் காவிரி கண்காணிப்புக் குழுவை அணுகி, தமது கோரிக்கைகளை மூன்று நாட்களில் அளிக்க வேண்டும்; கர்நாடக அரசின் நிலையையும் கேட்டறிந்து காவிரி கண்காணிப்புக் குழு நான்கு நாட்களில் ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது. 

காவிரியில் நீர் இன்றி தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகும்போது,  தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடி தண்ணீர் பெறுவதற்கு போராட வேண்டிய நிலைமைதான் இன்னும் தொடர்கிறது. பிப்ரவரி 5, 2007 இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரு அமைப்புகளை மத்திய அரசு அமைத்து இருந்தால் தமிழகம் தொடர்ந்து போராட்ட வேண்டிய நிலை.
காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. நீரைப் பெறுவதற்கு கர்நாடக மாநிலத்தை வழிக்குக் கொண்டு வரவும், நீர்ப் பற்றாக்குறை காலங்களில் முறையான பங்கீட்டை உறுதி செய்யவும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகிய இரண்டு அமைப்புகளை சட்டப்படி மத்திய அரசு உடன் அமைக்க வேண்டும் .
                                                                                           #ksradhakrishnanposting

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...